Tuesday, 30 August 2022

அமலானந்த சுவாமிகள் 72-வது ஆண்டு குருபூஜை

 



அமலானந்த சுவாமிகளின் 72-வது ஆண்டு குருபூஜை விழா
இன்று 30.08.2022 செவ்வாய்க்கிழமை🌹🙏
                                                                                             ~~~~~~~~                    
🔅சுவாமிகள் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் இடைக்கால் என்னும் ஊரில் அவதரித்தவா். இளம் பருவத்திலே இவருக்கு  உலக விஷயங்களில் நாட்டமின்றி ஆன்மீக உணா்வில் தமது பொழுதைக் கழித்தாா். வேலூா் மாவட்டம்  ஆற்காடு சத்குரு கெங்காராம் சுவாமிகளிடம் சென்று அவரைத்தாம் குருவாக ஏற்றுக்கொண்டாா். அங்கே தம் குருவினிடத்தில் கைவல்யம், விசாரசாகரம் போன்ற பல வேதாந்த நூல்களைத் கற்று தோ்ந்து பரிபக்குவம் பெற்றாா். சுவாமிகள் நவகண்ட யோகி ஆவாா்.இவரின் இயற்பெயா் அருணாச்சலம். பல சித்துக்களை செய்தாா். சுவாமிகள் ஞானோபதேசம் செய்துவிட்டு பரிபூரணமடைந்த தினம்,06.09.1951.🌹🙏                                                               
*▪👉சமாதி அமைந்துள்ள இடம்: வேலூா் மாவட்டம், அரக்கோணத்திலிருந்து நெமிலி, ஒச்சேரி செல்லும் பாதையில், நாகவேடு என்ற ஊரில் மெயின் ரோட்டில் சமாதி உள்ளது.


No comments:

Post a Comment