Friday, 23 August 2013

கசவன மௌன ஜோதி நிர்வாண சுவாமிகள்

                       கசவனம்பட்டி சித்தர்

                    

           ஓம் கசவன மௌன ஜோதி நிர்வாண சுவாமியே நமஹ

நம் நாடு ஒரு புண்ணிய பூமி என்பதில் ஐயமில்லை. எண்ணற்ற சித்தர்கள் அவதரித்த, நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் சித்தர்கள் நிறைந்த பூமி. அவர்கள் தாங்கள் வந்த நோக்கத்தினை நிறைவேற்றி, மக்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்து பிறகு, பரம்பொருளுடன் ஐக்கியமாகின்றனர்.
அப்படி வந்த மகாந்தான் கசவனம்பட்டி சித்தர். இவர் எப்பொழுது பிறந்தார், எங்கிருந்து வந்தார் என ஒருவரும் அறியார்.  நிர்வாணமாக பதினோரு வயது சிறுவனாக கசவனம்பட்டி கிராம மக்களால் அறியப்பட்டுப்பின் அங்கேயே தங்கிவிட்டவர்.  இறுதி வரை இயற்கை அன்னை அவரை வடித்த உருவிலே ஆடை எதுவுமின்றி வாழ்ந்து சமாதியடைந்தவர்.

சுவாமிகள் பேசி ஒருவரும் கேட்டதில்லை.  ஆனால் அவர் பார்வை ஒன்றேபோதும் பக்தர்களின் துயர் துடைக்க. அவரை மனதில் நினைத்து நம் துன்பங்களைக் கூறினால் போதும். நம் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பார்.

கசவனம் சித்தரின் மற்ற விபரங்கள் www.kasavanam-siddhar.org  என்ற வலைதளத்தில் காணலாம்.






No comments:

Post a Comment