Monday, 5 September 2022

அஸ்மத் யூசுப் பாபா என்கிற ஸ்ரீ அஸ்மத் சுவாமிகள்

 அஸ்மத் யூசுப் பாபா என்கிற ஸ்ரீ அஸ்மத் சுவாமிகள்


ஸ்ரீ அஸ்மத் சுவாமிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வாழ்ந்து பல எண்ணற்ற அருளாடல்களை நிகழ்த்திய ஒரு மாபெரும் சித்த புருஷர் ஆவார்.ஸ்ரீ அஸ்மத் சுவாமிகளின் அருள் வரலாறு பல அதிசயங்களை கொண்டது. சுவாமிகள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்.பொதுவாகவே சித்தர்கள் மஹான்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்குள்ள மக்கள் புண்ணியம் செய்தவர்களாய் இருப்பார்கள். அந்த வகையில் சுவாமிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுப்ரமணியபுரம் என்னும் பகுதிகளில் வாழ்ந்தார்கள். சுவாமிகள் மதங்களை கடந்தவர்கள்.ஏனெனில் சுவாமிகள் வாழ்ந்து பல சித்தாடல்கள் நிகழ்த்தியது சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோவிலில் தான் நிகழ்த்தினார்கள்.ஸ்ரீ அஸ்மத் சுவாமிகள்  அஷ்டமா சித்திகள் கைவரப்பெற்றவர்கள்.பல நேரங்களில் சுவாமிகளை பக்தர்கள் பின் தொடர்ந்து சென்று வழிபடுவார்கள்.அத்தகைய நேரங்களில் சுவாமிகள் திடிரென்று மறைந்து விடுவார்கள். ஆனால் சற்றுநேரத்தில் ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோவிலில் அமர்திருப்பார்கள். சுவாமிகள் வரும் பக்தர்களிடம் பல மொழிகளில் உரையாடுவார்கள்.அஸ்மத் சுவாமிகள் விரும்பி அமர்ந்திருந்த அக்கோவில் ஆற்றல் நிறைந்த கோவிலாக விளங்கியது. அக்கோவிலில் வேண்டி வழிபடும் பக்தர்களின் கனவில் சென்று அவ்வேண்டுதல்களை நிறைவேற்றிவிடுவார்கள். பல பக்தர்களிடம் கோவிலில் வேண்டிக்கொண்டிருக்கும் போதே சுவாமிகள் சங்கேத பாஷையில் அல்லது பரிபாஷையில் கூறி வேண்டுதல்களை நிறைவேற்றிவிடுவார்கள். அஸ்மத் சுவாமிகள் பல நேரங்களில் நவசக்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள தெய்வங்களிடம் தமது நேத்திரங்களாலும், செய்கையிலாலும் பேசிக்கொண்டிருப்பார்கள்.அத்தகைய சமயங்களில் பணிவுடன் சென்று வணங்கவேண்டும். சுவாமிகள் பல நேரங்களில் ஆக்ரோஷ நிலையில் இருப்பார்கள் அகங்காரதோடும் பேராசையோடும் வருபவர்களை கடுமையான சொற்களால் திட்டி  விரட்டிவிடுவார்கள். இதற்கு பல உச்சநிலை அதிகாரிகள் கூட விதிவிலக்கல்ல. சுவாமிகள் சில நேரங்களில் ஏழை வியாபாரிகளிடம் சென்று காசு கேட்பார்கள். அவர்கள் எது கொடுத்தாலும் அன்புடன் வாங்கிக்கொள்வார்.ஆனால் பலர் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கமாட்டார்கள்.அஸ்மத் சுவாமிகள் வாழ்ந்து அருள் செய்த திருக்கோவிலான கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன அச்சமயம் திருப்பணிகளில் பல தடைகள் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. கோவில் நிர்வாகிகள் சுவாமிகளிடம் வந்து வணங்கி வேண்டவே  'அருமையாக நடைபெறும் 'என்று அருளினார்கள். பின்னர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.அஸ்மத் சுவாமிகள் தன் அன்பர்களிடம் ஷீர்டி சாய் பாபா பற்றி சிலாகித்து கூறி ஷீர்டி சென்று வணங்கச்சொல்வார்கள். இவ்வாறு வாழ்ந்த சுவாமிகள் தான் சித்தி அடையவிருப்பதை தன் நெருங்கிய பக்தர்களிடம் நேரடியாகவும் பரிபாஷையிலும் கனவில் மூலமாகவும் முன்கூட்டியே தெரியப்படுத்தினார்கள் .அஸ்மத் சுவாமிகள் சித்திரை மாதம் ரோஹிணி நட்சத்திரம் அட்சய திரிதியை அன்று சித்தி அடைந்தார்கள்.அஸ்மத் சுவாமிகள் வருடாந்திர குருபூஜை ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெரும். ஸ்ரீ அஸ்மத் சுவாமிகளை வணங்கி வழிபட்டு குருவருள் பெருவோம்...

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்

 ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்

ஆற்றங்கரையில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து ஆற்றில் மண் அள்ளியபோது அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டது. அப்போது கண்விழித்த அவர் எதுவும் நடக்காதது போல எழுந்து சென்றார். இனி.மூன்று மாதங்கள் வரை மணலில் புதைந்திருந்த காலத்திலும் சமாதி நிலையில் இருந்து விடுபடாமல் சதாசிவ பிரம்மேந்திரர் இருந்த செய்தி அவருடைய குருவான பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகளை எட்டிய போது ‘அப்படியொரு *நிலையை எப்போது என்னால் எட்ட முடியும்’ என்று வியந்தாராம்.
குருவையே அப்படி வியக்க வைத்த சதாசிவ பிரம்மேந்திரர் எத்தனையோ சக்திகளைப் பெற்றிருந்த போதும் அதை விளம்பரப்படுத் திக் கொள்ளவோ, தன்னை ஒரு மகானாகக் காட்டிக் கொள்ளவோ எப்போதும் முயன்றதில்லை. அவருடைய அந்த சக்திகள் இயல்பாக தேவைப்பட்ட *இடங்களில் வேலை செய்தன. அதற்கு சம்பந்தப்பட்டவர் போலவே அவர் காட்டிக் கொண்டதில்லை.
ஒரு முறை ஒரு தானியக் குவியலில் அமர்ந்தவர் அப்படியே சமாதி நிலையில் லயித்திருக்க ஆரம்பித்து விட்டார். அந்த விவசாயி அவரை தானியம் திருட வந்த கள்வன் என்று நினைத்து ஒரு கம்பால் அவரை அடிக்க ஓங்கினான். ஆனால் அவன் கை அப்படியே நின்று விட்டது. அவர் விழித்து அவனைப் பார்த்த போது தான் அவனால் கையைக் கீழே இறக்க முடிந்தது. அவன் அவரைத் திருடன் என நினைத்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்பதற்கு முன் அவர் அங்கிருந்து போயுமிருந்தார்.ஒரு முறை திருநெல்வேலி யில் இருந்து குற்றாலத்திற்கு அவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். வழியில் சிலர் வண்டியில் மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நெடிய கட்டை போல் அவர் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களில் ஒருவன் அவரை அழைத்து கட்டைகளை எடுத்துத் தரச் சொன்னான். எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் அவரும் எடுத்துத்தந்து அந்த மரக்கட்டைகளை வண்டியில் ஏற்றுவதற்கு உதவினார். வேலை முடிந்த பின் அவர் மறுபடி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.அந்தக் கயவர்கள் தங்களுக்கு உதவிய ஒருவர் என்கிற நன்றியும் இல்லாமல் ‘இந்தக் கட்டை எங்கே போகிறது?’ என்று கூவி ஏளனமாகக் கேட்டார்கள்.சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றும் சொல்லவில்லை.ஆனால் வண்டியில் ஏற்றி இருந்த கட்டைகள் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. அப்போது தான் அவர்களுக்கு அவர் ஒரு யோகி என்பது புரிந்தது.
இன்னொரு சமயம் ஒரு பண்டிதன் அவருடைய பூர்வாங்கம் தெரியாமல் அவருக்குக் கிடைக்கும் புகழைக் கண்டு பொறாமைப்பட்டான். பல சமஸ்கிருத நூல்களைக் கற்றுத் தேர்ந்திருந்த அவன், அவர் வேத நூல்கள் பற்றிய பரிச்சயமே இல்லாதவர் என்றும், அவர் வாழும் வாழ்க்கை வேதங்களின் அங்கீகாரம் இல்லாதது என்றும் அவரிடம் நேரில் வந்து குற்றம் சாட்டினான்.சதாசிவ பிரம்மேந்திரர் அப்போது அங்கே அருகில் இருந்த ஒரு சலவைத் தொழிலாளி நாக்கில் சில எழுத்துக்கள் எழுத, படிப்பறிவில்லாத அவர் வேத மந்திரங் களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.அந்த மந்திரங்கள் ஒரு ஞானியின் வாழ்க்கை முறையை விவரிப்பதாக இருந்தன. அவை அனைத்தும் *சதாசிவ பிரம்மேந்திரரின் வாழ்க்கையை ஒத்ததாகவும் இருந்தன.
இப்படி *அவருடைய சக்திகளை உணர்ந்தவர்கள் சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, *அரசர்களும் தான்.ஒரு முறை அவர் பயணத்தின் போது வழியில் ஒரு நவாபின் *(சில குறிப்புகள் ஒரு படைத்தலைவன் என்கின்றன) அந்தப்புரத்துக்குள் புகுந்து விட்டார். ஆடைகள் இல்லாத ஒரு பித்தர் என்று அவரை எண்ணிய அந்தப்புர பெண்மணிகள் அலறி அடித்துக் கொண்டு ஒதுங்கினார்கள். ஆனால் அவரோ சுற்றுப்புற சூழலே உணராமல் அந்தப்புரத்தைக் கடந்து கொண்டு இருந்தார். இந்தத் தகவல் நவாபின் செவிகளை எட்டியது.
கோபம் கொண்ட நவாப் அந்தப் பித்தனின் கையை வெட்டிக் கொண்டு வரும்படி சிப்பாய்களிடம் ஆணை இட்டான். சிப்பாய்கள் விரைந்து வந்து சதாசிவ பிரம்மேந்திரரின் ஒரு கையை வெட்டினார்கள். கை வெட்டப்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்த போதும் சிறிதும் சலனப்படாத அவர் சென்று கொண்டே *இருந்தார். அந்தச் செய்தியும் நவாபின் செவிகளை எட்டியது.
திகைத்துப் போன நவாப் அந்த வெட்டப்பட்ட கையை எடுத்துக் கொண்டு ஓடி அவரை அடைந்து மன்னிப்பு கேட்டான்.
அந்தக் கையை அவனிடம் இருந்து வாங்கி மீண்டும் பொருத்திக் கொண்டு அவர் போய்க் கொண்டே இருந்தார்.
கையை வெட்டியதற்குக் கோபம் கூடக் கொள்ளாத அந்த யோகி சாதாரண *மனிதர்களின் உணர்ச்சிகளை என்றோ கடந்திருந்தார் என்றல்லவா இதிலிருந்து நமக்குப் புரிகிறது.கி.பி.1730 முதல் 1768–ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மன்னராக இருந்த விஜய ரகுநாத தொண்டைமான் *சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து கவுரவிக்க விரும்பினார். தன் ஆட்சி எல்லைக்குள்ளே இருந்த அந்த யோகியைத் தானே நேரில் சென்று அழைக்கவும் செய்தார்.
மவுன விரதம் மேற்கொண்டிருந்த சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றுமே பேசாமல் *அமைதியாக இருந்தார். அவர் அப்படி அரண்மனைக்கு எல்லாம் வர மாட்டார் என்பதைப் புரிந்து கொண்ட மன்னர் ஆன்மிகம் குறித்த கேள்வி ஒன்றை அவரிடம் கேட்டார். *அதற்காவது அவரிடம் இருந்து பதில் வந்தால் அது தனக்கு அவரது ஆசீர்வாதமாக இருக்கும் என்று மன்னர் எண்ணினார்.
சதாசிவ பிரம்மேந்திரர் மணலில் *ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தைப் பதிலாக எழுதி விட்டுச் சென்றார்.
விஜய ரகுநாத தொண்டைமான் தன் *அங்கவஸ்திரத்தில் அந்த மணலைக் கட்டி எடுத்துக் கொண்டு சென்றுஅரண்மனையில் பூஜித்து வந்ததாகச் சொல் கிறார்கள்.
சதாசிவ பிரம்மேந்திரரின் அருளைப் பெற்ற இன்னொரு மன்னர் சரபோஜி மன்னர். அவரது அமைச்சராக இருந்த மல்லாரி பண்டிட் என்பவர் சதாசிவ பிரம்மேந்திரரைச் சந்தித்து மன்னருக்கு மகன் பிறக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும், *அவரும் ஆசீர்வதித்து தனது ‘ஆத்மவித்யா விலாசம்’ என்ற நூலை அளித்ததாகவும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் வரலாற்று ஆவணமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இப்படி ஒரு பிரம்ம ஞானியாகவே வாழ்ந்து வந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் வாழ்வு கடைசிக் கட்டத்தை *நெருங்குவதை உணர்ந்தார். அருகில் இருந்த அவரது பக்தர்களிடம் தனது சமாதியை கரூரை அடுத்த நெரூரில் அமைக்கும்படி எழுதிக் காட்டினார்.அந்தப் பக்தர்கள் பெருந்துக்கம் அடைந்தனர். *கண்களை மூடிக்கொண்டு கடைசி யாத்திரைக்குத் தயாராக இருந்த சதாசிவ பிரம்மேந்திரரிடம் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்திய அவர்கள் ‘இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள்? எங்களுக்கு வழி காட்டுங்கள்’ என்று வேண்டினார்கள். கஷ்டப்பட்டு கண்களைத் திறந்த சதாசிவ *பிரம்மேந்திரர் தன் கடைசி கீர்த்தனையை எழுதிக் காட்டினார்.சர்வம் பிரம்ம மயம் ரே ரே  சர்வம் பிரம்ம மயம்...’ என்று தொடங்கும் அந்தக் கீர்த்தனையில் ‘எல்லாமே *இறைமயம் தான். அப்படி இருக்கையில் கடவுளை எங்கே தேட வேண்டும். அந்தப் *பிரம்மத்தில் அல்லவா நாமும் இருக்கிறோம்’ என்ற பொருள் இருக்கிறது.
1755 –ம் ஆண்டு சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி அடைந்து இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். நெரூரில் அவரது ஜீவ சமாதியைக் கட்ட *புதுக்கோட்டை மன்னர் உதவி இருக்கிறார். இன்றும் அவரது ஜீவசமாதிக்குப் பல ஆன்மிக அன்பர்கள் சென்ற வண்ணம் இருக்கிறார்கள். *சென்றவர்கள் அங்கு அவரது ஆன்மிக அலைகளை உணர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.
அவரது ஜீவசமாதிக்கு ‘ஒரு யோகியின் சுயசரிதை’யை எழுதிய பரமஹம்ச யோகானந்தரும் சென்று வழிபட்டிருக்கிறார். அதையும் சதாசிவ பிரம்மேந்திரர் புரிந்த சில அற்புதச் செயல்களையும் அந்த நூலில் குறிப்பிட்டும் இருக்கிறார்

