ஸ்ரீலஸ்ரீ சித்தர் சிவலிங்க சுவாமிகள் 1910 ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் பொள்ளாச்சி அருகேயுள்ள கள்ளிப்பாளையம் என்னும் சிற்றூரில் தங்கமுத்துக் கவுண்டர் - பழனி அம்மாள் தம்பதிகளுக்குத் தவப்புதல்வனாய் அவதரித்தார்கள்.
கந்தசாமிக் கவுண்டர் என்னும் எனும் இயற்பெயருடன் வளர்ந்து வந்த அவர் தன் இளமைக் காலம் தொட்டே இறைசிந்தனை மிக்கவராய் பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரில் இருந்த சித்த பெருமானாராம் ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சுவாமிகளைக் குருவாகக் கொண்டு ஆன்மீகத்தில் வேரூன்றத் தொடங்கினார்கள்.
மனை மாண்பு:-
🌸☘️🌸☘️🌸☘️
ஸ்ரீலஸ்ரீ சித்தர் சிவலிங்க சுவாமிகள் தனது பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க மாசாத்தாள் எனும் மங்கையை மணந்து இல்லறமே நல்லறமாக் கொண்டு விளங்கி, மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் இரு பெண் குழந்தைகளுக்குத் தந்தையாகிய சுவாமிகள் மனையற மாண்பு கண்டார்கள்.
பஞ்சலிங்க அருவி:-
🌺🍃🌺🍃🌺🍃🌺🍃
ஸ்ரீலஸ்ரீ சித்தர் சிவலிங்க சுவாமிகள் திருமூர்த்தி அருவியின் மேல் உள்ள பஞ்ச லிங்கத்தின் அருகே பல ஆண்டுகள் தவம் இயற்றி இறுதியில் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள கோலார்பட்டி என்னும் கிராமத்தில் உள்ள கந்தகிரி மலைமீது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து அங்கேயே தங்கி தவமியற்றி தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்கள்.
தவமே சிவம்:-
🔱🍃🔱🍃🔱🍃
"சிவனருளால் சிலர் தேவரும் ஆவர்" எனும் திருமூலர் வாக்கிற்கிணங்க சிவனருளால் "மகரிஷி சித்தர் சிவலிங்கசாமி" எனும் திருநாமமும் பெற்று கொங்கு மண்ணில் 103 ஆண்டுகள் வாழ்ந்து தன் வாழ்நாளில் பாதிக்கு மேலாக 60 ஆண்டுகள் தவமே சிவமாக, சிவமே தவமாகத் தவ வாழ்வை மேற் கொண்டு வாழ்ந்த மகான் ஆவார்கள்.
சிவமே தவம்:-
🍁🍀🍁🍀🍁🍀
மகரிஷி சித்தர் சிவலிங்க சுவாமிகள் தன் தவ வலிமையால் 50க்கும் மேற்பட்ட ஆலயங்களைக் கட்டி ஜோதி ஸ்வரூபனான சிவபெருமானுக்கு 27 சிவாலயங்களை உருவாக்கி அமைத்து சுவாமிகள் சிவ புண்ணியத்தைப் பெற்றார்கள்.
ஜீவ முக்தி:-
💥💥💥💥💥
சுவாமிகள் 2015 ஆம் ஆண்டு தனது 103 ஆம் வயதில் ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பேரின்பப் பெரும் வீடுபேற்றை எய்தி சிவ ஞான ஜோதியில் இரண்டறக் கலந்தார்கள்.
ஜீவசமாதி:-
🌟🔥🌟🔥🌟
🪷மனிதர்கள் தங்கள் பிறவிப்பயனால் வதைபடும் வல்வினைகள், ஜென்ம சாபங்கள், பாபங்கள், தீராத நோய்கள், கிரக தோஷங்கள் போன்ற தீய வினைகளைத் தீர்க்கும் ஜீவ ஆலயங்களாக ஜீவசமாதிகள் திகழ்கின்றன. மேலும் சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயங்களுக்கு இறை ஆற்றல் அதிகம் உண்டு.
🪷 நாளை 08.08.2022 திங்கட்கிழமை நடைபெறும் மகரிஷி சித்தர் சிவலிங்க சுவாமிகளின் குருபூஜையில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு "குருவழியாய குணங்களில் நின்று கருப்பழியாய கணக்கினை அறுத்திடுவோம்"
🍃 குருவருளோடு, திருவருளையும் பெற்றிடுவோம்!🍃
அமைவிடம்:-
🔆🔆🔆🔆🔆🔆
🔥அருள் ஜோதிலிங்கேஷ்வரர் திருக்கோவில்,
கந்தகிரி மலை, கோலார்பட்டி சுங்கம்
பொள்ளாச்சி
தொடர்பு கொள்ள:-
திரு.கோபால்சாமி,
செல் :- 90957 62375 *🪷மகரிஷி சித்தர் சிவலிங்க சுவாமி🪷
தவப் புதல்வன்:-
No comments:
Post a Comment