Thursday, 28 May 2015

சுவாமி சிவானந்தர்


                                                                 swami shiva28


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். மலேசியாவில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் குறித்து, அந்த நாட்டு மக்கள் அதிசயத்துடன் பேசிக்கொண்டனர். அந்த மருத்துவர் பொருளீட்டியதை விட, ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டோ செய்த மருத்துவச் சேவையே அதிகம் ! வியாதியுடன் அவரிடம் வந்த அனைவருமே நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். அத்தனை கைராசியுள்ள மருத்துவர் அவர். ஆனால், மக்கள் அதிசயிக்க இவை எதுவும் காரணமல்ல ! மருத்துவத்தைச் சேவையாகப் பார்த்த அதே வேளையில், அவரது உள்ளத்தில் வேறொரு விநோத சிந்தனை குடி கொண்டிருந்தது. மக்களின் உடல் உபாதைகளை என்னால் தீர்த்து வைக்க முடிகிறது. ஆனால், இதனால் மட்டுமே அவர்களின் துயரங்கள் அனைத்தும் மறைந்துவிடவில்லை. வாழ்வில், நிம்மதியும் ஆனந்தமும் அவர்கள் அடைவதில்லை. ஆக வியாதிகளைக் குணமாக்குவது மேம்போக்கான தீர்வு. உலக பந்தங்களில் கட்டுண்டு உழலும் அவர்கள் உண்மையிலேயே விடுதலை பெறவும், ஆனந்த வாழ்வும் அவர்களின் ஆன்ம நலத்தைப் பேணுவதே சிறந்த வழி ! எனத் தீர்மானித்தார். இந்தச் சிந்தனையே, தமிழ் மண்ணில் தோன்றிய அந்த மருத்துவ நிபுணரை, மனித குலத்துக்கு நல்வழி காட்டிய மகானாக உயர்த்தியது. அவர்தான் சிவானந்த சரஸ்வதி. திருநெல்வேலி மாவட்டத்தில், பத்தமடை எனும் ஊரில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த வேம்பு ஐயருக்கு, 1877-ஆம் வருடம், செப்டம்பர் 8-ஆம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. குப்புஸ்வாமி என்று குழந்தைக்குப் பெயர் சூட்டி, அன்புடன் வளர்த்து வந்தார், வேம்பு ஐயர். எட்டயபுரம் ராஜா உயர்நிலைப்பள்ளியில் பயின்ற குப்புஸ்வாமி, கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.
1903-ஆம் வருடம், மெட்ரிகுலேஷன் தேர்வில் சிறப்புறத் தேறினான். பிறகு, திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து, 1905-ஆம் வருடம், தஞ்சை மருத்துவக் கழகத்தில் பயின்று மருத்துவரானார். இந்தக் கால கட்டத்தில், அவரின் தந்தை இறந்துபோனார். குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படவே, 1913-ஆம் வருடம், மருத்துவப் பணி செய்து சம்பாதிக்கலாம் என மலேசியா சென்றார் குப்புஸ்வாமி. வறுமை காரணமாக வேலையில் சேர்ந்தாலும், எளியோரின் துயர் போக்கும் பணியாகவே மருத்துவத் துறையைப் பார்த்தார் அவர். ஐரோப்பிய மருத்துவர்கள் சிலருடன் இணைந்து, மருத்துவமனை ஒன்றை நிர்வாகித்தார். பயனுள்ள மருத்துவ நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவரின் மருத்துவச் சேவையைப் பாராட்டி, லண்டனில் ராயல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஹெல்த், ராயல் ஏஷியாடிக் கழகம் முதலான புகழ்மிக்க சங்கங்கள், அவரை உறுப்பினராக நியமித்துக் கௌரவித்தன. உடல் பிணி தீர்க்கும் மருத்துவம் பார்த்து வந்தவருக்கு, மக்களின் மன ஆரோக்கியம், ஆன்ம பலம் குறித்த சிந்தனை எழுந்தது. யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கினார். 


1923-ஆம் வருடம், இந்தியா திரும்பி, காசி, நாசிக், பண்டரிபுரம், ஹரித்வார் ஆகிய தலங்களில் அலைந்து திரிந்தார். பிறர் கொடுப்பதை உண்பது, கிடைத்த இடத்தில் உறங்குவது எனப் பற்றற்ற வாழ்க்கை நடத்தியவர், ரிஷிகேஷ் தலத்தில், சுவாமி விஸ்வானந்த சரஸ்வதி என்ற மகானிடம் உபதேசம் பெற்று, 1924-ஆம் வருடம் ஜூன் 1-ஆம் தேதி, சுவாமி சிவானந்த சரஸ்வதி எனும் திருநாமத்துடன் துறவறம் பூண்டார். இமயமலை அடிவாரத்தில், கங்கைக் கரையில் உள்ள ரிஷிகேஷில் பல வருடங்கள் தங்கி, ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டார்.


அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று முதிர்ச்சி அடைய, அதிலிருந்து வந்த பணத்தைக் கொண்டு, 1927-ஆம் வருடம், கங்கைக் கரையிலேயே மருத்துவ சேவை மையம் ஒன்றைத் துவங்கி, ஏழைகள், யாத்ரீகர்கள், சாதுக்கள் ஆகியோருக்கு இலவச சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். பிறகு, தாம் அறிந்து உணர்ந்த உண்மைகளை, ஆன்மிகப் பயிற்சிகளின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். 


வட யாத்திரையை முடித்தவர், ராமேஸ்வரம், புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம், திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமம் ஆகிய தலங்களுக்கு விஜயம் செய்தார். பிறகு, மீண்டும் ரிஷிகேஷ் வந்தவர், 1934- ஆம் வருடம், மார்ச் மாதம், உபயோகிக்கப்படாத மாட்டுக் கொட்டகை ஒன்றில், ஆனந்தக் குடிசை எனும் பொருள்படும் ஆனந்தக் குடிர் எனும் எளிய ஆஸ்ரமத்தைத் துவக்கினார். பிறகு, மெள்ள மெள்ள சிகிச்சைகள், மருந்தகங்கள், ஆலயங்கள், தியான மையங்கள், ஆன்மிகப் பத்திரிகை அச்சகங்கள், புத்தக வெளியீட்டு மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புனித வாழ்க்கை சங்கம் எனும் மிகப் பெரிய ஆன்மிகத் தொண்டு நிறுவனமாக அது வளர்ந்தது. சுவாமி சிவானந்தர் எழுதிய சுமார் 296 நூல்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலக மக்களுக்கு வழிகாட்டுகின்றன. ஆஸ்ரமத்துக்குக் கிடைக்கிற நன்கொடைகளை, மருத்துவச் சேவை, அன்னதானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுத்தி, பொருளாசையின்றி வாழ்வது குறித்து வாழ்ந்து காட்டினார். சுவாமிகள், தன்னை அறிந்துகொண்டு, விடுதலை பெறு, நல்லதைச் செய், அதை உடனே செய் எனும் எளிய போதனைகளால் மக்களின் மணம் கவர்ந்தார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சுவாமி சிவானந்த சரஸ்வதி, 1963-ஆம் வருடம், ஜூலை 14-ஆம் தேதி, கங்கைக் கரையில், இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.

பாடகச்சேரி ராமலிங்க ஸ்வாமி


                                                  Padagacheri1.png

மகான்களின் அவதார நோக்கமே பலருடைய பிணிகளைத் தீர்ப்பதற்காகத்தான். இதற்காகத் தங்களின் நலம் கருதாமல், செயல்படுபவர்கள் மகான்கள். மனிதன் என்பவன் மகான் ஆவதற்கு நல்ல குரு வேண்டும். அவரது உபதேசம் சிறக்க வேண்டும். மகான் ஆவதற்குரிய குணங்கள் இவனுக்கு இருக்கிறதா என்பதை நல்ல குருவானவர் ஆய்ந்து அறிவார். அப்படித்தான் பாடகச்சேரி சுவாமிகளுக்கு நல்ல குரு வாய்த்தார். ஆந்திராவில் இருந்தபோது எரிதாதா சுவாமிகள் இவரை ஆட்கொண்டார். யோக ரகசியங்களைச் சொல்லிக் கொடுத்து, சுவாமிகளுக்குப் புடம் போட்டார். கும்பகோணம் வந்த பிறகு வடலூர் வள்ளலார் சுவாமிகள் சூட்சுமமாக இவரை ஆட்கொண்டார், அருட்பா பாடிய ராமலிங்க ஸ்வாமி அவர்களே இவ்வுருமாகி திருப்பணி செய்யும் விருப்பமுற்றாரோ என்கிறது பாடகச்சேரியாரின் துதிப் பாடல்.