ஸ்ரீமௌன சுவாமிகள்

 ஸ்ரீமௌன சுவாமிகள்


பெரும் மகானான மௌன சுவாமிகளுக்கும் கும்பகோணத்தில் ஒரு முக்கிய இடம் உண்டு. இவரது பிறந்த தேதி தெரியாது. 1899-ல் சித்திரை மாதம் 11-ஆம் தேதி (ஏப்ரல் 22) உத்தர நட்சத்திரத்தன்று சனிக்கிழமை இரவு வேளையில் ஜீவ சமாதி அடைந்தார் மௌன சுவாமிகள். கும்பகோணம்-தஞ்சை நெடுஞ்சாலையில் - கும்பேஸ்வரர் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது மௌன சுவாமிகள் மடம். கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவு சுவாமிகளின் மடம் அமைந்துள்ள தெரு, அவரது பெயரிலேயே -மௌன சுவாமிகள் மடத் தெரு என்று அழைக்கப்பட்டு வருகிறது. கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப்பேருந்துகளில் வந்தால், மௌன சுவாமிகள் பேருந்து நிறுத்தம் என்று சொல்லி, மடம் அருகே இறங்கிக் கொள்ளலாம். மடத்தின் நுழைவாயில் அருகே ஆர்ச் காணப்படுகிறதுசுவாமிகள் கும்பகோணத்தில் சுமார் 25 ஆண்டுகள் வசித்துள்ளார் மௌன சுவாமிகள். இவரை சுவாமி விவேகானந்தர், அன்னி பெசன்ட் அம்மையார் போன்றோர் கும்பகோணத்தில் சந்தித்திருக்கிறார்கள். காஞ்சி மகா ஸ்வாமிகள் ஒரு முறை கும்பகோணத்துக்கு எழந்தருளியபோது இந்த மடத்திற்கு வந்து மௌன சுவாமிகளை சந்தித்திருக்கிறார். தவிர , மௌன சுவாமிகளின் அருமை பெருமைகளை பற்றிக் கேட்டறிந்த வெள்ளைக்கார துரைமார்கள் பலர் தங்களது நாட்டில் இருந்து புறப்பட்டு வந்து சுவாமிகளின் தரிசனம் பெற்றுத் திரும்பி இருக்கிறார்கள். தமிழகத்தின் பற்பல உர்களில் இருந்து எண்ணேற்றோர் வந்து சுவாமிகளைத் தரிசித்து,அவரது அருளாசி வாங்கி உள்ளனர்.  ஸ்ரீமவுன சுவாமிகளின் ஜீவ சமாதி மேல் ஒரு லிங்கம் ஸதாபிக்கப்பட்டு அதற்குத் தினமும் வழிபாடு நடைபெறுகிறது.

சுவாமிகளுக்கு சிஷ்யராக இருந்த அருணாச்சல சுவாமி, ஆறுமுக *சுவாமி மற்றும் காமட்சி அம்மையார் ஆகியோரும் இதே வளாகத்திலேயே சமாதி ஆகி *இருக்கிறார்கள், கும்பகோணம் மவுன சுவாமிகள் மகாத்மியம் என்கிற பழம் பெரும் நூலில் இருந்து சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிய முடிகிறது. செய்யுளும் பொழிப்புரையுமாக அமைந்துள்ள இந்த நூல், சுவாமிகளிடம் பேரன்பு கொண்டவரும், மடத்துக்கு அருகில் உள்ள நாணயக்காரத் தெருவில் வசித்தவருமான காசுக்கடை அ.சு. சபாபதி செட்டியார் மற்றும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லுரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராக இருந்த திருவாளர் அமிர்தம் சுந்தரம் பிள்ளையாலும் கி.பி. 1923-வாக்கில் வெளியிடப்பட்டது. தவிர, கும்பகோணத்தில் அப்போது இருந்த பல தனவந்தர்கள் இந்த நூலை வெளிக் கொண்டு வருவதில் பெருமளவு உதவி இருக்கிறார்கள்.


சுவாமிகள் கும்பகோணத்துக்கு வந்தது என்று சொல்லப்படுவது - கி.பி. 1875-களில் இருக்கலாம் என்கிறார்கள். எந்த ஊர். பெற்றோர் எவர், எங்கெல்லாம் இவர் சுற்றித் திரிந்தார் போன்ற விவரங்கள் ஆதாரபூர்வமாகத் தெரியவில்லை. சிவந்த நிறம் கொண்ட உயர்ந்த திருமேனி; கும்பகோணத்துக்கு இவர் வந்தபோது இருபத்தோரு வயதுடையவர் போல் காணப்பட்டாராம். தற்போது மவுன சுவாமிகள் மடம் இருக்கும் இடம் அப்போது 63 நாயன்மார் குருபூஜை மடம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்தப் பகுதியில் உள்ள சைவ ஆர்வலர்கள் குருபூஜை மடத்துக்கு வந்து தினமும் நாயனமார்களாம். மவுன சுவாமிகள் இங்கு வந்து தங்கிய பிறகுதான் இது மவுன சுவாமிகள் மடம் என்கிற பெயரை அடைந்தது. முதன் முதலில், கும்பகோணம் வந்த மவுன சுவாமிகளை அந்த ஊர்மக்கள் கொண்டாடினார்கள். தங்கள் ஊருக்கு மாபெரும் ஒரு தவசீலர் வந்துள்ளார் என்று மகிழ்ந்து அவர் இருந்த மடம் நோக்கிச் சென்றார்கள். சுவாமிகளின் திருவடி பற்றி நமஸ்கரித்தார்கள். தங்களிடம் உள்ள குறைகளைக் கொட்டினார்கள். இவரைத் தரிசித்த மாத்திரத்திலேயே தங்களது குறைகள் அகன்று போனது போல் உணர்ந்தார்கள். இந்த சந்தோஷத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். சுவாமிகள் பற்றிய பிரமிப்பூட்டும் செய்திகளும், பெருமையும், பல ஊர்களுக்கும் பரவின. அவரைத் தரிசிக்க வெளியூர்களில் இருந்தும் புகைவண்டி மற்றும் கார்கள் மூலம் பயணித்து வந்து தரிசித்தார்கள். மவுன சுவாமிகள் கும்பகோணத்துக்கு வந்த கதையே சுவாரஸ்யமானது.


கும்பகோணம் வருவதற்கு முன் இவர் திருபுவனத்தில் இருந்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட சுவாமிகள் முதல் வருகை இந்த ஊரில்தான் அறியப்பட்டது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் வரும் ஊர்-திருபுவனம். உடை இல்லை; உணவு இல்லை; பேச்சு இல்லை; எந்நேரமும் மவுனம்தான். ஆனால், இவரது நடையில் எந்தத் தடையும் இல்லை. தெருவில் நடந்து கொண்டே இருப்பார். திடீரெனத் திரும்புவார். ஒரே இடத்தில் பல மணி நேரம் வரை அசையாமல் நின்று கொண்டிருப்பார். தனக்குத் தோன்றிய ஒர் இடத்தில் அமர்ந்து நிஷ்டையில் கூடுவார். ஊர்மக்கள் இவரை பித்தன் என்றே சொல்லி வந்தனர். அந்த ஊரில் அவரது செயல்பாடுகள் அப்படித்தான் அவரைச் சொல்ல வைத்தன. இவரைக் கண்டாலே ஏதோ பார்க்கக் கூடாத ஆசாமியைப் பார்த்து விட்டோம் என்பது மாதிரி சற்று ஒதுங்கி நடக்க ஆரம்பித்தார்கள். ஆனாலும், சுவாமிகளின் கீர்த்தியைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒர் உள்ளம் அந்த ஊரில் இருந்தது. அவர், ஒரு சிவ பக்தர். வேளாண் மரபினரான அவர், பொருள் வசதி உள்ளவர். உணவில்லாம், ஓய்வில்லாமல் ஒரு மகான் அலைந்து கொண்டிருக்கிறாரே என்று மனம் கசிந்து, சுவாமிகள் பசியாறுவதற்காக அவ்வப்போது அவர் இருக்கும் தேடி வந்து உணவளித்து, நற்பலன் அடைந்திருக்கிறார். ஆனாலும் மற்ற பக்தர்கள் இவர் பக்கம் திரும்பவில்லை.


