ஓம் ஸ்ரீ சத்குரு ஆறுமுகசாமி
ஶ்ரீஆறுமுக சித்தா் கொல்லம் ஆண்டு 959 (கி.பி.1784) சித்ரா பௌர்ணமியில், சுவாதி *நட்சத்திரத்தில் பிறந்தது ஆண் குழந்தை. முருகன் கருணையால் பிறந்த குழந்தை ஆதலால், ஆறுமுகனின் பெயரையே வைத்தனர். அந்தக் குழந்தையே, நூறு வயது பூவுடலுடன் இருந்து, சித்துகள் பல புரிந்து, புத்தரைப் போல், வள்ளலாரைப் போல் பௌர்ணமியில் தோன்றி பௌர்ணமியிலேயே ஸித்தியான *சித்தபுருஷர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள். சுவாமிகள் நூறு வயதை எட்டியதும்(கி.பி.1884), தாம் வந்த பணி நிறைந்துவிட்டதை உணர்ந்து, சமாதிக்கு தயாரானார். ஆனி மாதம் அனுஷம் கூடிய பௌர்ணமி நாளில், தான் எப்போதும் அமரும் நாற்காலியில் அமர்ந்தவாறே, சமாதி நிலை அடைந்தார். சமாதியில் சிவலிங்கப் பிரதிஷ்டையும் ஆனது. தற்போது மூன்று சமாதிக்கொண்ட கோயிலாகக் காட்சி தருகிறது. ▪️👉அமைந்துள்ள இடம் :தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் பழைய (காளீஸ்வரி) சினிமா தியேட்டர் அருகில் அதை ஒட்டி, சாலையில் வலப்புறம் ஆற்றுப் பாலத்துக்கு முன்னதாக ஒரு சிறிய சிமென்ட் பாததையில் சென்றால் ஶ்ரீஆறுமுக சித்தரின் ஜீவசமாதி ஆலயத்தை தரிசனம் செய்யலாம்
No comments:
Post a Comment