பாடகச்சேரி சுவாமிகள் யோகங்களைக் கற்றவர். இறைப் பணிகளை மேற்கொண்டவர், பலருடைய பிணிகளைத் துரத்தியவர். இறந்ததாக் கருதப்பட்ட சிலரை உயிர்ப்பித்துப் பிறரை ஆச்சரியப்பட வைத்தவர், இவரது ஜீவன் இன்று சென்னை திருவொற்றியூரிலே ஐக்கியம் ஆகி இருந்தாலும், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் இவர் உருவாக்கிய பாதாள அறையிலும் ஜீவன் இருப்பதாக சுவாமிகளே அருளி இருக்கிறார்கள் என்கிறார்கள் அவரின் பக்தர்கள். ஜீவ சமாதி என்பது ஓர் அடையாளம்தான்! மானுட ஜீவனா அது ஓர் இடத்தில் மட்டும் அடங்கிக் கிடப்பதற்கு? எங்கும் நிறைந்திருக்கிறார் பாடகச்சேரி சுவாமிகள். இன்றைக்கும் தன் பக்தர்கள் எவருக்கு ஒரு துயர் வந்தாலும், விரைந்தோடி வந்து அதைக் களைகிறார்.

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் வீரசைவ ஜங்கமர் பிரிவில் அவதரித்தவர், சுவாமிகளின் தந்தையார் பெயர் - கந்தசாமி ஐயா. தாயாரின் பெயர் - அர்த்தநாரி அம்மை. ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள உறவுகொண்டா (உருவிகொண்டா) இவர்களது சொந்த ஊர் பிற்பாடு இவர்கள் அங்கிருந்த கோவை மாவட்டத்தில் உள்ள மஞ்சம்பாளையத்துக்குக் குடிபெயர்ந்து அங்கே வசிக்கத் தொடங்கினர். கிராமத்தில் வசித்து வருபவர்கள் வீட்டில் சுப காரியங்கள் தொடங்கினர். கிராமத்தில் வசித்து வருபவர்கள் வீட்டில் சுப காரியங்கள் நடத்தி வைத்தாகவும் திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்தி, பலருக்கும் கல்வி அறிவைப் புகுத்தியதாகவும் சுவாமிகளின் குடும்பம் பற்றிச் சொல்லப்படுகிறது. சிறு வயதிலேயே சுவாமிகள். தன் தாய்-தந்தையரை இழந்துவிட்டதால். அந்தப் பருவத்திலேயே துறவை மேற்கொண்டு விட்டார். 


கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம், மன்னார்குடி செல்லும் சாலையில் வலங்கைமானை அடுத்து. குரு ஸ்தலமான ஆலங்குடிக்கு இரண்டு கி.மீ. முன்னால் வரும் ஊர்-பாடகச்சேரி. மெயின்ரோட்டில் இறங்கிக்கொண்டு, வலப் புறம் செல்லும் சாலையில் காலார இரண்டு கி.மீ. தொலைவு நடந்து சென்றால் பாடகச்சேரி சுவாமிகளின் திருக்கோயில் வரும். கும்பகோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ தொலைவு. வலங்கைமானில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவு. ஆலங்குடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு. இந்த ஆலயத்தில் வள்ளலார் சுவாமிகள், பாடகச்சேரி சுவாமிகளின் குருவான எரிதாதா சுவாமிகள் மற்றும் நேபாள் மன்னரும் பைரவ உபாசகருமான ராஜாராம் சுவாமிகள், சுவாமிகளின் சம காலத்தவரான சரவணாநந்த பவ, அப்புடு சுவாமிகள் ஆகியோருக்குத் திருவுருவங்கள் உண்டு. பாடகச்சேரி சுவாமிகள் தான் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய சில பொருட்கள் இங்கே இருக்கின்றன.

பெல்லாரியில் செள்ளகுரிக்கி என்கிற இடத்தில் வசித்து வந்த எரிதாதா சுவாமிகளின் சீடராக சில காலம் இருந்து அவரது உத்தரவுப் படி தென்னாடு (கும்பகோணம்) வந்தவர் பாடகச்சேரி சுவாமிகள், பாடகச்சேரியில் பல ஆண்டுகள் இருந்தமையால் பாடகச்சேரி சுவாமிகள் ஆனார். நேபாள மன்னரும் பைரவ உபாசகருமான ராஜா ராம் சுவாமிகள். இவருக்கு பைரவ உபதேசம் செய்து வைத்தார். பாடகச்சேரியில் தான் இருந்த காலத்தில் பைரவ வழிபாட்டைத் தினமும் நடத்தி மகிழ்வாராம். சுவாமிகள். பைரவ வழிபாடு என்பது ஏதோ பூஜை, புனஸ்காரம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது தினமும் ஏராளமான நாய்களைக் கூப்பிட்டு சாப்பாடு போடுவது. சுவாமிகளின் கருத்துப்படி இவை எல்லாம் நாய்கள் அல்ல.... நாய் உருவில் இருக்கும் தேவர்கள் என்பாராம். பைரவ வழிபாட்டுக்கு முதல் நாள் மாலை பாடகச்சேரிக்கு அருகில் இருக்கும் ஆலங்குடி, செம்மங்குடி, புளியங்குடி, அம்ருதவல்லி போன்ற கிராமங்களுக்குச் சென்று அங்கு இருக்கும் நாய்களுக்குத் தகவல் சொல்லிவிட்டு வருவாராம் சுவாமிகள்.

மறுநாள் மதியம் சுமார் முந்நூறு பேருக்கு ஆகும்படி சமைக்கச் சொல்வார். வடை, பாயசம் என்று சமையல் திமிலோகப்படும். இவ்வளவு பேருக்கு சாப்பாடு சொல்கிறாரே? யார் வந்து சாப்பிடப் போகிறார்? இந்தப் பகுதியே பொட்டல்காடாயிற்றே! என்று சமையல் செய்யும் அன்பர்கள் ஆரம்பத்தில் குழம்பினார்களாம். பின்னர்தான், விவரம் அறிந்து வியந்தார்கள். சமையல் முடிந்ததும். அந்த இடத்தில் வாழை இலையை விரித்து. மனிதர்களுக்குப் பரிமாறுவது போல் அனைத்து அயிட்டங்களும் வைக்கப்படும். தன் கையில் வைத்திருக்கும் ஒரு கோலால் தரையைத் திடீரென்று  சுவாமிகள் தட்டிய மாத்திரத்தில், எங்கிருந்துதான் வருமோ தெரியாது.... சுமார் நூற்றுக்கணக்கில் நாய்கள் வந்து இலையின் முன்பாக சமர்த்தாக அமர்ந்து கொள்ளும். இதை வேடிக்கை பார்க்க வந்திருக்கும் கிராமவாசிகளுக்கு இவை எல்லாம் நாயாகத் தெரியுமே தவிர, சுவாமிகளுக்கு மட்டும் அனைத்தும் மனிதர்களாகவே தெரியவார்களாம்.