இது கொஞ்ச நாட்களுக்குத்தான். ஒரு முறை சுவாமிகளது பார்வை பட்ட ஒருவர், சற்றும் எதிர்பாராமல் பெரும் செல்வத்தை அடையவும். ஊர்மக்கள் சுதரித்துக் கொண்டார்கள். நாம் நினைப்பது போல் இவர் பித்தன் இல்லை. பெரிய மகான் என்று தெளிந்து, அவர் உலவிக் கொண்டிருந்த இடத்தை முற்றுகையிட ஆரம்பித்தார்கள். பல செல்வந்தர்களும் தங்களது தொழில் பெருக வேண்டும் என்பதற்காக அவரது திருவடி பற்ற ஆரம்பித்தார்கள். திருபுவனமே ஆசீர்வதிக்கப்பட்ட பூமி ஆயிற்று. திருபுவனத்தில் ஒரு மகான், அங்குள்ள பல பக்தர்களுக்கு ஆசி புரிந்து வளம் பெருக்கும் தகவல் பக்கத்து ஊரான கும்பகோணத்துக்கும் பரவியது. இவரை எப்படியாவது நம்மூருக்கு அழைத்து வந்து விட வேண்டும் என்று கூடிப் பேசி, செல்வந்தர்கள் சிலர் திருபுவனம் புறப்பட்டு வந்தார்கள். விவரத்தை திருபுவனம் ஊர்காரர்களிடம் சொன்னார்கள். இப்படிப்பட்ட மகான் ஒருவர் தங்கள் ஊரை விட்டுச் செல்வதற்கு எவர்தான் ஒப்புக் கொள்வார்கள்? முதலில், மறுத்து விட்டனர். இருந்தாலும், கும்பகோணம்வாசிகள் நைச்சியமாகப் பேசவே, எங்களுக்கு ஒன்றுமில்லை. சுவாமிகள் மவுனத்தில் இருக்கிறார். அவர் உத்தரவு கொடுத்தால் தாராளமாக அழைத்துச் செல்லுங்கள். எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றனர். மவுன சுவாமிகள் எங்கே பேசப்போகிறார். என்கிற அசட்டுத் தைரியம் திருபுவனம்வாசிகளுக்கு, பார்த்தார்கள் கும்பகோணவாசிகள். இதற்கு ஒரு தீர்வு கிடைக்கிறவரை திருபுவனத்தை விட்டு நாங்கள் புறப்பட மாட்டோம் என்று அங்கேயே தங்கி விட்டார்கள்.


அன்றைய இரவு அந்த அற்புதம் நிகழ்ந்தது. திருபுவனம்வாசிகள் அனைவரின் கனவிலும் கயிலைவாசனான சிவபெருமானே தோன்றி, மவுன சுவாமிகளைக் கும்பகோணத்துக்கு அனுப்ப அனைவரும் சம்மதம் தெரிவியுங்கள் என்று அருளினார். மறுநாள் பொழுது புலர்ந்ததும் திருபுவனம்வாசிகள் அனைவரும் ஒன்றாகக் கூடி ஒவ்வொருவரும் தங்களுக்கு வந்த கனவில் விஷயத்தைச் சொன்னார்கள். கும்பகோணவாசிகள் குதூகலமானார்கள். இறை உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அன்றைய தினமே சுவாமிகளை ஒரு பல்லக்கில் அமர்த்தி , வாத்தியங்கள் முழங்க, திரளான மக்களின் ஊர்வலத்தோடு கும்பகோணத்துக்கு எழுந்தருளினார் மவுன சுவாமிகள். அங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு சுவாமிகளுக்கு உரிய மாரியதை செலுத்தி, தங்கள் ஊரில் அமர்த்திக் கொண்டார்கள் (இந்த பல்லக்கின் ஒரு சிறு பகுதி இன்றைக்கும் மவுன சுவாமிகளின் மடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது). *கும்பகோணத்தில் சுவாமிகள் அமர்ந்த இடம்தான் மேலே சொன்ன 63 நாயன்மார் குருபூஜை மடம் விசாலமான சோலை போன்ற அந்த சூழ்நிலை சுவாமிகளுக்கு ஏகாந்தமாக இருக்குட்டும் என்று சிவபெருமானே திர்மானித்திருந்தார் போலும். சுவாமிகளுக்கு ஒவ்வொரு விதத்திலும் உதவியவர்கள், பற்பல வசதிகளைப் பெற்றார்கள். அவரைத்தரிசித்த சிறார்கள். கல்வியில் மேம்பட்டார்கள். பிணியோடு வந்தவர்கள், அகலப் பெற்றார்கள், சுவாமிகளின் உச்சிஷ்டத்தை (அவர் அருந்தி துப்பிய உணவின் பகுதி) அருந்தியவர்கள், தீரா நோய்கள் தீர்ந்து, பரிபூரண தேகம் பெற்றார்கள்.


உள்ளன்போடு எவர் செய்யும் வழிபாட்டையும் மனமுவந்து ஏற்றுக் கொள்வார் சுவாமிகள். அதே நேரத்தில் மனம் ஒப்பாமல் கடனே என்று எவராவது வந்தால் அதைக் கண்டுபிடித்து ஏற்றுக் கொள்ள மறுத்து விடுவார். சுவாமிகளுக்கு பாத பூஜை மற்றும் அமுதூட்டல் போன்றவற்றுக்கு வரும் சிலர் இப்படி நடந்து கொள்ள நேரிடும்பேது, அசையாமல் இருந்து தன் எதிர்ப்பைக் காட்டுவார் சுவாமிகள். பின், அவர்களே தங்கள் தவறை உணர்ந்து சுவாமிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், இயல்பு நிலைக்கு வந்து அவர்கள் செய்யும் வழிபாட்டை ஏற்றுக் கொள்வார். சுவாமிகளின் கீர்த்தி பற்றி அறிந்த பல மகான்களும் ரிஷிகளும் கும்பகோணத்துக்குப் படை எடுத்தார்கள். இப்படி சுவாமிகளிடம் வந்து அடைக்கலமானவர்தான் அருணாசல சுவாமி என்பவர். அந்தணரான இவர், திருவண்ணாமலையில் இருந்து கும்பகோணம் வந்தார். மவுன சுவாமிகளே கதி என்று அவரது திருவடிகளிலேயே தன் நாட்களைக் கழித்தார். தொண்டு புரிந்து வந்தார். மவுன சுவாமிகளைப் பின்பற்றுபவர்கள் அப்போது திகம்பரராகவே இருப்பது வழக்கம். அதாவது, மேனியில் எந்த உடையும் இருக்காது. பிறந்த மேனியுடனேயே எங்கெங்கும் சுற்றித் திரிவர். அனைத்தையும் வெறுத்தவருக்கு ஆடை பொருட்டா என்ன?


ஆனால், அப்போது இருந்த வெள்ளைக்கார போலீஸார் சிலர், உடை இல்லாமல் தெருவில் சுற்றித் திரிந்த அருணாசல சுவாமியை, ஆடை இல்லாமல் திரிவது குற்றம் என்று புகார் சொல்லி, தஞ்சை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றனர். குற்றவாளிக் கூண்டுக்கு ஒரு சுவாமிகள் வந்திருப்பது கண்டு நீதிபதி ஆடிப் போனார். காரணம் - கூண்டில் இருக்கும் அருணாச்சல சுவாமி, மவுன சுவாமிகளின் சிஷ்யர் என்பதை அறிவார் நீதிபதி. நீதிமன்றத்திலேயே, இவரைக் கைது செய்து கூட்டி வந்த போலீஸாரைப் பார்த்துக் கடிந்து கொண்டு, என்ன காரியம் செய்து விட்டீர்கள்..... இவரைப் போன்றவர்கள் எல்லாம் இந்த நாட்டை வாழ்விக்க வந்த மகான்கள். நீங்கள் செய்தது நியாயமற்ற காரியம். இந்த நாட்டின் கலாசாரத்தையே சீர்குலைக்கும் செயல். இப்போதே இந்த சுவாமியிடம் மன்னிப்புக் கேளுங்கள் என்று உத்தரவிட்டார். போலீஸாரும் நீதிபதியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். அறிவீனர்களின் அற்பச் செயலைக் கண்டு உள்ளுக்குள் நகைத்த அருணாசல சுவாமி தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டுத் திருவையாறு வந்து சேர்ந்தார். அங்குள்ள காவிரியில் மூழ்கி, அடுத்த கணம் கும்பகோணம் காவிரியில் எழுந்தார் என்றால், இவரது தவ வலிமையை என்னவென்று சொல்வது?"


இவரைப்போல் யாழ்பாணத்து சுவாமிகள் (இவர் திருப்புறம்பயத்திலே சமாதி ஆனார்). மலையாள தேசத்தில் கோட்டாறு பகுதியில் பிறந்த அண்ணாமலை, வாடிப்பட்டி அருகே சல்லாக்குளத்தில் பிறந்த சொக்கையர், ஆறுமுகச் சாமி. காமட்சி அம்மையார் போன்ற பல தவசீலர்கள் சுவாமிகளுக்குத் தொண்டாற்றுவதே தங்கள் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். இவர்களில் காமட்சி அம்மையாரின் பக்தி, பெரிதும் போற்றதலுக்குரியது. கும்பகோணம் குருநாதப் பிள்ளையின் சகோதரியான காமட்சி அம்மையார். மடத்திலேயே பல காலம் தங்கி இருந்து சுவாமிகளுக்கு சேவை செய்து வந்தார். சுவாமிகள் விரும்பிக் உண்ணும் உணவு வகைகளையும் பல விதமான பலகாரங்களையும் தயாரித்துக் கொண்டு சுவாமிகளுக்கு கொடுத்து மகிழ்வார். அவரது திருமேனிக்கு விசிறி விட்டு சேவை புரிவார். உண்மையான அன்போடு அவரை வணங்கி வந்தார். சுவாமிகளின் மேல் உள்ள பற்றுதல் காரணமாக, அவர் சமாதி அடைந்த ஒரு மண்டலத்துக்குள் (48 நாட்களுக்குள்) காமட்சி அம்மையாரும் மடத்திலேயே சமாதி ஆனார். (இவரது சமாதியும் இங்கே உள்ளது). இதைப் பெரும் பாக்கியமாகப் பேசினார்கள் அப்போது.


