கேரளா நாட்டில் தோன்றி இந்த புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விஜயம் செய்து உயர் ஞானம் எய்தி முனிவர்கட்கெல்லாம் சிகரமாய் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா நார்தமலைக்கு கீழ்புறமுள்ள பொம்மாடிமாலையில் சமரச சாது சன்மார்க்க சத்தியாகிரக ஞான தெய்வராஜ சபை என்னும் மடாலயத்தை அமைத்துக்கொண்டு நடமாடும் தெய்வமாய் விளங்கி கொண்டிருக்கும் ஸ்ரீ அரங்கமலை சித்தராகிய பிரம்ம ஸ்ரீ அமிர்தானந்த சுவாமிகளின் ஜீவசமாதி பொம்மாடி மலையில் அமைந்துள்ளது.
இறைவன் குடியிருக்கும் ஆலயமாகிய மனித உடலுக்கு வயது வரம்பு கிடையாது என்றும் மதிநுட்பத்தால் தன் உடலை அழிவின்றி காப்பாற்றி கொள்ளலாம் என்றும் 156 ஆண்டு வரை தானே முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர் நமது சுவாமிகள்.
சுவாமிகளின் மகா குரு பூஜை வருடாவருடம் புரட்டாசி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் வெகு விமர்சியாக நடை பெற்றுக்கொண்டிருகிறது. இதில் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, மகா அலங்காரம், மகா தீபாராதனையும் மதியம் அன்னதானமும் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
திருச்சியிலிருந்து சுமார் 35 கி.மீ ல் அல்லது கீரனூரில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் பொம்மாடி மலை (Bommadi Malai) அமைந்துள்ளது.
No comments:
Post a Comment