சுவாமிகளின் சொன்ன பேச்சுக்கு அனைத்து நாய்களும் கட்டுப்படுமாம். சுத்தமாக அனைத்து பதார்த்தங்களையும் சாப்பிட்டு முடித்த பின், சுவாமிகளிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு. நாய்கள் புறப்பட்டுவிடுமாம். இப்போதும் பல நாய்கள், பாடகச்சேரியின் இந்தத் திருக்கோயில் பக்கம் உலவி வருகின்றன. இங்கு வரும் பக்தர்களும் இந்த நாய்களை மிகவும் மதித்து, அவற்றுக்கு ஏதேனும் உணவளித்து மகிழ்கிறார்கள். தங்களது பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டியும் வியாதிகள் அகல வேண்டியும் சுவாமிகளிடம் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். ஆபத்சகாயம் என்று சொல்லி அவர்களது நெற்றியில் திருநீறு பூசுவார். அவ்வளவுதான்.... அடுத்த நொடியே அவர்களை பீடித்திருந்த பிணிகள் பஞ்சாகப் பறந்துவிடும்.

தனது 12 வயதில் சுவாமிகள் பாடகச்சேரிக்கு வந்தார் என்று சொல்லப்படுகிறது. எரிதாதா சுவாமிகளின் அறிவுரைப்படி இங்கே வந்ததும் பட்டம் என்கிற கிராமத்தில் மாடுகளை மேய்க்கும் வேலையில் சேர்ந்தார். பாடகச்சேரியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கும் கிராம-பட்டம் இந்தக் கிராமத்தில் இருக்கும்போதுதான் சூட்சும ரூபமாக வடலூர் வள்ளலார் சுவாமிகள் வந்து ஞான உபதேசம் செய்து வைத்தாக பாடகச்சேரி சுவாமிகளின் பக்தர்கள் சொல்கிறார்கள். நவகண்ட யோகம் சுவாமிகளுக்கு அப்போதுதான் சித்தி ஆகி இருந்தது. அதாவது உடலை ஒன்பது பாகங்களாக - துண்டு துண்டுகளாக்கி செய்யப்படுகிற ஒரு சித்து வேலை அது. மாடு மேய்க்கும் பணி முடிந்ததும். உடனே இருப்பிடத்துக்குத் திரும்பாமல் ஒரு நாள் நவகண்ட யோகத்தில் இருந்திருக்கிறார் சுவாமிகள். மாடுகளுக்குச் சொந்தக்காரரான  பண்ணையார் இருள் நெருங்கிற வேளை வந்தும் தன்னிடம் வேலை பார்க்கும் சிறுவன் (சுவாமிகள்) இன்னும் மாடுகளுடன் திரும்பவில்லையே என்று கவலைப்பட்டு வேலைக்காரர்களை அனுப்பித் தேடச் சொல்லி இருக்கிறார். அதன்படி, மாடுகளை மேய்க்கும் இடத்துக்குப் போன வேலைக்கார ஆட்கள், சுவாமிகள் கண்டம் துண்டமாக இருக்கும் நிலையை பார்த்து அலறிப் போய். சிறுவனை யாரோ வெட்டிப் போட்டுவிட்டார்கள் என்று பதைபதைத்துப் பண்ணையாரிடம் விஷயம் சொல்வதற்காக அரக்கப் பரக்கத் திரும்பி இருக்கிறார்கள்.

வேலைக்கார ஆட்கள் வீடு திரும்பி பண்ணையாரிடம் நடந்ததைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது மாடுகளுடன் அங்கே வந்து விட்டார் சுவாமிகள். அதன் பிறகுதான், தன்னிடம் வேலை பார்க்கும் சிறுவன் சாதராண ஆள் இல்லை... ஒரு மகான் என்பதை பண்ணையார் உணர்ந்தார். பெரிய கும்பிடு போட்டு, தம்பி.... நீ யாரென்று தெரிந்த பிறகும் உன்னை வேலையில் வைத்துக்கொண்டால், எனக்குப் பெரிய பாவம் வந்துவிடும் என்று மரியாதை செய்து அனுப்பி வைத்து விட்டார். அதன் பிறகு, பாடகச்சேரியிலேயே வெட்டாறுக்கு எதிர்த் திசையில் ஓரிடத்தில் வேல் நட்டு, முருகன் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தார். சுவாமிகள். அப்போது அந்த ஊரில் தவறான காரியங்களில் பலரும் ஈடுபட்டு வந்தனர். அவர்களை எல்லாம் அவ்வப்போது கூப்பிட்டுக் கண்டிக்க ஆரம்பித்தார் சுவாமிகள். சுவாமிகளின் இந்த நடவடிக்கை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. நம்மைக் கண்டிக்க இவன் யார்? என்று வெகுண்டெழுந்த எதிரிகள் அனைவரும் ஒன்று கூடிப் பேசினர். அவர்களில் ஒருவன், அவனை நாம் வெட்டிச் சாய்த்துவிடலாம் என்று கூற.. கைக்கூலிகள் அனைவரும் இதற்கு உடன்பட்டனர். அதன்படி ஒரு நாள் சுவாமிகள் இருக்கும் இடத்துக்கு ஆயுதங்களுடன் வந்து சேர்ந்தனர். அந்த நேரம் பார்த்து சுவாமிகள் நவகண்ட யோகத்தில் இருந்தார். வெட்டிப் போடுவதற்காக வந்த ஆசாமிகள் இதைக்கண்டு மிரண்டனர். டேய்.... யாரோ ஒருத்தன் நம்மளையும் முந்திட்டான் போலிருக்கு. பையன் காலி ஆயிட்டான். நம்ம பாடு இனி கொண்டாட்டம்தான் என்று சொல்லி அந்த இடத்தை விட்டுக் கிளம்பினர். சற்று தூரம் அவர்கள் போன பின் அவர்களுக்கு எதிரே வந்த சுவாமிகள், என்னடா.... என்னை எவனோ வெட்டிப் போட்டுட்டதா சந்தோஷப்படறீங்களா? என்று பெரும் சிரிப்புடன் கேட்டபோது ஆடிப் போனார்கள்.

இதன் பிறகு. சுவாமிகளுக்கு பாடகச்சேரியில் இருக்கப் பிடிக்கவில்லை. கும்பகோணத்துக்கு கிளம்பி வந்துவிட்டார். அங்கே காரைக்கால் சாலையில் இருக்கும் முத்துப்பிள்ளை மண்டபம் என்னும் இடத்தில் தங்கினார். யோகம், தலம் போன்றவற்றை மேற்கொண்டார். அப்போது பஞ்சம் தலைவிரித்தாடியது. எனவே கூழ் சாலை ஒன்றைத் துவக்கினார். பசியுடன் வந்தவர்களின் துயரம் தீர்த்தார் ராமநாதபுரத்தில் விஜயபுரம் பகுதியில் வசித்து வந்தவர் - ஆதப்ப செட்டியார். குன்ம (குஷ்டம்) நோயால் இவர் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் செய்து பார்த்தார். பலன் இல்லை. இறுதியில், தான் வணங்கும் முருகப் பெருமானிடம் மன்றாடி வேண்டிக்கொண்டார். அன்றைய தினம்இரவு முருகுப் பெருமான் அவரது கனவில் தோன்றி, பாடகச்சேரியில் ராமலிங்கம் என்கிற சித்தன் ஒருவன் இருக்கிறான். அவன் என் பக்தன். அவனிடம் போய் உன் குறையைச் சொல் என்று சொல்லி மறைந்தார். கனவு கண்டு குதூகலமான ஆதப்ப செட்டியார், பாடகச்சேரி இருக்கும் இடத்தை விசாரித்து இங்கே வந்து சேர்ந்தார். சுவாமிகள் கும்பகோணத்தில் இருக்கும் விஷயத்தை அறிந்து அங்கு வந்து சந்தித்தார். ஒரு குளிகையை செட்டியாரிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். முருகப் பெருமானையும் சுவாமிகளையும் பிரார்த்தித்துக்கொண்டே அதை உட்கொண்டார் செட்டியார். என்ன ஆச்சிரியம்! அவரது உடலில் குன்ம நோய் இருந்ததற்கான அடையாளங்களே இல்லை. அத்தனையும் மறைந்து போய், ஜொலிக்கும் தேகத்துடன் காட்சி தந்தார் செட்டியார்.