சுவாமிகளிடம் மிகுந்த பக்தி கொண்டு அவரது திருமடத்திலேயே வாழ்ந்தவர் - வெங்கடாஜலம் என்பவர். சித்த வைத்திய நூல்களைக் கற்ற இவர், சுவாமிகளுக்குத் தொண்டு புரிந்து வந்தார். ஒரு நாள் மருந்து அரைப்பதற்கு உரிய ஒரு இரும்புப் பொருளை மடத்தின் ஒரு பகுதியில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டார். மறுநாள் இவர் மடத்துக்குத் திரும்பி, மருந்து அரைப்பதற்குரிய அந்த இரும்புப் பொருளைத் தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. அது மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. வெங்கடாஜலத்தைப் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பிறகுதான் அவருக்குத் தெரிய வந்தது -மவுன சுவாமிகள் அதை எடுத்து விழுங்கி விட்டார் என்பது. பதறிப் போனார். இதற்குள் பலருக்கும் விஷயம் தெரிந்தது அனைவரும் மடத்தில் கூடி விட்டார்கள்.


சுவாமிகளை கொல்ல வேண்டும் என்பதற்காக வெங்கடாஜலம் இப்படிச் செய்து விட்டதாகச் சிலர் பேச ஆரம்பித்தனர். ஒன்றும் அறியாத அந்த ஜீவன் - மவுன சுவாமிகள் தன் வழக்கப்படி எதுவும் பேசாமல் அமைதியோடு இருந்தது. அவ்வளவுதான்.... மிகுந்த நஞ்சு நிறைந்த அதை உட்கொண்டதால் சுவாமிகள் சில நிமிடங்களுக்குள் சமாதி அடைந்து விடுவார் என்று முடிவெடுத்து, அடுத்து ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள் சில அவசரக் குடுக்கைகள் , அவர்களுக்குத் தெரியுமா, சுவாமிகள் சிவபெருமானைப் போன்றவர் என்று. எத்தகைய நஞ்சும் சுவாமிகளை ஒன்றும் செய்யாது. என்று அப்போது அறியவில்லை . சில நிமிடங்கள் கழித்து , சுவாமி இயல்புநிலைக்கு வந்தபோதுதான் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இப்படி எதுவும் பேசாமலே பல விளையாட்டுகள் நடத்தி, வேடிக்கை பார்ப்பார் மவுன சுவாமிகள். இத்தகைய பெருமைகள் கொண்ட மவுன சுவாமிகள் மடம் தற்போது வெறும் கீற்றுக் கொட்டகையில் உள்ளது. சுவாமிகளின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமான அவரது பக்தர்கள், திருப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.ஒரு காலத்தில் கும்பகோணத்துக்கே பெருமை சேர்த்த அந்த மகானின் பெருமைகள் மேலும் பரவ வேண்டும் பலரும் அவரது அருள் பெற வேண்டும்

ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி கல்யாண சுந்தர சுவாமிகள்

 ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி கல்யாண சுந்தர சுவாமிகள் 



பிரம்மரிஷி மலை பகவான் காகபுஜண்டர் தலையாட்டி சித்தரின் சீடராவார்.

▪️👉

சுவாமிகளின் சமாதி  அமைந்துள்ள இடம் : திருச்சி சமயபுரம் டோல்கேட்யில் இருந்து நொச்சியம் அடுத்து நாமக்கல் சேலம் ,பைபாஸ் சாலையில் நாலுகால் மண்டபம் ரோட்டில் இருந்து கோபுரபட்டி வழியில் ஒரு 15அடி தூரத்தில் அமைந்துள்ளது.

மஸ்தான் சுவாமிகள்

 மஸ்தான் சுவாமிகள்

மஸ்தான் சுவாமிகள் பெரும்பாலானோரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். அதி உன்னத பக்குவியாய் இருந்தும் , சாதாரணமானவன் போல் காட்சி அளிப்பார். பிறருக்கு எப்போதும் உதவிசெய்யக் காத்திருக்கும் இரக்கமும் பெருந்தன்மையும் கொண்டவர். தன்னை முன்னிலைப் படுத்தாது பின்புலத்தில் இருப்பதையே விரும்பினார் ; சாதாரண மக்களின் கவனமும் பாராட்டும் அவர் பால் செல்லாத அளவிற்கு ஒதுங்கியிருந்தார் .

இவ்வாறு குருவினால் சிறப்பிக்கப்பட்ட பக்தரே மஸ்தான் சுவாமி. 


தேசூரில் எளிய இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் நெசவுத் தொழில் செய்பவர். ஆரம்ப நாட்களிலேயே மஸ்தான் தறியில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது தானாகச் சமாதிபோன்ற நிலையில் ஆழ்ந்துவிடுவாராம். மகன் உறங்குகிறான் என்று நினைத்த பெற்றோர் அவரை அடித்து எழுப்பி வேலையைத் தொடருமாறு சொல்வார்களாம். குழந்தைப் பருவத்திலேயே இவ்வாறு அடிக்கடி நிகழ்ந்ததாம்.


இருபது வயது இருக்கும் போது பக்தியின் வயப்பட்டார் மஸ்தான் மொகரம் பண்டிகை சமயம் விபூதியைப் பூசிக் கொண்டு , பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்திக் கொண்டு அலைவாராம்.




பின்னர் குணங்குடி மஸ்தானின் பாடல்களைப் படித்தவர் , “ பேரின்ப ” நிலை குறித்த பாடல்களால் பெரிதும் கவரப்பட்டு , முக்தியை நாட உள்ளம் கொண்டார். ஓராண்டு இரவிலும் பகலிலும் உறங்காது அவர் குணங்குடி மஸ்தான் , தாயுமானவர் , பட்டினத்தார் பாடல்களைப் படித்தவண்ணம் இருந்தார்.


1914 ஆம் ஆண்டு தேசூர் அகிலாண்டம்மாவோடு திருவண்ணாமலை வந்து முதன்முரையாக பகவானைத் தரிசித்தார். பகவானுடைய பார்வை பட்ட உடனேயோ , பலமணி நேரம் நீடிக்கும் சமாதி அனுபவம் கிடைக்கப் பெற்றார்.

ஆனால் இச்சமாதி அனுபவங்கள் பூரணமும் , நித்தியமுமான ஆன்மானுபூதியைத் தரவில்லை. ஆதலினால் பகவானை அடைந்து அவர் அருள் வேண்டி நின்றார். நிர்குண உபாசனையையே விரும்பிய அவரிடம் பகவான் பின் வருமாறு கூறினார் : “ மனதை இதயத்தில் நிலை நிறுத்த வேண்டும். எல்லா எண்ணங்களும் எங்கிருந்து எழுகின்றனவோ அந்த மூலஸ்தானத்தில் மனதின் கவனத்தை நிலைக்கச் செய்தால் , மனம் மூலத்தானத்தில் ஒடுங்கிவிடும் ; உள்ள பொருள் சுயமாய்ப் பிரகாசிக்கும் . ”


குருவின் உபதேசம் மஸ்தானை ஆன்ம விசாரத்தில் ஈடுபடுத்தியது


பகவான் ரமணரின் பெயரில் உலகில் தோன்றிய முதல் மையம் “ரமணானந்த மடாலயம்.” வந்தவாசியை அடுத்த தேசூரில், 1914ல் இந்த மையத்தை தேசூரம்மாள் என்று அழைக்கப்படும் அகிலாண்டம்மாள் என்ற பெண் பக்தருடன் இணைந்து ஆரம்பித்தவர் மஸ்தான் சுவாமிகள். இவர் பிறப்பால் ஓர் இஸ்லாமியர். இளம் வயதிலேயே ஆத்மானுபூதி பெற்றவர். பகவான் ரமணரின் அன்புக்குப் பாத்திரமானவர். பகவானின் பூரண அருளைப் பெற்றவர். பகவானுடனே பல காலம் விருபாக்ஷி குகையில் தங்கியிருந்தவர். அடிக்கடி தனது ஊரான தேசூருக்குச் சென்று பகவானுக்கும் பக்தர்களுக்குமான உணவுப் பொருட்களை தலைமேல் சுமந்து வருவார். கீழே பிற பக்தர்களுடன் சென்று பிக்ஷை எடுத்து வந்து ரமணருக்கு அளிப்பார். தன் கையாலேயே ராட்டையில் நூல் நூற்று பக்தர்களுக்கு ஆடை நெய்து வந்து தருவார். பகவான் ரமணர், குற்றவேல் குஞ்சு ஸ்வாமிகள் என பலருக்கு இவ்வாறு அவர் ஆடை அளித்திருக்கிறார்.


மஸ்தான் சுவாமிகளின் இறுதி நேரத்தில் நிகழ்ந்த சம்பவம் மிகவும் ஆச்சரியமானது.


படுத்த படுக்கையாக இருந்தார் மஸ்தான் சுவாமிகள். தேசூரம்மாள் உடனிருந்து அவருக்கு உதவிகள் செய்து வந்தார். படுக்கையில் படுத்திருந்தவாறே ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார் மஸ்தான் சுவாமிகள். திடீரென்று அவர் உரத்த குரலில், “ஆஹா.. ஆஹா.. அதோ நந்தி பகவான் வானிலிருந்து கீழே இறங்கி வருகின்றார். இதோ... என் உடலை அன்போடு தடவிக் கொடுக்கிறார். அடடா.. அடடா... சிவ கணங்கள் ஆடிக் கொண்டு இங்கே வருகின்றனவே. அவர்களுடைய உலகிற்கு என்னை அழைக்கின்றார்கள். நான் செல்லப் போகிறேன்” என்றார்.


தேசூரம்மாள் திடுக்கிட்டார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தார். அவர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. மஸ்தான் சுவாமிகள் ஜூர வேகத்தில் ஏதோ பிதற்றுவதாக நினைத்தார் தேசூரம்மாள்.


மஸ்தான் சுவாமிகள் திடீரென்று எழுந்து நின்றார். அவர் ஒரு வாரமாகப் படுத்த படுக்கையாக இருந்தவர். அவர் கண்கள் கண்ணீர் சொரிந்தன. இரு கைகளையும் தலைக்கு மேலே கூப்பினார். தனக்கு முன்னால் யாரோ நின்று கொண்டு தன்னைக் கூப்பிடுவது போலத் தலையை அசைத்தார். பின்னர் உணர்ச்சி மேலிட்டவராய் உரத்த குரலில், “அம்மா... அம்மா... அபீதகுசாம்பாளே... என்னை அழைத்துச் செல்ல நீயே வந்தாயோ” என்றார். கை கூப்பி வணங்கினார். அடுத்த கணம் உயிரற்ற உடலாய்க் கீழே விழுந்தார்.


அன்று நவம்பர் 8, 1931 தீபாவளித் திருநாள். புனித நாளான அன்று தான் தன் உடலை உகுத்தார் மஸ்தான் சுவாமிகள். அவர் காலமான செய்தி அறிந்ததும் திருமந்திர முறைப்படி அவரைச் சமாதி வைப்பதற்கான முறைகளை குற்றவேல் குஞ்சு சுவாமிகளுக்குச் சொல்லிக் கொடுத்து, அப்பொருட்களைத் தன் கையாலேயே அதற்கான தனித் தனிப் பைகளிலிட்டு ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார் பகவான் ரமணர். பகவான் அவ்வாறு தன் கையாலேயே சமாதிக்கான கிரியைகளைச் செய்தது அன்னை அழகம்மை, மஸ்தான் சுவாமிகள், பசு லட்சுமி ஆகிய மூவருக்கு மட்டுமே. இதிலிருந்தே மஸ்தான் சுவாமிகளின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.


பெரும்பாலான சமணர்கள் வாழ்ந்திருந்த அவ்வூரில் இஸ்லாமியரான மஸ்தானுக்கு சிவஞானியருக்கு அமைக்கப்படும் சமாதி பகவான் ரமணரது கூற்றுக்கு இணங்க அமைக்கப்பட்டது. சிம்மக்குட்டி நாயனார் என்னும் அவ்வூர்க்காரரான சமணர் ஒருவர் சமாதி அமைப்பதற்கான செலவுகளுக்குப் பொறுப்பேற்றார்.


