அஸ்மத் யூசுப் பாபா என்கிற ஸ்ரீ அஸ்மத் சுவாமிகள்
ஸ்ரீ அஸ்மத் சுவாமிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வாழ்ந்து பல எண்ணற்ற அருளாடல்களை நிகழ்த்திய ஒரு மாபெரும் சித்த புருஷர் ஆவார்.ஸ்ரீ அஸ்மத் சுவாமிகளின் அருள் வரலாறு பல அதிசயங்களை கொண்டது. சுவாமிகள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்.பொதுவாகவே சித்தர்கள் மஹான்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்குள்ள மக்கள் புண்ணியம் செய்தவர்களாய் இருப்பார்கள். அந்த வகையில் சுவாமிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுப்ரமணியபுரம் என்னும் பகுதிகளில் வாழ்ந்தார்கள். சுவாமிகள் மதங்களை கடந்தவர்கள்.ஏனெனில் சுவாமிகள் வாழ்ந்து பல சித்தாடல்கள் நிகழ்த்தியது சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோவிலில் தான் நிகழ்த்தினார்கள்.ஸ்ரீ அஸ்மத் சுவாமிகள் அஷ்டமா சித்திகள் கைவரப்பெற்றவர்கள்.பல நேரங்களில் சுவாமிகளை பக்தர்கள் பின் தொடர்ந்து சென்று வழிபடுவார்கள்.அத்தகைய நேரங்களில் சுவாமிகள் திடிரென்று மறைந்து விடுவார்கள். ஆனால் சற்றுநேரத்தில் ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோவிலில் அமர்திருப்பார்கள். சுவாமிகள் வரும் பக்தர்களிடம் பல மொழிகளில் உரையாடுவார்கள்.அஸ்மத் சுவாமிகள் விரும்பி அமர்ந்திருந்த அக்கோவில் ஆற்றல் நிறைந்த கோவிலாக விளங்கியது. அக்கோவிலில் வேண்டி வழிபடும் பக்தர்களின் கனவில் சென்று அவ்வேண்டுதல்களை நிறைவேற்றிவிடுவார்கள். பல பக்தர்களிடம் கோவிலில் வேண்டிக்கொண்டிருக்கும் போதே சுவாமிகள் சங்கேத பாஷையில் அல்லது பரிபாஷையில் கூறி வேண்டுதல்களை நிறைவேற்றிவிடுவார்கள். அஸ்மத் சுவாமிகள் பல நேரங்களில் நவசக்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள தெய்வங்களிடம் தமது நேத்திரங்களாலும், செய்கையிலாலும் பேசிக்கொண்டிருப்பார்கள்.அத்தகைய சமயங்களில் பணிவுடன் சென்று வணங்கவேண்டும். சுவாமிகள் பல நேரங்களில் ஆக்ரோஷ நிலையில் இருப்பார்கள் அகங்காரதோடும் பேராசையோடும் வருபவர்களை கடுமையான சொற்களால் திட்டி விரட்டிவிடுவார்கள். இதற்கு பல உச்சநிலை அதிகாரிகள் கூட விதிவிலக்கல்ல. சுவாமிகள் சில நேரங்களில் ஏழை வியாபாரிகளிடம் சென்று காசு கேட்பார்கள். அவர்கள் எது கொடுத்தாலும் அன்புடன் வாங்கிக்கொள்வார்.ஆனால் பலர் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கமாட்டார்கள்.அஸ்மத் சுவாமிகள் வாழ்ந்து அருள் செய்த திருக்கோவிலான கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன அச்சமயம் திருப்பணிகளில் பல தடைகள் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. கோவில் நிர்வாகிகள் சுவாமிகளிடம் வந்து வணங்கி வேண்டவே 'அருமையாக நடைபெறும் 'என்று அருளினார்கள். பின்னர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.அஸ்மத் சுவாமிகள் தன் அன்பர்களிடம் ஷீர்டி சாய் பாபா பற்றி சிலாகித்து கூறி ஷீர்டி சென்று வணங்கச்சொல்வார்கள். இவ்வாறு வாழ்ந்த சுவாமிகள் தான் சித்தி அடையவிருப்பதை தன் நெருங்கிய பக்தர்களிடம் நேரடியாகவும் பரிபாஷையிலும் கனவில் மூலமாகவும் முன்கூட்டியே தெரியப்படுத்தினார்கள் .அஸ்மத் சுவாமிகள் சித்திரை மாதம் ரோஹிணி நட்சத்திரம் அட்சய திரிதியை அன்று சித்தி அடைந்தார்கள்.அஸ்மத் சுவாமிகள் வருடாந்திர குருபூஜை ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெரும். ஸ்ரீ அஸ்மத் சுவாமிகளை வணங்கி வழிபட்டு குருவருள் பெருவோம்...
No comments:
Post a Comment