இதில் மனம் மகிழ்ந்த செட்டியாரின் மகன்களான ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும் சுவாமிகளிடம் வந்து. உங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும். என்ன தேவை. கேளுங்கள் என்றனர். பாடகச்சேரியில் தான் பூஜித்த இடத்தில் ஒரு மடம் கட்டித் தரும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி பாடகச்சேரியின் சுவாமிகள் இருந்தற்கான நினைவுகளைச் சொல்லும் முதல் கட்டடம் அப்போதுதான் எழும்பியது. அதன் பிறகு சுவாமிகளின் உத்தரவின் பேரில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் நடராஜர் சந்நிதியைக் கட்டிக் கொடுத்தனர். சுவாமிகளின் தன் காலத்தில் பல திருத்தலங்களுக்குக் கும்பாபிஷேகம் செய்து வைத்துள்ளார். இதில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தஞ்சை கீழ வாசல் வெள்ளை விநாயகர், சென்னை கிண்டி ஸ்ரீமுனீஸ்வரர், திருச்சி உச்சிப்பிள்ளையார், புன்னநல்லூர் மாரியம்மன். கும்பகோணம் நாகேஸ்வரன் ஆகிய திருத்தலங்களைச் சொல்லலாம்.

இவற்றில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலுக்கு சுவாமிகள் திருப்பணி செய்த விதம் மிகவும் சுவாரஸ்யமானது. கும்பகோணத்தில் இவர் தங்கி இருந்த நாட்களில் ஒரு நாள் தேவராப் பாடல் பெற்ற திருத்தலமான நாகேஸ்வரன் ஆலயத்துக்குச் சென்றார். செடி கொடிகள் மண்டிப் போய், ஆலயப் பிரதேசமே ஒரு காடாகக் காட்சி தந்தது. மனம் வெதும்பினார் சுவாமிகள் . எப்படியாவது இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சபதம் ஏற்றார். திருப்பணிக்காக பக்தர்களிடம் இருந்தே பணம் வசூலிக்கத் தீர்மானித்தார். தும்பைப்பூ மாதிரி இருக்கும் வெள்ளை வேஷ்டி ஒன்றை இடுப்பில் சுற்றிக்கொண்டு ஒரு மேல்துண்டை உடல் மேல் போர்த்திக்கொண்டும் 
இடுப்பில் ஒரு பித்தளைச் சொம்பைக் கயிற்றால் கட்டிக்கொண்டும். நமசிவாய நாமம் சொல்லி வீதி வீதியாக அலைவாராம். சுவாமிகளைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த ஆன்மிக அன்பர்களும் வியாபாரிகளும் சில்லறை நாணயங்களைச் சொம்பில் போடுவார்கள். யாரிடமும் இவ்வளவு கொடுங்கள் என்று சுவாமிகளாக எதுவும் கேட்டதில்லை.

வள்ளலாரின் ஆசி பெற்றவர் என்பதால், சுவாமிகளுக்குப் பல வித்தைகள் தெரியும். இவர் நினைத்திருந்தால் ஓர் இரும்புக் கம்பியைத் தங்கமாக்கி, அதை விற்று ஆலய கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடத்திருக்க முடியும். ஆனால் இறைவனுக்குச் செய்யும் தொண்டு, பக்தர்கள் கைங்கர்யமாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் இதில் பலரையும் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காகவும் இப்படி அலைந்து திரிந்து பணம் சேர்த்துக் கும்பாபிஷேகம் செய்தார். 1928-ஆம் ஆண்டில் இந்த வைபவம் நடந்தது.

இந்தக் கும்பாபிஷேகத்தின்போது ஒரு குழப்பமும் வந்தது. ஆலயப் பணிகளைச் செய்த விஸ்வகர்மா இனத்தவர் நாங்கள்தான் முதலில் கும்பாபிஷேகம் செய்வோம் என்றனர். ஆலயத்தில் இறைப் பணிகளைச் செய்து வரும் அர்ச்சகர் பெருமக்கள், நாங்கள்தான் கும்பாபிஷேகம் செய்வோம் என்றனர். இந்த நிலையில் கும்பகோணம் பகுதிக்கு காஞ்சி மகா ஸ்வாமிகள் வந்திருந்தார். அவரை சந்தித்து, இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு சொல்லுமாறு கேட்டுக் கொண்டார் பாடகச்சேரி சுவாமிகள். இரு தரப்பினரையும் கலந்து ஆலோசித்த காஞ்சி மகா ஸ்வாமிகள், விஸ்வகர்மா இனத்தவரே முதலில் கும்பாபிஷேகம் செய்யுட்டும்.... அர்ச்சகர்கள் அடுத்து செய்யட்டும் என்று சொன்னார். இதை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

இந்தக் குழப்பம் ஒரு பக்கம் இருக்க, வழக்கு உயர்நீதிமன்றம் வரை சென்றதால், கும்பாபிஷேகத்துக்கு நாள் குறிக்க முடியாமல் நாகேஸ்வரன் கோயிலில் அமர்ந்து அவஸ்தைப்பட்டார் சுவாமிகள். சென்னையில் நீதிபதியிடம் இருந்து தீர்ப்பு வந்தால்தான் கும்பாபிஷேகம் நடத்த முடியும். அப்போது ஒரு மதிய வேளையில் திடீரென சில பக்தர்களை அழைத்தார். பெரியநாயகி அம்மன் சந்நிதிக்கு அருகில் இருக்கும் ஆடிப்பூர அம்மன் சந்நிதியில் தன்னை வைத்து பூட்டச் சொன்னாராம் சுவாமிகள். காரணம் புரியாத பக்தர்களும் அதை மறுக்க முடியாமல் அப்படியே செய்தார்கள். மாலை வேளையில் பூட்டைத் திறக்கச் சொன்னார் சுவாமிகள். அப்போது சுவாமிகளின் கையில் அவருக்கு சாதகமாகக் கும்பாபிஷேக நாள் குறிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு நீதிபதியின் கையெழுத்தோடு இருந்தாம். பக்தர்கள் அனைவரும் பிரமித்துப் போயினர். அதாவது, தான் அறைக்குள் பூட்டப்பட்டிருந்த வேளையில் அங்கிருந்து ஆகாய மார்க்கமாக சென்னைக்குச் சென்று நீதிபதியைச் சந்தித்து இந்த உத்தரவைப் பெற்று வந்தாராம் சுவாமிகள்.

சுவாமிகள், கடைசி காலத்தில் தான் இருந்த கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்திலேயே சமாதி ஆகவேண்டும் என்று விரும்பினாராம். ஆனால், அவரின் சென்னை பக்தர்கள் சிலர் வற்புறுத்தலாகக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 1949-ஆம் வருடம் அம்பாளுக்கு உரிய ஆடிப் பூர தினத்தில் திருவொற்றியூரில் ஜீவ சமாதி ஆனார்.

சமாதி ஆவதற்கு ஒரு வாரம் முன் சென்னையில் இருந்து கும்பகோணம் வந்தார் சுவாமிகள். அப்போது சுவாமிகள் பக்தரும் கும்பகோணத்தின் முன்னாள் சேர்மனுமான ராமநாத ஐயரின் மனைவி இறந்துபோயிருந்தார். அவரது வீடே சோகமாக இருந்தது. இந்த வேளையில் விஷயம் கேள்விபட்டு சுவாமிகளும் அங்கு வந்தார். சுவாமிகளின் திருக்கரத்தைப் பிடித்துக்கொண்டு ராமநாத ஐயர் கதற, ஏன் அழறே? அவ சாகலைடா... இன்னும் அவளுக்கு ஆயுள் இருக்கு என்று சுவாமிகள் சொல்ல.... ஐயர் உட்பட அனைவரும் பிரமை பிடித்தது போல் சுவாமிகளையே பார்த்தனர். இது கயிலாய மலை விபூதிடா என்று சொல்லி பாடையில் பிணமாக இருக்கும் ஐயரின் மனைவி நெற்றியில் பூச.... அடுத்த நொடியே அந்த மாது எழுந்து உட்கார்ந்தார். சவ வீடு சந்தோஷ வீடானது. பின்னர் வந்த பல வருடங்களுக்குப் பிறகு ராமநாத ஐயர் இறந்து போக, இந்த அம்மாள் 1982-ல்தான் இறந்துபோனாராம். சுவாமிகளின் ஆசியால் அந்த அம்மாளுக்கு ஆயுள் விருத்தி ஏற்பட்டது.