அருகில் இருந்த சிவன் கோவில் நிர்வாகம் மஸ்தானின் உடலை ஊர்வலமாகக் கொண்டு செல்ல கோவில் சப்பரத்தைத் தந்து உதவியது. அது ஒரு புத்தம் புதிய சப்பரம். அப்பொழுதுதான் வேலை முடித்து  வந்திருந்தது.  மஸ்தானுடைய உடலை ஊர்வலமாய் எடுத்துச் செல்வதாய் ஆயிற்று.


அந்நாள் தீபாவளி நாளும் ஆயிற்று. மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. கொட்டும் மழையிலே மஸ்தானின் உடல் சப்பரத்தில் வைக்கப்பட்டு அருகிலிருந்த மூன்று கிராமங்களின் வழியே ஊர்வலமாய்ச் சென்றது. சில இடங்களில் பக்தர்கள் இடுப்பளவு நீரில் சப்பரத்தைத் தள்ளிக் கொண்டு சப்பரத்தைத் தள்ளி உதவினர். முனிசாமி 200 கிலோ அரிசி வழங்கி அனைவரும் உணவு அளித்தார். தொடர்ந்து தன் வாழ்நாள் வரை மஸ்தானின் சமாதி தினத்தன்று அவர் உணவு படைத்து வந்தார்.


பின்னர் ஒரு சமயம் பகவான் ரமணரைச் சந்தித்த தேசூரம்மாள் மஸ்தான் சுவாமிகளின் இறுதிக் கணத்தில் நடந்த நிகழ்வுகளைச் சொல்ல, உடனே பகவான், “ஆஹா... அகில உலக அன்னையான அபீதகுசாம்பாளே மஸ்தானை அழைத்துச் செல்லத் தானே வந்திருக்கிறாளே. அவர் கண்டது, சொன்னது அனைத்தும் சிவலோகத்தோடு ஒத்துப் போகின்றது” என்றார்.


“அபீதகுசாம்பாளும் அருணாசலரும் ‘மோட்சம் தருகிறேன் வா, வா’ என்று அழைக்கும் ஒரே இடம் பூமியில் இதுதான்” என்பது சேஷாத்ரி சுவாமிகளின் வாக்கு.. அந்த வாக்கு மஸ்தான் சுவாமிகளின் விஷயத்தில் உண்மையாயிற்று. அகில உலக அன்னையான உண்ணாமுலை அம்மனே நேரில் வந்து மோட்சம் அளிப்பது என்றால் அது எவ்வளவு உயரிய நிலை! மஸ்தான் மிகவும் கொடுத்து வைத்தவர்தான் இல்லையா!


மஸ்தான் சுவாமிகளின் சமாதி வந்தவாசியை அடுத்த “மடம்” கிராமத்தில் அமைந்துள்ளது. 


காலப்போக்கில் மஸ்தானின் சமாதி ஊர் மக்கள் அனைவரும் வேண்டியதை அருளும் புனித தலமாக மாறிவிட்டது. ஆரம்ப காலத்தில் மஸ்தானுக்கு உதவி செய்தவர் அனைவரும் வளம்பெற ஆரம்பித்தனர். இதைக் கண்ணுற்ற எல்லோரும் அருள் வேண்டிச் சமாதியை நாடினர்.


மஸ்தான் சுவாமியின் எளிமையும் , தன்னடக்கமும் , அன்பும் பெருந்தன்மையும் குரு பக்தியும் , அதி உன்னத ஆன்மிகப் பக்குவமும் அதிசாமான்யத் தோற்றமும் . அதீத நிர்மலத்துவமும் , வேறுபாடுகளைக் கடந்து மக்கள் அனைவரையும் ஒருமிக்கச் செய்த அவரது முக்தியும் மெய்ப்பொருள் நாட்டம் உடையவருக்கு மனமாசு அகற்றும் அருமருந்தாகும்

ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பைய்யா சுவாமிகள்

 ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பைய்யா சுவாமிகள்


ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பைய்யா சுவாமிகள் சுமார் 1800  ஆண்டுகளின் துவக்கத்தில் வசதி மிக்க மிராசுதார் குடும்பத்தில் அந்தணர் குலத்தில் பிறந்தவரான சுவாமிகளின் வயதையோ, வருடத்தையோ எவராலும்  சரியாகக் கணிக்க முடியவில்லை. ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பையா சுவாமிகள்   அந்தணர் குலத்தில் பிறந்தவரான சுவாமிகள் சிறுவயது  முதற்கொண்டே ஆழ்ந்த பக்தியிலும், ஆழமான ஆன்மீகப் பாதையிலும் தன் சிந்தனையை செலுத்தி வந்தவரான சுவாமிகள் சதாசர்வ காலமும் சிந்தனையிலும், மௌனத்திலும் இருந்து வந்தவர் திடீரென்று ஒரு நாள் மறைந்து போனார்கள். சுவாமிகளின் வீட்டிலிருந்தவர்கள் பல இடங்களிலும் தேடித் திரிந்து இறுதியில் சுவாமிகளின் சுய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோதிடரிடம் செல்ல ஜோதிடர் வெங்கிடு சுப்பைய்யா  மிகப்பெரிய மகான் என்றும் அவரை எவராலும் கட்டுப்படுத்த முடியாது  என்றும் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்.

தவசீலர்:-

🌼🍂🌼🍂

 ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பையா சுவாமிகள் வட இந்தியப் பகுதியை நோக்கிச் சென்று அப்பகுதிகளில் உள்ள சித்தர்களிடம் தஞ்சமடைந்து அவர்களிடம் தியானம், தவம்,யோகம், சித்தாடல்கள் இவற்றையெல்லாம் கற்றறிந்தபின்  30 ஆண்டுகள் கழிந்த பின் சுவாமிகள் ஜாதி-  மதம்,இனம்,மொழி,சைவம்,அசைவம் என்று எதிலும் வேற்றுமை பாராமல் அனைத்தும் கடந்த நிலையில் மிகப்பெரிய துறவியாகவும்,மகானாகவும் மாறிய நிலையில் தனது சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கு வந்தடைந்தார்கள்.

சித்தாடல்கள்:-

🌻🌻🌻🌻🌻🌻

   இப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கி இருந்து பல்வேறு விதமான சித்து விளையாடல்களையும் சுவாமிகள் புரிந்து வந்துள்ளார்கள்.

  தன்னை நாடி வந்தவர்களின் நோய் நொடிகளைத் தீர்க்க 'மந்திரமானதும்,மேன்மை மிக்கதுமான  திருநீற்றினையே மருந்தாக வழங்கி வந்தார்கள். அதன் மூலம் தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைத்து வந்தார்கள்

   தீர்க்க தரிசியான சுவாமிகள் அப்போது காய்ந்து வறண்டு போயிருந்த பூமியான  பட்டுக்கோட்டை பின்னர் புண்ணிய நதியான காவிரி கரைபுரண்டு ஓடி பாலையாக இருந்த இடமெல்லாம் சோலையாக மாறும் என்று அருள்வாக்கு  கூறியருளினார்கள். 

 நவபாஷாணம்:- 

🌺🍀🌺🍀🌺🍀🌺

 ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பையா சுவாமிகள் தமது சீடரான மாணிக்க முதலியாரது நாட்டு மருந்துக் கடையில் நவபாஷாணக் கட்டிகளை வாங்கி அப்படியே சாப்பிடுவாராம். ஆனால் சுவாமிகளுக்கு அதனால் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை என்று கூறுகின்றனர்.

  சுவாமிகளின் மருத்துவ சீடரான கோவிந்த கோனாரைத் தன்னுடன் ககன மார்க்கமாக அதாவது ஆகாய மார்க்கமாக ராமேஸ்வரம் அழைத்துச் சென்று அங்குள்ள பல்வேறு பகுதிகளைத் தரிசனம் செய்ய வைத்து பல்வேறு சித்துக்களும் புரிந்துள்ளார்கள்.

  மேலும் சுவாமிகள் நடுவழிக் கொல்லையில் தனது சீடரான கோபாலக் கோனார் குடும்பத்தினரிடம் ஒரு களிமண் உருண்டையைக் கொடுத்து அதனைப் பத்திரமாகப் பாதுகாத்துப் பூஜித்து வருமாறு கூறியுள்ளார்கள்.அக்குடும்பத்தினருள் எவருக்கேனும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் உடனே அக்களிமண் உருண்டையிலிருந்து சிறிதளவு எடுத்து நீரில் கரைத்துக் குடிக்க அந்நோய் நீங்குகிறதாம்.இன்றும் அக்குடும்பத்தினரைப் பெரிதாக எவ்விதநோயும் தாக்குவதில்லையாம்

  மேலும் ஊரில் ஒருவருக்கு ஜன்னி நோய் கண்டு இறக்கும் தருவாயில் இருந்தவருக்கு சுவாமிகள் தமது திருக்கரங்களால் நோயாளிக்குத் தயிரை ஊற்றிக் கொடுத்துக் காப்பாற்றி உள்ளார்கள்.

காய்ந்த மீனால் குன்மம் தீர்த்தவர்:-

🦈🦈🦈🦈🦈🦈🦈

  ஒரு முறை பட்டுக்கோட்டை நகரத்துத் தாசில்தாரைக் 'குன்ம நோய்' அதாவது கடுமையான வயிற்று வலி தாக்க சுவாமிகளைத் தேடி ஓடி வந்தார். தாசில்தாரைக் கண்ட சுவாமிகள் ஓடத் தொடங்கினார்கள். இருவரும் ஓடி இறுதியில் சுவாமிகள் மீன் மார்க்கெட்டை அடைந்து அங்கு ஒரு கருவாட்டுக் கூடையில் இருந்த  கருவாட்டுத் துண்டு ஒன்றை எடுத்துத் தன் வாயிலிட்டு மென்று பின் அதனை எடுத்து தாசில்தாரிடம் தந்து அதனை 'மென்று விழுங்குமாறு' கூறியுள்ளார்கள். அதன்படியே  தாசில்தாரும் செய்ய அவரது குன்ம நோய் இருந்த இடம் தெரியாது மறைந்து போனது.

காமம் கடந்த மகான்:-

🐍🐍🐍🐍🐍🐍🐍🐍

  மற்றுமொரு முறை ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பையா சுவாமிகள் பட்டுக்கோட்டை  கிராமப்புறத்தில் இருந்த மூங்கில் காட்டுக்குள் சென்று அங்கிருந்த நாகபுற்றின் முன் நின்ற சுவாமிகள் தனது ஆண் குறியை வெளியே எடுத்து  "நாகம்மா வெளியே வா! இவனுக்குக் காமம் தலைக்கேறி உள்ளது. அதனைக் கட்டுப்படுத்து" என்று அழைக்க, அப் புற்றிலிருந்து பெரிய நாகப்பாம்பு ஒன்று வெளியே வந்து சுவாமிகளின் ஆண்குறியை இரண்டு முறை கொத்தி விட்டுச் சென்றது. பின்  அதிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட  நின்ற சுவாமிகள் இவ்விதம்  தனது காமத்தையும் கட்டுப்படுத்திய மிகப்பெரிய தவசீலர் ஆவார்.

ஜீவ முக்தி:-

🔥💥🔥💥🔥

  1873 ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பையா சுவாமிகள் தாம் ஜீவசமாதி அடைவதற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே ஆவணி மாதத்தில் வரும் மூல நட்சத்திர நாளில் ஜீவசமாதி அடையப் போவதாகக் கூறியவர் தான் கூறிய அதே நாளில் அமர்ந்த நிலையில் சுவாமிகள் ஜீவ முக்தி அடைந்தார்கள்.

  குருபூஜை:-

🌸🍃🌸🍃🌸🍃

ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பையா சுவாமிகளின் குருபூஜை இன்று 05.09.2022 ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. 

  சிறந்த சக்திகள் மிகுந்த சுவாமிகளின் குருபூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பையா சுவாமிகளின் அருள் பெறுவோம்.

அமைவிடம்:-

🏵️☘️🏵️☘️🏵️☘️

   பட்டுக்கோட்டை நகரில் தஞ்சை சாலையில் சாமியார் மடம் பகுதியில் மார்க்கெட் அருகில் சுவாமிகளில் ஜீவசமாதி அமைந்துள்ளது.

ஞானகுரு ஸ்ரீ வாசுதேவன் சுவாமி

 ஞானகுரு ஸ்ரீ வாசுதேவன் சுவாமி


சுவாமிகள் சமாதி அமைந்துள்ள இடம் :  மலையாள மௌனகுரு சுவாமிகள் திருக்கோவில் ஆலய வளாகம். தேவதானம்.  திருச்சிராப்பள்ளி.🙏

Sunday, 4 September 2022

ஸ்ரீலஸ்ரீ இலட்சுமணானந்த சுவாமிகள்

 ஸ்ரீலஸ்ரீ இலட்சுமணானந்த சுவாமிகள்



ஸ்ரீ மத் அமலானந்த சுவாமிகளின் சீடர்

▪👉சமாதி அமைந்துள்ள இடம்: ராணிப்பேட்டை  மாவட்டம், அரக்கோணத்திலிருந்து நெமிலி, ஒச்சேரி செல்லும் பாதையில், நாகவேடு என்ற ஊரில் மெயின் ரோட்டில் சமாதி உள்ளது. 

ஸ்ரீ ஆதி சிவசங்கர பாண்டிய சுவாமிகள்

 

ஸ்ரீ ஆதி சிவசங்கர பாண்டிய சுவாமிகள்

ஜீவ சமாதி கோவில் அமைந்துள்ள இடம்:             ஶ்ரீஆதி சிவசங்கரபாண்டிய  சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி சுவாமிகள். (நால்வர் ஜீவசமாதி கோயில்)           திருஊற்றுநகர், ஊத்துப்பட்டி,

 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி  வட்டத்தில் அமைந்துள்ளது ஊத்துப்பட்டி. 

Thursday, 1 September 2022

ஸ்ரீலஸ்ரீ சங்கர லிங்கம் சுவாமிகள்

 ஸ்ரீலஸ்ரீ சங்கர லிங்கம் சுவாமிகள் 

*ஸ்ரீலஸ்ரீ சங்கர லிங்கம் சுவாமிகள் ஆரம்ப காலகட்டத்தில் தன்னிலை அறியாதவராய் பெரியசெவலை ரோடு மார்க்கத்தில் அரைக்கால் சட்டை அணிந்து உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் மூடி முக்காடிட்டுக் கொண்டு அங்குமிங்கும் நடந்து செல்வதுமாய் இருந்தார்கள்.

அன்னதானம்:-

🌺🌺🌺🌺🌺🌺

   தனியனாய் வந்த சுவாமிகள் பின் உளுந்தூர்பேட்டை வந்து சேர்ந்தவுடன் தன்னை நாடி வருபவர்களுக்கு சொற்ப அளவில் அன்னதானம் செய்தும், முடிந்த அளவில் அரிசியில் கஞ்சி காய்ச்சித் தருபவராகவுமே இருந்து வந்தார். பசித்தோருக்கு அன்னமிட்டு வந்த புண்ணியத்தினாலேயே சுவாமிகளுக்கு அதீத சக்திகள் கைவரலாயிற்று.

கர்மவினை நீக்கம்:-

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

      ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்கம் சுவாமிகள் 'தன்னை' அறிந்த பின் தன்னை நாடி வந்தோரின் இடர்களைக் களையும் வண்ணம் நாவன்மை மிக்கவரானார்கள். அதனாலேயே வாழ்வில் துன்புறும் மக்கள் தங்கள் துன்பங்களைக் களைய வேண்டி சுவாமிகளை நாடி வந்தனர்.

  இல்லறத்தில் பிரிவினை,கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள், நோய்நொடிகள் நீக்கம் பெறவும், காணாமல் போனவர்கள் திரும்பக் கிடைக்கவும், குழந்தையின்மை, தொழில் முன்னேற்றம் மற்றும் இன்ன பிற பிரச்சனைகள் தீர வேண்டியும் சுவாமிகளை நாடி மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

  அவ்விதம் சுவாமிகள் தம்மை நம்பி.. நாடி வந்தவர்களுக்குத் தன் நாவன்மையால் நல்வாக்கு கூறி நம்பி வந்தவர்களுக்கு நன்மைகள் நடைபெறச் செய்தார்கள். அவ்விதம் நன்மை பெற்றோர் பலர் தாமாக முன்வந்து சுவாமிகள் அன்னதானம் செய்விக்க அரிசி, பழம், காய்கறிகள் முதலானவற்றைக் கொடுத்துச் சென்றனர்.அதன் மூலம் அவர்கள் தங்களது கர்மவினைகள் நீக்கம் பெற்று நல்வாழ்வு பெற்று மகிழ்வுற்றனர்.

தன்னலமற்ற சேவை:-

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

சுவாமிகளின் தன்னலமற்ற  சேவைக்கு எடுத்துக்காட்டாய்  விளங்குவது அன்ன தானம்.அன்னதானம் செய்வதற்கென மக்கள் தரும் பொருட்களையோ, பணத்தையோ, சிறிதேனும் தன் மனைவி - மக்களுக்கும், தம் உறவினர் - சுற்றத்தார் என்ற வகையில் அவர்களுக்கோ சுவாமிகள் சிறிதேனும் தனக்கென்றோ எதையும் எடுத்து வைத்துக் கொள்வார் இல்லை.  

   பக்தர்கள் தாமாக முன்வந்து அளித்த அனைத்தையும் அன்னதானத்திற்கு என்றே சுவாமிகள் பயன்படுத்தி வந்தார்கள். தினமும் நூற்றுக்கணக்கில் வரும் ஏழை, எளியோருக்குத் தங்கு தடையின்றி எந்நேரமும் டீ,காபி முதலான பானங்களையும் அளித்து வந்தார்கள். வெளியூரிலிருந்து வரும் அன்பர்கள் தங்குவதற்கு உணவும், தங்குமிடமும் அளித்து உதவி வந்தார்கள்.

கர்மாவைக் கழிக்கும் விதம்:-

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

   ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்கம் சுவாமிகள் தன்னிடம் பிரச்சினைகளோடு வருபவர்களை இனம் கண்டுகொண்டு தாமாக அவர்களை அழைத்து "என்னை நினைத்து... என்னை நாடி வந்து விட்டாய் அல்லவா? உன் பிரச்சனைகள் யாவும் இன்றோடு தீர்ந்துவிடும். உனக்காக நான் இருக்கிறேன்" என்று ஆறுதல் மொழிகள் சொல்லியும், வந்தோரின் மனம் நிறையும் படியான அன்பு மொழிகள் சொல்லியும் ஆசீர்வதித்து உணவருந்தச் சொல்வார்கள்.

கர்மவினைகள் அதிகம் உள்ளோருக்கு சுவாமிகள் தன் கரங்களாலேயே உணவோ,கஞ்சியோ தருவார் அதனை பக்தர்கள் தங்கள் இருகரங்களால் ஏந்தியபடி அப்படியே உண்ணவேண்டும் என்பார். அவ்விதம் உண்பதால் அவர்களது கர்ம வினைகள் நீக்கம் பெறும் இது சித்தரது சூட்சும ரகசியம் ஆகும்.

நல்வழி - நற்பலன்:-

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  தன் உழைப்பால் சம்பாதித்த பணம் பத்து ரூபாய் ஆனாலும் அதில் ஒரு கட்டு பீடி வாங்கித் தந்தாலும் சுவாமிகள் அதனை அன்போடு ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார். ஆனால் தவறான வழியில் சம்பாதித்த பணத்தை நன்கொடையாக லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும் அதனைக் குறித்து முன்னரே அறிந்தவர் ஆகையால் அதனைத் தீண்ட மாட்டார்கள்.

உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாடுகள் பார்க்காமலும்,மேலோர், கீழோர் என ஜாதி பேதம் பாராமலும் அனைவரையும் சமமாகவே பாவித்து நல்லுபதேசம் செய்வார்கள்.ஞாய, தர்மத்திற்குக் கட்டுப்பட்டு வரும் அனைவருக்கும் நற்குருவானார்கள்.

காலப்போக்கில் சுவாமிகள் செய்து வரும் தான, தர்மத்தினாலேயே பக்தர்கள் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்கம் சுவாமிகளைப் "பண்ணையார் ஐயா" என்றே அழைக்கலாயினர்

ஜீவமுக்தி:-

☘️☘️☘️☘️☘️

   முக்காலமும் உணர்ந்த பெரும் அருளாளனாக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்கம் சுவாமிகள் 15.07.1997ம் தேதி அன்று ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் ஜீவ முக்தி அடைந்தார்கள் .

சமாதி பீடம்:-

🌻🌻🌻🌻🌻

   ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்கம் சுவாமிகளின் சமாதி பீடம் எண்கோண வடிவமைப்பில் கட்டப்பட்டு அதன் மீது, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்துள்ளனர். அற்புதக் கலை அமைப்புடன் கூடிய சுற்றிலும் எட்டு தூண்கள் வண்ணப்பூச்சுடன் காணப்படுகின்றன. எண்கோண வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ள சமாதி பீடத்தின் மீதுள்ள சிறு கோபுரத்தில் சுற்றிலும் முனிவர்கள் மற்றும் சித்தர்களின் சுதைச் சிற்பங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்:-

🏵️🏵️🏵️🏵️🏵️

 சுவாமிகளின் ஜீவசமாதி  உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட கோட்டப் பொறியாளர் அலுவலகத்தினுள் அமைந்துள்ளது.

மிகப்பெரிய தர்மவானான ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்கம் சுவாமிகளின் குருபூஜை நாளன்று சுவாமிகளின் ஜீவசமாதி பீடத்தில் அபிஷேக ஆராதனைகளும், வடலூரில் உள்ள 'அணையா அடுப்பென' அன்னதானமும், தொடர்ந்து வெகு விமர்சையாக நடைபெறும்.


மகரிஷி சித்தர் சிவலிங்க சுவாமி

 

ஸ்ரீலஸ்ரீ சித்தர் சிவலிங்க சுவாமிகள் 1910 ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் பொள்ளாச்சி அருகேயுள்ள கள்ளிப்பாளையம் என்னும் சிற்றூரில் தங்கமுத்துக் கவுண்டர் -  பழனி அம்மாள் தம்பதிகளுக்குத் தவப்புதல்வனாய் அவதரித்தார்கள். 

   கந்தசாமிக் கவுண்டர் என்னும் எனும் இயற்பெயருடன் வளர்ந்து வந்த அவர் தன் இளமைக் காலம் தொட்டே இறைசிந்தனை மிக்கவராய் பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரில் இருந்த சித்த பெருமானாராம்  ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சுவாமிகளைக் குருவாகக் கொண்டு ஆன்மீகத்தில் வேரூன்றத் தொடங்கினார்கள். 