தனக்கு சமையல் செய்த வந்த அம்மாள் ஒருவர் இறந்துபோனபோதும் வடலூரில் ஒரு தைப்பூசத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துபோன ஒரு பக்தரையும் தன் சித்து திறமையால் மீண்டும் அவர்களை உயிர்ப்பித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் பாடகச்சேரி சுவாமிகள். வடலூர் வள்ளலாரின் சிஷ்ய பரம்பரை நான் என்று சொல்லிக்கொள்ளும் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் தன் பக்தர்களுக்கு அருளிய மொழி என்ன தெரியுமா?

நான் மறைந்தாலும், என்னை நம்பி இருப்பவர்களுக்கு நான் என்றும் துணையாக இருப்பேன். என்னை நம்பாதவர்களுக்கும் நம்பிக்கை வரும் பொருட்டு உதவிகள் செய்து வருவேன்!

Thursday, 14 May 2015

ஞானவள்ளல் பரஞ்ஜோதி மகான்


                                          image



          உலக சமாதான ஆலயஸ்தாபகர்ஞானவள்ளல் பரஞ்ஜோதி மகான்அவர்கள் மதச்சார்பு மொழி இவைகளைக்கடந்து உலக எல்லா நாடுகளிலும் விருப்பமுள்ள அனைவருக்கும் ஞானம் வழங்கிய ஞான வள்ளலாவார்கள்

தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சார்ந்த கான்சாபுரம் என்னும் சிற்றூரில் புகழ்மிக்க குடும்பத்தில் சையத் இபுராஹீம், மும்சாபீவி தம்பதியருக்கு மகனாக 02.05.1900 மாவது ஆண்டு அவதரித்தார்கள்

மகான் அவர்கள் உலகனைத்து நாடுகளுக்கும் பலமுறை சென்று உலக சமாதான ஆலயம் என்னும் தாம் கண்ட அமைப்பின் மூலம் அனைவருக்கும் பேறின்பம் தத்துவ தவஞான விளக்கமும் தன்னிலையையும் அனுபவபூர்வமாக வழங்கியதால் ஞானவள்ளல் என்று மக்களால் போற்றி அழைக்கப்பட்டார்கள். 

மகான் அவர்கள் இளமையில் தந்தையை இழந்ததால் கல்வி கற்கும் வாய்ப்பு அமையவில்லை.தீவிரபக்தி வணக்கங்களில் நாட்டமுடையவராய் மிக துணிச்சல் உடையவராயும் எந்தமறை பொருளையும் கண்டுபிடித்தே தீருவேன் என்று உறுதிகொண்டவராய் விளங்கி வந்துள்ளார்கள்.

11.11.1911ம் ஆண்டு மேலைநாட்டு மன்னர் ஒருவரின் முடிச்சூட்டுவிழா விமரிசையாக கொண்டாடியபோது மகான் ஒரு பெரியவரை அணுகி இந்த விழா கொண்டாட காரணம் என்ன என்று கேட்டார்கள் நமது அரசருக்கு முடிசூட்டு விழாவானதால் கொண்டாடவேண்டியது அவசியம் என்றார்.உடனே அரசருக்குப் பெரியவர் யார் என்று கேட்டார்.கடவுள் என்று சொன்னார்.கடவுளை நான் பார்க்க முடியுமா என்று கேட்ட போது சின்னஞ்சிறு குட்டி இவ்வளவு பெரிய கேள்வி கேட்கிறாயே என்று செல்லமாக தட்டி பார்க்கலாம் முயற்சி எடு என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.அன்றுமுதல் கடவுளை கண்டுவிட வேண்டுமென்ற எண்ணம் உதித்த நாளை தமது ஞான உதயதினமாகக் கொண்டு அன்றிலிருந்து பலவகை யோகங்கள் தொழுகைகளில் பாடுபட்டும் கடவுளைக் காண முடியவில்லை.

இறுதியாக பர்மா ரங்கூனில் வசித்துவந்த இந்தியாவிலுள்ள ஹைதராபாத் டெக்கான்,பிஜப்பூர் வாசியான ரெத்தின வியாபாரி சையத் இப்ராஹீம் ஃகாரிபுல்லாகாமில் என்ற வேத அறிஞர் வயது முதிர்ந்தவர் அவரின் நட்பு ஏற்பட்டு தர்க்க ரீதியாக உரையாடியதில் நெற்றிப்பொட்டை தொட்டு உணர்த்தும் தாந்திரீக யோகமுறை உபதேசத்தை அவரிடம் 07.01.1938 இரவு 11.11 மணிக்கு பெற்றுக்கொண்டார்கள்.

அன்றிலிருந்து மகான் அவர்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது.பேருண்மையைக் கண்டுகொண்டேன் என்ற நிலையில் பேறின்பம் ததும்பி,அறிவு தன்னிலை விளக்கமும்,பிரபஞ்ச தத்துவ ஞானமும், நான்கடவுள் விளக்கமும்,தமது பெரும் முயற்சியாலும், ஆராய்ச்சி விவேகத்தாலும் பெறப்பட்டார்கள் அன்றிலிருந்து ஒரு பெரும் குருவாக மக்களால் மதிக்கப்பட்டார்கள்.

1939ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்து தாம் பெற்ற இன்பம் அனைவரும் பெறவேண்டும் என்று விரும்பி மதுரைக்கு வந்து தங்கி பல இன்னல்களுக்கு இடையே சிறு துண்டு நோட்டீஸ்கள் மூலம் மக்களுக்கு அறிவிப்பு செய்ததில் மக்கள் தங்கள் கேள்விகளுக்கு விளக்கமறிந்து ராஜமரியாதை தந்து ஆதரித்தார்கள்.

1941ல் பரிபூரண பரஞ்ஜோதியின் உயர்ஞான சபை துவங்கினார்கள்.மக்கள் ஆதரவு கூடியபின் சொந்த நிலம் வாங்கி 20.06.1947 மதுரையில் உலக சமாதான ஆலயம் நிறுவினார்கள்.அதன் பிறகு சென்னை சென்று 31.10.1943ல் சபை துவங்கி 20.07.1946ல் சொந்த நிலம் வாங்கி உலக சமாதான ஆலயம் என்னும் சபையை தோற்றுவித்தார்கள். காலத்தால் மக்கள் அறியலானர்கள் தற்போது உலகமெல்லாம் சபைகள் ஏற்பட்டு மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.
 மிகுந்த நன்றி :  www.paranjothimahan.com |