மனை மாண்பு:-

🌸☘️🌸☘️🌸☘️

  ஸ்ரீலஸ்ரீ சித்தர் சிவலிங்க சுவாமிகள் தனது பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க மாசாத்தாள் எனும் மங்கையை மணந்து இல்லறமே நல்லறமாக் கொண்டு விளங்கி, மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் இரு பெண் குழந்தைகளுக்குத் தந்தையாகிய சுவாமிகள் மனையற மாண்பு  கண்டார்கள்.

 பஞ்சலிங்க அருவி:-

🌺🍃🌺🍃🌺🍃🌺🍃

   ஸ்ரீலஸ்ரீ சித்தர் சிவலிங்க சுவாமிகள் திருமூர்த்தி அருவியின் மேல் உள்ள பஞ்ச லிங்கத்தின் அருகே பல ஆண்டுகள் தவம் இயற்றி இறுதியில் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள கோலார்பட்டி என்னும் கிராமத்தில் உள்ள கந்தகிரி மலைமீது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து அங்கேயே தங்கி தவமியற்றி தம்மை  நாடிவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்கள்.

தவமே சிவம்:-

🔱🍃🔱🍃🔱🍃

    "சிவனருளால் சிலர் தேவரும் ஆவர்" எனும் திருமூலர் வாக்கிற்கிணங்க சிவனருளால்  "மகரிஷி சித்தர் சிவலிங்கசாமி" எனும்  திருநாமமும் பெற்று கொங்கு மண்ணில் 103 ஆண்டுகள் வாழ்ந்து தன் வாழ்நாளில் பாதிக்கு மேலாக 60 ஆண்டுகள் தவமே சிவமாக, சிவமே தவமாகத் தவ வாழ்வை மேற் கொண்டு வாழ்ந்த மகான் ஆவார்கள்.

சிவமே தவம்:-

🍁🍀🍁🍀🍁🍀

   மகரிஷி சித்தர் சிவலிங்க சுவாமிகள் தன் தவ வலிமையால் 50க்கும் மேற்பட்ட ஆலயங்களைக் கட்டி ஜோதி ஸ்வரூபனான சிவபெருமானுக்கு 27 சிவாலயங்களை உருவாக்கி அமைத்து சுவாமிகள் சிவ புண்ணியத்தைப் பெற்றார்கள்.

ஜீவ முக்தி:-

💥💥💥💥💥

   சுவாமிகள் 2015 ஆம் ஆண்டு தனது 103 ஆம் வயதில் ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பேரின்பப் பெரும் வீடுபேற்றை எய்தி சிவ ஞான ஜோதியில் இரண்டறக் கலந்தார்கள்.

ஜீவசமாதி:-

🌟🔥🌟🔥🌟

    🪷மனிதர்கள் தங்கள் பிறவிப்பயனால் வதைபடும் வல்வினைகள், ஜென்ம சாபங்கள், பாபங்கள், தீராத நோய்கள், கிரக தோஷங்கள் போன்ற தீய வினைகளைத் தீர்க்கும் ஜீவ ஆலயங்களாக ஜீவசமாதிகள் திகழ்கின்றன. மேலும் சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட  ஆலயங்களுக்கு இறை ஆற்றல் அதிகம் உண்டு.

   🪷 நாளை 08.08.2022 திங்கட்கிழமை  நடைபெறும் மகரிஷி சித்தர் சிவலிங்க சுவாமிகளின் குருபூஜையில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு "குருவழியாய குணங்களில் நின்று கருப்பழியாய கணக்கினை அறுத்திடுவோம்"

  🍃 குருவருளோடு, திருவருளையும் பெற்றிடுவோம்!🍃

அமைவிடம்:- 

🔆🔆🔆🔆🔆🔆

 🔥அருள் ஜோதிலிங்கேஷ்வரர் திருக்கோவில்,

கந்தகிரி மலை, கோலார்பட்டி சுங்கம்

பொள்ளாச்சி 

தொடர்பு கொள்ள:-

திரு.கோபால்சாமி, 

செல் :- 90957 62375                 *🪷மகரிஷி சித்தர் சிவலிங்க சுவாமி🪷

தவப் புதல்வன்:-

கோட்டூர் குருசாமி சித்தர்

 கோட்டூர் குருசாமி சித்தர்


கேட்ட வரம் அருளும் கோட்டூர் குருசாமி சித்தர்🌹🙏                                                ⭐சிவனை நினைத்து மனமுருகி சித்தன் ஆன ஒவ்வொருவரும் அருளும் வாக்குகள் தீர்க்கமானவை. சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடத்தை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. விருதுநகர் ஆர்.ஆர்.,நகரை அடுத்து கோட்டூரில் குருசாமி சித்தரின் கோயில் அமைந்துள்ளது. இளம் வயதிலே ஆன்மிகத்தில்ஈடுபாடு கொண்டிருந்ததால் துறவறம் பூண்டார் குருசாமி சித்தர்.


சதுரகிரி மலைக்கு சென்று அங்குள்ள சித்தர்களுக்கு தொண்டு செய்தார். 40 ஆண்டுகள் கழித்து மலையை விட்டு இறங்கி சொந்த ஊரான கோட்டூர் வந்தார். குடிசை வீட்டில் தினந்தோறும் தவம் செய்து கொண்டிருந்தார்.இவரிடம் குழந்தையின்மை, தீராத நோய்கள் உள்ளவர்கள் அருள்வாக்கு கேட்டு பயனடைந்து வந்தனர். அவர்களுக்கு மஞ்சள் கிழக்கு, ஆமணக்கு எண்ணெய் கொடுத்து அனுப்புவார். ஓரிரு நாட்களில் உடலில் உள்ள சகல வியாதிகளும் மறைந்து விடும். குழந்தை பேறு கிடைக்கும். ஒரு நாள் தனது தம்பி நாகப்பா குருசாமியிடம் ஜீவசமாதி அடைவதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தினார். அதன்படி, ஆடி மகம் அன்று ஜீவசமாதி அடைந்தார். ஒளி வடிவில் அருள்பாலிக்கிறார்.குருசாமி சித்தருக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. தான் ஏற்றி வைத்த தீபத்திலே சித்தராக காட்சி தருகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தீபம் அணையாமல் நாகப்பா குருசாமி குடும்பத்தினர் ஏழு தலைமுறையாக பராமரித்து வருகின்றனர். இக்கோயிலை சுற்றியுள்ள ஊர்களில் குருசாமி, குருவம்மாள் என தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்து வழிபடுகின்றனர். காரணம் இவர்கள் குருசாமி சித்தர் அருளால் குழந்தை பெற்றவர்களே. கோயிலில் தல விருட்சமாக பூவரச மரம் உள்ளது.


சகல நோய்களை தீர்ப்பார் குருசாமி சித்தர். சித்தர் அருளால் சிறப்பு கோயம்புத்துாரை சேர்ந்த 9 வயது குழந்தைக்கு மூளையில் கட்டி என பெற்றோர் வந்தனர். குருசாமியின் பெயர் சொல்லி அளிக்கப்பட்ட எண்ணெய் குழந்தையின் கட்டி கரைத்தது. அருப்புக்கோட்டை பாலவனத்தத்தை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கும் மூளையில் கட்டி இருந்தது. அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் கோயிலில் வந்து மொட்டையடித்து சென்றார். மறு நாள் ஸ்கேன் எடுத்து பார்க்கையில் கட்டி இருந்த இடம் தெரியாமல் போனது. இப்படி தன்னை நாடி வருவோருக்கு நலன்கள் யாவும் குருசாமி சித்தர் வழங்குவதால் அனைத்து தரப்பினரும் வணங்குகின்றனர்.

ஸ்ரீலஸ்ரீ சட்டி சுவாமிகள்

 ஸ்ரீலஸ்ரீ சட்டி சுவாமிகள் 


தமிழ்வேள் கந்தக்கடவுளே சித்தராக நின்றும்,பதினென் சித்தர்களுள் ஒருவரான போகர் நவபாஷாண முருகப்பெருமானை உருவாக்கிய பின்னர் தனது ஸ்தூலத் திருமேனியை மறைத்து அருளுயதாலும் பழனியம்பதிக்கு 'சித்தன் வாழ்வு' என்று ஒரு பெயரும் உண்டு. அத்தகைய பெருமை மிக்க பழனியம்பதியில்  அருட் தொண்டாற்றியவரே ஸ்ரீலஸ்ரீ சட்டி சுவாமிகள் ஆவார்.

அறப்பணிகள்:-

🏵️☘️🏵️☘️🏵️☘️

  ஸ்ரீலஸ்ரீ சட்டி சுவாமிகள் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள பொம்ம நாயக்கன்பட்டியில் பெரும் வசதி மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்தவராயினும் சுவாமிகளின் மனம் செல்வச் செழிப்பை வெறுத்து ஒதுக்கி துறவறத்தையே நாடியது. சித்தபூமியாம் பழனிக்கு வந்தடைந்த சுவாமிகள் தனது அறப்பணியைத் தொடங்கி முத்தாய்ப்பாக பழனிமலை அடிவாரத்தில் 'சரவணப் பொய்கை' எனும் பொய்கையை உருவாக்கி பழனிக்கு வரும் அடியவர்கள் அதில் நீராடிய பின் சுவாமி தரிசனம் செய்யும்படி வழிவகுத்தார்கள். அதன் படி சரவணப் பொய்கை மக்களிடையே முக்கியத்துவம் பெற்றதும் அதனைத் திருக்கோவில் நிர்வாகத்திடமே ஒப்படைத்தார்கள். அதற்குப் பிரதிஉபகாரமாக சுவாமிகள் பழனியம்பதியிலேயே தங்கியிருக்க ஒரு இடத்தையும் திருக்கோயில் நிர்வாகம் ஒதுக்கித் தந்தது.

  சுவாமிகள் அவ்விடத்தில் தங்கி இருந்தவாரே  பற்பல சித்தாடல்கள் புரிந்து வந்துள்ளார்கள். மண்சட்டியில் உணவு உண்ணும் வழக்கமுடைய சுவாமிகள் உணவு உண்டபின் அம்மண் சட்டியைத் தனது தலைமீது கவிழ்த்து வைத்துக் கொள்வார்கள்.அதனாலேயே சுவாமிகளைச் "சட்டி சுவாமிகள்" என மக்கள் அழைக்கலாயினர்.