Saturday, 25 April 2015

சாந்தானந்தா சுவாமிகள்



                                                       
மதுரை அருகே உள்ள அழகாபுரி எனும் சிற்றூரில் ஒரு அந்தணக் குடும்பத்தில் 1921 ஆம் ஆண்டு பிறந்தார் சாந்தானந்தா சுவாமிகள் . இவரது பெற்றோர்கள் இவர்க்கு இட்ட பெயர் சுப்பிரமணியம் என்பதாகும்.
>> பள்ளி பாடத்தில் விருப்பம் கொள்ளாததால் , மதுரை மீனாட்சியம்மன் கோவிலே சுப்பிரமணியத்தின் இருப்பிடம் ஆயிற்று .. அதன்பின் வேத பாட சாலையில் சேர்ந்து வேதம் பயின்றார். இந்திய விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றும் இருக்கிறார் ..
>> மதுரை திருபரங்குன்றத்தில் சமாதி கொண்ட சூட்டுகோல் மாயாண்டி சித்தரிடம் புவனேஸ்வரி மந்திர தீட்சை பெற்றார். பல ஸ்தலங்களுக்கு சென்று தவ ஆற்றலை பெற்றார் ..வடக்கே ரிசிகேசத்தில் சுவாமி சிவானந்த மகராஜ் ஆசிரமத்தில் சில காலம் தங்கினார் ..
>> ஒருமுறை குஜராத்திலுள்ள அவதூதர்களின் முதலானவரான ஸ்ரீ தத்தாத்திரேயர் ஆலயம் சென்றவர்க்கு ஒரு மகாயோகியின் அனுகிரகம் கிடைத்தது ." உனக்காக உனது குரு சேலம் சேந்தமங்கலத்தில் காத்திருக்கிறார் " என உத்தரவு பிறக்க சேலம் விரைந்து வருகிறார் ..
>> சேலம் அருகே சேந்தமங்கலத்தில் சன்யாசிக்காடு என்ற குன்றில் ஜட்ஜ் சுவாமிகளின் சீடரான ஸ்ரீமத் சுயம்பிரகாச ப்ரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள் தத்த ஆலயம் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்திருந்த அவரைத் தேடி வந்த சுப்ரமண்யம் அவரே தனக்கான குரு என உணர்ந்து சரணாகதி அடைந்தார் ... தத்த சம்பிரதாயப்படி குருவால் உபதேசம் பெற்று, சாந்தானந்தா என்ற நாமம் பெற்றார்.
>> தனது குருவின் கட்டளை "ஒரு வருடம் " புதுக்கோட்டை சென்று அதிஷ்டானப் பொறுப்பு ஏற்றுக் கொள்" என்று உத்தரவிட குருவின் சொற்படி புதுக்கோட்டை அதிஷ்டானத்தில் தங்கினார் . ஜட்ஸ் சுவாமிகள் அவர்களின் ஆஸ்ரமமாக இருந்த இடத்தை சாந்தானந்தா சுவாமிகள் மேற்கொண்டு அதிஷ்டானமாக்கி இருக்கிறார்.
>> புவனேஸ்வரி கோவிலுக்கு அதிஷ்டானம் என்று பெயர். 1936ஆம் ஆண்டு முதல் இந்தக்கோவில் இருக்கிறது.அதிஷ்டானத்திற்கு வரும் அன்பர்கள் சாந்தானந்தரின் தேஜஸ் கண்டு வியந்து அனுகிரகம் பெற்றனர் . அதிஷ்டானம் அன்பர்கள் ஆதரவில் புதுப்பொலிவு பெற்றது.
>> அதிஷ்டானப் பொறுப்பை சீடரிடம் ஒப்படைத்த சுயம்பிரகாசர் 1948 டிசம்பர் 29ல் மகாசமாதி அடைந்தார். சாந்தானந்தர் தன் குரு அமர்ந்திருந்த குகையை செப்பனிட்டு, மகத்தான ஸ்ரீசக்ர பீடம் நிறுவினார். புதுக்கோட்டை அதிஷ்டானம் விரிவுபடுத்தப்பட்டு, 1956ல் மகா கும்பாபிஷேகம் நடை பெறச் செய்தார் ..
ஸ்ரீ கந்தாஸ்ரமம் தோற்றம் :
1965 ல் இந்த ஆஸ்ரமத்தை நிறுவிய ஸ்ரீ மத் ஸத்குரு சாந்தானந்த சுவாமிகளின் கனவில் வந்த முருகப்பெருமான் தன்னை குறிப்பிட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யும்படி அருளினார். கனவில் வந்த முருகப்பெருமான் சொன்ன இடத்தை தேடியலைந்த இவர் கடைசியாக இப்போது கந்தாஸ்ரமம் இருக்கும் இடத்தை அடைந்தவுடன் தான் கனவில் கண்ட இடம் இதுதான் என்று கூறி இங்கு முருகனை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார்.
>> சாமிகளால் ஆசிரமத்தார் தங்குவதற்கு கூடங்கள் எல்லாம் கட்டப்பட்டு 1971ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்கந்தனின் 'ஸ்கந்த குரு கவசம்' சாந்தானந்த சுவாமிகள் அருளியதே ஆகும். சென்னை கிழக்கு தாம்பரத்தில் ஒரு ஸ்கந்தாஸ்ரமம் நிறுவி இறை உணர்வைப் பெருகச் செய்தார் சுவாமிகள். தம் வாழ் நாள் முழுவதையும் குரு சேவை, இறை சேவை, மக்கள் சேவை என்றே அர்ப்பணித்த ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் 27-05 -2002 ம் நாள் முத்தி அடைந்தார். அவரது விருபப்படி அவரது அதிஷ்டானம் ஸ்ரீஸ்காந்தாஸ்ரமத்தில் உள்ளது.

Friday, 17 April 2015

Kodi Swamigal - The 300 Year Old Saint of Puravipalayam



                                              Posted Image

Sri Kodi Swami lived for over 300 years, before attaining Mahasamadhi in 1993. Some families had been visiting him for generations. He was spoken of as belonging to the saints of the highest order by spiritually acclaimed people and other saints who came to seek His darshan. As a playful child spirituality was unknown to me but in my little mind was instilled the fact that He was a Godly figure by my parents and elders of the family. Little did I realize the greatness of this spiritual giant Kodi Swamy who spent the last thirty years of His life at our residence, Puravipalayam, a small village near Pollachi in Coimbatore district of Tamilnadu.

Swamy had lived in Naikarapatti Zamin house in Coimbatore before He came to our house. Our elders were frequent visitors of the Swamy. Once when my mother was asked by my grandparents to accompany them to meet Swamy, she expressed her desire to have coffee before they left. But however she had to leave without coffee. This was her first visit to Swami and as soon as He saw her He called out to the cook of the house to fetch her some coffee. My mother was of course dumb founded.

On one of those visits to Swami by my elders, He got into the car of our family members and settled Himself comfortably in the upper portion of our palatial old house where He remained until His Mahasamadhi. The story about Him coming to our house was told and retold by our elders with immense pleasure and we children of a joint family listened with great fascination.

Posted Image
House where Kodi Swami resided
for the last 30 years of his life.

As a child I accompanied my mother who was blessed with the privilege of serving Him coffee every morning, which she did faithfully after the above-mentioned coffee episode. He was an old, bearded, fair man who wore more than four long coats one on top of the other at the same time. This was His attire during hot summers and cold winters. The only worthy thing that I followed in serving this great saint was to massage His feet occasionally imitating my elders. As a restless child always wanting to run out to play, I always tried to draw my head off from His lap in the course of His blessing (He did so by touching the heads of the devotees).

The Saint's Disposition

Swami's disposition was not always the same. At times He was jubilant and hearty like a child but sometimes He was pensive and did not entertain the company of visitors. At some other times He even resorted to shouting at visitors. He at times resorted to throwing things from upstairs. During one of my visits with my mom to Swami, we found Him conversing with someone invisible to our eyes. Neither could we hear Him talk nor could we see to whom He was talking. All that we could see were His lip movements and gestures. Suddenly He asked us to sit aside stating that the place was crowded. We were surprised at this, because there was no one else except us, the two silent spectators apart from Swami!

Devotees' Experiences

Numerous are the experiences of devotees with this Great Saint. A devotee's life was in danger when he met with a fatal accident. He was admitted to the hospital in a critical condition. The doctors gave up hope and an astrologer predicted his death. However Swami gave him a new lease of life. The devotee later said that he had a vision of Swami putting a stick into his nose.

A Spanish couple who are ardent devotees of Swami and our family friends too, were informed about the Mahasamadhi(shedding the body) of Swami by my mother. The husband who is an artist then started painting His picture. When we saw the completed portrait on a later date, we realized that he had painted Swami exactly in the posture in which He shed His mortal coil.

நன்றி : இந்தியா divine 

Tuesday, 3 March 2015

Grand Master Choa Kok Sui (GMCKS)


                                                                 Image result for gmcks images


Founder of Modern Pranic Healing and Arhatic Yoga, Grand Master Choa Kok Sui(GMCKS) is credited with the development of an energy healing system using prana or ki, which is the life force that keeps the body alive. Albeit a trained Chemical Engineer and successful businessman, he spent more than 30 years researching and studying literature and books on esoteric sciences, examining and sorting through their various healing techniques, and eventually developing the concepts, principles, techniques, and practical applications of Pranic Healing.
Born on August 15, 1952 in Cebu , Philippines and raised in a multi-faith environment, Master Choa Kok Sui found himself inclined to paranormal and spiritual matters from the tender age of 12. As a teenager, he spent a year doing inner purification, laying the foundation for his ventures into the spiritual path.
He also lived a simple life, akin to that of a yogi, refusing the comforts that he could otherwise have easily afforded.
As a young man, Master Choa Kok Sui studied a wide range of healing arts (notably at a time when they were not yet validated as sciences), achieving a kind of encyclopedic level of knowledge on the subject matter. He studied under spiritual guides, who themselves were spiritually advanced and extraordinarily powerful healers, and whose guidance were inevitably crucial to the development of Modern Pranic Healing.
(As he treaded further on his spiritual path) In his spiritual journey , Master Choa Kok Sui made close associations with yogis, healers, clairvoyants, practitioners of Chinese chi kung (the art of generating internal power), and persons who were in telepathic contact with their spiritual gurus. He studied yoga, psychic phenomenon, mysticism, Chinese chi kung, Rosicrucian Teachings of the Ancient Mystical Order of Rosae Crucis (AMORC), Theosophy, Astara lessons, Arcane School teachings, and other esoteric sciences.
Throughout 1983 to 1987, Master Choa Kok Sui worked on the completion of what was his Spiritual Thesis: he labored over the monumental tasks of synthesizing, experimenting, validating, conceptualizing, formulating, systematizing and developing the bulk of what would become Modern Pranic Healing and Arhatic Yoga.
Modern Pranic Healing as a science was finally born in late 1987, with the publication of Master Choa Kok Sui’s book, The Ancient Science and Art of Pranic Healing (later changed to the title (including ) Miracles Through Pranic Healing), which has since been translated into more than 30 languages. He has been teaching the world,the secret of blending spirituality,good health & prosperity. GMCKS is also called the “scientist of the Soul”. His relentless search for truths beyond the accepted realities,has led to thousands benefiting from Pranic Healing,Arhatic Yoga, Clairvoyance, Kriyashakthi and other esoteric teachings and practices.
Master Choa Kok Sui later founded the Institute for Inner Studies and the World Pranic Healing Foundation, Inc., and went on to author 20 more books on Pranic Healing and spirituality , before his Mahasamadhi on March 19, 2007.

Sunday, 1 March 2015

Pranic Healing

Pranic Healing

Pranic Healing is a highly developed and tested system of energy healing that utilizes prana to balance, harmonize and transform the body's energy processes. Prana is a Sanskrit word that means life-force. This invisible bio-energy or vital energy keeps the body alive and maintains a state of good health. In acupuncture, the Chinese refer to this subtle energy as Chi. It is also called Ruah or the Breath of Life in the Old Testament. 
Pranic Healing is a simple yet powerful and effective no-touch energy system. It is based on the fundamental principle that the body is a "self-repairing" living entity that possesses the innate ability to heal itself. PRANIC HEALING works on the principle that the healing process is accelerated by increasing the life force or vital energy on the affected part of the physical body.
Diseases first appear as energetic disruptions in the energy field before manifesting as ailments in the physical body. By treating the energy body one can avoid and heal a lot of diseases and ailments.
Pranic Healing can be used to help many conditions including;
 Hormonal imbalances
 Colds and flu, asthma and sinus
 Muscular & Skeletal
 Digestive complaints
Skin conditions
 Insomnia
 Migraine
 Mental & emotional disorders (Eg.Fear, Anger, Depression)
 Drug addiction
 Urinary disorders and infection
 Weight loss
 Constipation
And many others…

Thursday, 26 February 2015

வேதாத்திரி மகரிஷி


                                              Image result for vethathiri maharishi



டவுள் யார்.... வாழ்க்கை என்றால் என்ன உலகில் ஏன் வறுமை உள்ளது என்ற கேள்விகளை தனக்குள் கேட்டு, அதற்கான பதிலை சமுதாயத்திற்குத் தந்தவர் தான் வேதாத்திரி மகரிஷி. 1911 - ஆகஸ்ட் 14ல் சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். பல ஆண்டுகளாக தொடர்ந்து அவர் மேற்கொண்ட தவம் மற்றும் ஆராய்ச்சியால் 35-வது வயதில் ஞானம் பெற்றார். தமிழகத்தில் வாழ்ந்த திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், வள்ளலார் போன்ற சித்தர்களின் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர். மக்கள் அனைவரும் இன்பமாக வாழவே விருப்பப்படுகின்றனர். இயற்கையில் எல்லாம் இன்பமயமாகவே உள்ளன. ஆனாலும் மனிதன் தொடர்ந்து துன்பங்களையே அனுபவித்து வருவதாக உணர்கிறான். இத்துன்பங்களை போக்க மன நிறைவு பெற 4 விதமான பயிற்சியை மகரிஷி உருவாக்கியுள்ளார். எளியமுறை உடற்பயிற்சி, தியானப்பயிற்சி காயகல்பப்பயிற்சி, அகத்தாய்வுப்பயிற்சிகள் இவைகளை கற்றுத்தர 1958ல் உலக சமுதாய சேவா சங்கத்தை உருவாக்கினார். தனிமனித அமைதி, ஆகிய நோக்கங்களை கொண்டது தான் இம்மையம். 6 வயது முதல் 60 வயதுவரையுள்ள ஆண், பெண் அனைவருக்கும் கற்றுத்தரும் எளிய பயிற்சிகள் இவை. மகிரிஷி சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆன்மிக, தத்துவப்பாடல்களை தமிழ், ஆங்கிலத்தில் இயற்றியுள்ளார். 1984-ல் பொள்ளாச்சி, அருகே ஆழியாற்றில், வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி அங்கு ஓம் என்ற வடிவில் அறிவுத்திருக்கோயில் நிறுவப்பட்டுள்ளது. அங்கிருந்து தற்போது தனது சேவையை செய்து வருகிறார் மகரிஷி. இச்சங்கத்தின் கிளைகள் உலகம் முழுவதும் 225 ஊர்களில் செயல்படுகிறது.

காமாட்சி மவுனகுரு சுவாமிகள்


                                   
                                              Temple images

திண்டுக்கல்லுக்கு அருகே திருமலைக்கேணி என்கிற அழகான கிராமத்தில் காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் ஜீ சமாதி அமைந்துள்ளது. தான் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ அன்பர்களை நல்வழிப்படுத்தியும் அவர்களுக்கு ஆசிகளை வழங்கியும், பிறவிப் பிணிகளை நீக்கியும் வாழ்ந்த ஒப்பற்ற மகான்-காமாட்சி மவுனகுரு சுவாமிகள். முருகப் பெருமானின் தனிப்பட்ட தரிசனத்தை ஒரு முறையும், ஸ்ரீவள்ளி-ஸ்ரீதெய்வானையின் இணைந்த தரிசனத்தை ஒரு முறையும் பெற்றவர் இவர் இன்றைக்கும் தன் சன்னிதி தேடி வரும் எந்த ஒரு பக்தரின் பிரார்த்தனையையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறார் இந்த சித்த புருஷர்.

காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் சிஷ்யரான குழந்தைசாமியின் சமாதியும் குழந்தைசாமியின் சிஷ்யரான சச்சிதானந்த சுவாமிகளின் சமாதியும் காமாட்சி மவுனகுரு சுவாமிகள் ஜீவ சமாதியை ஒட்டியே அமைந்துள்ளன. காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் குருபூஜை ஆடி பூராடத்தன்றும், குழந்தைசாமியின் குருபூஜை ஆவணி பூசத்தன்றும். சச்சிதானந்த சுவாமிகளின் குருபூஜை புரட்டாசி அசுவினி அன்றும் பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த தினங்களில் விசேஷ அபிஷேகங்களும் அலங்காரங்களும் அன்னதானமும் நடைபெறும். திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றி உள்ள பல பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கூடி குருமார்களின் அருள் பெறுவது வழக்கம்.