அற்புதங்கள்:-

🌸🍃🌸🍃🌸🍃

 🚂பழனி மலை அடிவாரத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில்  தொடர்வண்டி (ரயில்) செல்லும் பாதையில் உள்ள 'சங்கிலி கேட்' என்னும் இடத்திற்கு சுவாமிகள் அடிக்கடி வருவாராம். அப்போது சுவாமிகள் விரும்பிச் செல்லும் இடத்திற்கு தொடர்வண்டிக்கு கை காட்டியதும்  நிற்குமாம்.வண்டி நின்றபின் அதில் ஏறிப் பயணித்துச் செல்வாராம்.அவ்விதம் ஒரு முறை செல்ல முயன்றபோது  தொடர்வண்டி  நிற்காது சுவாமிகளைக் கடந்து சென்றது.சில அடி தூரம் சென்றதும்  தொடர்வண்டி தானாகவே நின்று போனது. ஊழியர்கள் பல மணி நேரம் வெகுவாக முயற்சித்தும் இயங்க முடியாது நின்று போனது. பின்னர் தங்கள் தவறை உணர்ந்த ஊழியர்கள் சுவாமிகளிடம் மன்னிப்புக் கேட்ட பின்னர் சுவாமிகள் கை காட்டிய பின்னரே தொடர்வண்டி புறப்பட்டுச் சென்றது*

  🚂சுவாமிகள் சமாதி அடைந்து 95 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும் அவரது நடமாட்டத்தைத் தண்டவாளம் அருகில் மக்கள் உணர்கின்றனர். இன்றளவும் சட்டி சுவாமிகள் சூட்சும உருவில் அவரது சமாதிக் கோவில் அமைந்துள்ள இடத்திலிருந்து 'சங்கிலி கேட்' வரை வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர். இதனாலேயே மக்கள் அப்பகுதிக்கு "சித்தா நகர்"என்று பெயரிட்டு  ஞானாம்பிகை உடனுறை யோகீஸ்வரர் திருக்கோவிலையும் எழுப்பி வழிபட்டு வருகின்றனர்.

உபதேசம்:-

🌼🍂🌼🍂🌼

  சுவாமிகள் ஒருமுறை பழனி மலை அடிவாரத்தில் ஒரு ஆறு வயது சிறுவனை ஆட்கொண்டு அவனுக்கு உபதேசம் அளித்துள்ளார்கள். அவரே பிற்காலத்தில் மக்களால் போற்றப் பெற்ற 'பன்றிமலை சுவாமிகள்' ஆவார்.

பரிபூரணம்:-

💥🌺💥🌺💥

  ஸ்ரீலஸ்ரீ சட்டி சுவாமிகள் 1927 ஆம் ஆண்டு சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பரிபூரணம் ஆனார்கள். அப்போது பழனியில் இருந்த சாது சுவாமிகள் முன்னின்று சட்டி சுவாமிகளின் ஸ்தூலத் திருமேனியைக் குகை செய்வித்தார்கள்

தாமரை மொட்டு:-

🪷☘️🪷☘️🪷☘️🪷

 🪷ஸ்ரீலஸ்ரீ சட்டி சுவாமிகளின் சமாதியின் மீது கருங்கல்லால் ஆன சஹஸ்ரஹாரம் எனும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மொட்டு வடிவம் அமைத்து அதன் மீது உலோகத்தாலான சிறிய முருகன் சிலையையும் கிழக்குப் பார்த்தவாறு பிரதிஷ்டை செய்துள்ளனர்.

குருபூஜை:-

🍁☘️🍁☘️🍁

ஸ்ரீலஸ்ரீ சட்டி சுவாமிகளை சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் குருபூஜை தினமாக பூஜித்து வருகின்றனர்

அமைவிடம்:-

🏵️🍁🏵️🍁🏵️

 பழனி மலை அடிவார பகுதியில் வடக்கு கிரி வீதியில் தேவஸ்தான சிறு குடில்கள் பகுதியை அடுத்து சட்டி சுவாமிகளின் சமாதித் திருக்கோவில் வளாகம் உள்ளது.


ஓம் ஸ்ரீ சத்குரு ஆறுமுகசாமி

 ஓம் ஸ்ரீ சத்குரு ஆறுமுகசாமி 


ஶ்ரீஆறுமுக சித்தா் கொல்லம் ஆண்டு 959 (கி.பி.1784) சித்ரா பௌர்ணமியில், சுவாதி *நட்சத்திரத்தில் பிறந்தது ஆண் குழந்தை. முருகன் கருணையால் பிறந்த குழந்தை ஆதலால், ஆறுமுகனின் பெயரையே வைத்தனர். அந்தக் குழந்தையே, நூறு வயது பூவுடலுடன் இருந்து, சித்துகள் பல புரிந்து, புத்தரைப் போல், வள்ளலாரைப் போல் பௌர்ணமியில் தோன்றி பௌர்ணமியிலேயே ஸித்தியான *சித்தபுருஷர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள். சுவாமிகள் நூறு வயதை எட்டியதும்(கி.பி.1884), தாம் வந்த பணி நிறைந்துவிட்டதை உணர்ந்து, சமாதிக்கு தயாரானார். ஆனி மாதம் அனுஷம் கூடிய பௌர்ணமி நாளில், தான் எப்போதும் அமரும் நாற்காலியில் அமர்ந்தவாறே, சமாதி நிலை அடைந்தார். சமாதியில்  சிவலிங்கப் பிரதிஷ்டையும் ஆனது. தற்போது மூன்று சமாதிக்கொண்ட கோயிலாகக் காட்சி தருகிறது.                                  ▪️👉அமைந்துள்ள இடம் :தென்காசி மாவட்டம்,  செங்கோட்டையில் பழைய                             (காளீஸ்வரி) சினிமா தியேட்டர் அருகில் அதை ஒட்டி, சாலையில் வலப்புறம் ஆற்றுப் பாலத்துக்கு முன்னதாக ஒரு சிறிய சிமென்ட் பாததையில் சென்றால் ஶ்ரீஆறுமுக சித்தரின் ஜீவசமாதி ஆலயத்தை தரிசனம் செய்யலாம்

முத்து வடுகநாத சித்தர்

 முத்து வடுகநாத சித்தர்


முத்து வடுகநாத சித்தர் என்பவர் சிங்கம்புனரில் ஜீவ சமாதியடைந்த சித்தராவார். இவரைப் பட்டூர் வாத்தியார், வடுகநாத சித்தர் என்றும் அழைக்கின்றனர். இவருடைய ஜீவ சமாதியில் உள்ள சிலை, மனிதர்களுக்குப் போல வேர்க்கிறது என்ற நம்பிக்கை நிலவுகிறது.

முத்துவடுகநாதர் ராமநாதபுர சமஸ்தான மன்னர் முத்து விஜய ரகுநாத சேதுபதியின் மகளுக்குப் பிறந்த பூவலத் தேவன் - குமராயி தம்பதியினருக்கு மகனாக கிபி 1737 ஆம் பிறந்தார். பூவலத் தேவன் இறந்தபிறகு, கலகக்காரர்களால் முத்து வடுகநாதரின் உயிருக்கு ஆபத்து வந்தது. இதனை பணியாட்கள் மூலம் அறிந்த குமராயி அங்கிருந்து பாலமேட்டிற்கு குடிபெயர்ந்தார். இளவதிலேயே சித்து வேலைகளை செய்து மக்களிடம் வியப்பினை ஏற்படுத்தினார்.

பட்டூர் குருகுலத்தில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பட்டூர் அருகேயுள்ள சிங்கம்புனரியில் சூனியக்கார கூட்டமொன்று மற்ற பரிவாரத் தெய்வங்களையும், ஊர் தெய்வங்களையும் கட்டிப்போட்டு மக்களை துன்புருத்தினர். அதனையறிந்த முத்து வடுகநாதர், மாந்திரீக சித்திகளில் வென்று மக்களை காத்தார்.

ஶ்ரீசித்தானைக்குட்டி சுவாமி

 ஶ்ரீசித்தானைக்குட்டி சுவாமி


சித்தானைக்குட்டி சுவாமிகள் (இ. ஆகத்து 1951) ஈழத்தில் ஆன்மீக சாதனைகளில் சிறந்து விளங்கிய சித்தர்களில் ஒருவர்.


வாழ்க்கைக் குறிப்பு

இவரது இயற்பெயர் கோவிந்தசாமி என்பதாகும். இவரை தமிழ் நாடு, இராமநாதபுரம் மாவட்டம் பெருநாளி சமஸ்தானத் தலைவரின் புதல்வர் என்றும் கூறுவர். தமது சமஸ்தானத்தில் ஏற்பட்ட தொற்றுநோயைத் தடுக்க முயன்ற நவநாத சித்தரையும் பெரியானைக்குட்டி சுவாமிகளையும் சந்தித்தவர் அவர்களோடு கொழும்பு வந்தார். குருவான பெரியானைக்குட்டி சுவாமிகளின் ஆணைப்படி முன்னேசுவரம் சென்று அங்கு தங்கி பல சித்த சாதனைகள் புரிந்தார். தனது குரு சமாதியடைந்ததைத் தொடர்ந்து அவர் கதிர்காமம் சென்று திஸ்ஸமகாராமை என்ற இடத்தில் சிறிது காலம் தங்கி மட்டக்களப்பை அடைந்தார்.


சமாதி

காரைதீவிலே 1951 ஆம் ஆண்டில் சமாதி அடைந்தார். இவருடைய சமாதி கோயிலில் ஆண்டு தோறும் ஆடிச் சுவாதி நட்சத்திரத்தில்  குருபூசை சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

பின் நாக்கு சித்தர்

 பின் நாக்கு சித்தர்


⭐இறைவனின் கிருபையையும், அருளையும் மறுத்துரைப்பவர்கள் மற்றும் பொய் சொல்பவர்களின் நாக்கு புண் பொருந்திய நாக்கு, எனக்கூறியவர் தன்னாச்சி அப்பன் சித்தர். 18 சித்தர்களில் ஒருவரான *இவரை முனிவர் என்றும், புண் நாக்கு சித்தர் என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் புண்ணாக்குச் சித்தர் என்று பெயர் மருவியது. இவர், தனது நாக்கை பின்புறமாக மடித்து, அருள்வாக்கு சொல்லி வந்ததாலும், இவர் பின்நாக்கு சித்தர் என அழைக்கப்பட்டு புண்ணாக்கு சித்தராக மாறியிருக்கலாம் என்றும் சொல்வர். சித்தராக வானவீதி வழியாக பறந்து வந்த இவர், நிலையாக இவ்வால யத்தில் இருந்து, சென்னிமலை சுப்ரமணியரை நினைத்து, யோக நிலையில் தவம் புரிந்தார். பின் சென்னிமலையிலேயே, புண்ணாக்குச் சித்தர் ஜீவச மாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த பின், அவருடைய சிலையை, பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.ஆண்டி வடிவில் அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம், தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணாக்குச் சித்தர். சென்னிமலையில், 1,740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோயிலில், இவர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சந்நிதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முக மாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக இது விளங்குகிறது. இக்குகை, பழநி வரை நீண்டு செல்வதாகவும் நம்பப்படுகிறது.

தவத்திரு மலையம்மையார்


தவத்திரு மலையம்மையார் 

 🔱 புண்ணியம் மிகுந்த பாரத கண்டத்தில் தொண்டை நன்னாடு எனச் சிறப்புற வேலூர் மாவட்டம், குடியேற்றம் தாலுக்கா, காங்குப்பம் கிராமம் சமீபம்,  மேலைக் கழுக்குன்றம் என மகான்கள் தவம் புரிய மேன்மையான அருள்மிகு மகாதேவ மலையில் மலையம்மையாா் ( ரத்தினத்தம்மா) அவர்கள்  10-ஆண்டுகள் தவம் புரிந்தவா். அம்மையாா்  திருச்சி ஸ்ரீ மணிவாசகர் சுவாமிகளின்  சீடராவார்.       ஶ்ரீதேவானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் அம்மையாரின் திருச்சமாதி அமைந்துள்ளது. இடம்:வேலூரிலிருந்து காட்பாடி வழியாக குடியாத்தம் செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள மகாதேவ மலை அடிவாரம்ஶ்ரீதேவானந்த ஆஸ்ரமத்தில் அம்மையாரின் சமாதி அமைந்துள்ளது.