திண்டுக்கல்லில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருமலைக்கேணி, நத்தத்தில் இருந்து மணக்காட்டூர் வழியாக திருமலைக்கேணி வந்தால் 24 கி.மீ.! திண்டுக்கல்லில் இருந்து செங்குறிச்சி செல்லும் நகரப் பேருந்துகளும் செந்துறைக்குச் செல்லும் புறநகர் பேருந்துகளும் திருமலைக்கேணி வழியாகச் செல்லும். காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் ஜீவ சமாதி அருகே சுவாமிகளுக்கு தரிசனம் தந்த-ஸ்ரீமுருகப் பெருமான் திருக்கோயில், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. முருகப் பெருமானே காமாட்சி மவுனகுரு சுவாமிகளைக் கூப்பிட்டு வந்து, இங்கே உட்கார் என்று இந்தச் சிறு மலையை அடையாளம் காட்டியதாக அவரது பக்தர்கள் சொல்கின்றனர். சுவாமிகளுக்கு முருகப் பெருமான் காட்சி கொடுத்த இடமும் ஸ்ரீவள்ளி மற்றும் ஸ்ரீ தெய்வானையின் தரிசனம் பெற்ற வள்ளி சுனையும் அருகிலேயே உள்ளன.

இனி, காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் சரிதத்தைப் பார்ப்போம்? திண்டுக்கல் மாவட்டத்தில் செங்குறிச்சி கிராமத்துக்கு அருகே உள்ளது வல்லம்பட்டி என்கிற குக்கிராமம். விவசாயத்தையே பிரதானமாகக்கொண்டு வல்லம்பட்டியில் வாழ்ந்து வந்தவர்கள் குப்புசாமி- குப்பாயி அம்மாள் தம்பதியர். இறை அருளாலும். மகான்கள் ஆசியாலும் இந்த தம்பதிக்கு கி.பி. 1875-ஆம் ஆண்டு முதல் குழந்தையாக நம் சுவாமிகள் அவதரித்தார். பெற்றோரின் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஆட்பட்டு, சுவாமிகள் வளர்ந்து வந்தார். தந்தையின் விவசாயப் பணிகளுக்கும் தாயின் விட்டு வேலைகளுக்கும் உதவியாக இருந்து வந்தார் சுவாமிகள். அந்தக் கால வழக்கப்படி இளம் பிராயத்திலேயே சுவாமிகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். செம்பாயி அம்மாள் என்பவரைக் கரம் பிடித்தார் சுவாமிகள். ஒரு சில வருடங்கள் கழிந்த பின்னர் செம்பாயி அம்மாளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. தாத்தாவின் பெயரை நினைவுபடுத்தும் விதமாக குப்புசாமி என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்தனர்.

இளம் வயதில் இருந்தே முருக பக்தியில் திளைத்திருப்பது காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் வழக்கம். எத்தனை காலத்துக்குத்தான் தன் பக்தனைத் தள்ளி வைத்துக்கொண்டே பார்ப்பார் முருகப் பெருமான்? சுவாமிகளைத் தன் பக்கம் இழுக்கவேண்டிய வேளை வந்ததும். சுவாமிகளின் மனதில் புகுந்தார் முருகப் பெருமான் பிறகென்ன... உணவு சுவைக்கவில்லை; ஆடை பாரமானது இல்லறம் இனிமை இழந்தது. மனைவியையும் மகனையும் மனம் மறந்தது; தான் தேடவேண்டிய சுகம் இல்லறம் அல்ல என்பதை சுவாமிகள் உணர்ந்துகொண்டார். 1905-ஆம் வருடம் (தமிழ் வருடம்; விசுவாச) கார்த்திகை மாதம் 12-ஆம் தேதி சுவாமிகள் துறவு பூண்டார் என்று அவரது சரிதம் சொல்கிறது. அதன் பிறகு அவரது வாழ்க்கை முறையே மாறியது. சித்து விளையாடல்களும் அருளாடல்களும் நிகழ்த்தி பக்தர்களுக்கு ஆன்மிக போதனைகளை வழங்கினார். மலைப் பகுதிகளில் ஆங்காங்கே நேரம் போவது தெரியாமல் அமர்ந்து கடும் தியானம் மேற்கொண்டார். முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில்களில் முழு நேரத்தைச் செலவழித்தார். எங்கெங்கோ சுற்றித் திரிந்த சுவாமிகளை-அவரது முப்பது வயதில்- என் கோயிலுக்கு வா என்று முருகப் பெருமான் அழைத்தார். அந்த கோயில்தான்-சுவாமிகளின் சமாதி அருகே இருக்கும் ஸ்ரீமுருகப் பெருமான் திருக்கோயில். அழகான கோயில்.

காமாட்சி மவுனகுரு சுவாமிகளிடம் வருவோம்... சுவாமிகளின் சித்து விளையாட்டுகள் வெளியே தெரிய வேண்டிய வேளை வந்தது. வல்லம்பட்டிக்குத் தென்கிழக்கே கரந்தமலை என்னும் இடத்தில் ஐயனார் கோயில் ஒன்று இருந்தது. சுமார் ஆறு மாதங்கள் அங்கேயே தங்கி யோகப் பயிற்சிகளை மேற்கொண்டார். அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு. செங்குறிச்சியின் சேரிப் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றார். எவரது அனுமதியையும் எதிர்பார்க்காமல் ஒரு குடிசை வீட்டுக்குள் நுழைந்தார் சுவாமிகள். குடிசை வீட்டுக்குள் இருந்தவர்கள் அதிர்ந்தனர். காரணம் - சுவாமிகளையும் அவரது குடும்பத்தினரையும் நன்றாக அறிந்தவர்கள் அவர்கள். சோழிய செட்டியார் இனத்தைச் சேர்ந்த தாங்கள் எங்கள் வீடுகளுக்கு வரக் கூடாது என்று அன்புடன் சொன்னார்கள். இல்லறச் சட்டையையே துறந்தவருக்கு சாதியச் சட்டையா சங்கடம் ஏற்படுத்தும்? சிரித்தார். பிறகு, அந்த வீட்டிலேயே அமர்ந்தார். குடும்பத்தினர் நெளிந்தார்கள். தவத்திலும் யோகத்திலும் திளைக்கும் சுவாமிகள் ஒருவர் தங்கள் வீட்டுக்கு வந்திருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும். உள்ளூர பயந்தார்கள். அப்போது, எனக்குப் பசிக்கிறது. சாப்பாடு கொடுங்கள் என்றார் சுவாமிகள்.

ஐயா.... உங்களுக்கு நாங்கள் சாப்பாடு தரக் கூடாது. மாமிசத்தை உண்பவர்கள் நாங்கள் என்று நாசூக்காக மறுத்தனர். கேட்கும் சுபாவமா சுவாமிகளுக்கு? சாப்பாடு வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகே சென்றார். தரையை சுத்தும் செய்து ஒரு இலையை விரித்தார். பாத்திரத்தில் இருந்து சிறிது சாதத்தை இலையில் போட்டார். மாமிசத் துண்டுகள் கலந்த குழம்பை அதில் கலந்தார். நிம்மதியாக ரசித்துச் சாப்பிட்டார். குடும்பத்தினர் அனைவரும் விதிர்விதிர்த்து நின்றிருந்தபோது, என்ன, பாக்கிறீங்க... எப்படி நான் இதை எல்லாம் சாப்பிடறேன்னு கவலையா? நான் என்ன சாப்பிட்டேன்னு காட்டறேன். என் அருகே வாங்க என்று சொன்னதும். அந்தக் குடும்பத்தில் இருந்தவர்கள் சுவாமிகளின் அருகே பயப்பக்தியுடன் வந்து அமர்ந்தனர். அப்போது சுவாமிகள் தன் வாயைத் திறந்து காட்டவும். உள்ளே - உணவு அனைத்தும் மல்லிகை மலர்களாகக் காட்சி கொடுத்தன. பிரமித்துப் போன அந்தக் குடும்பத்தினர். சுவாமிகளின் கால்களில் விழ. அவர்களை ஆசிர்வதித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். சுவாமிகள். காடு மலை என்று சுற்றித் திரிந்தார். ஒரு நாள் முருகப்பெருமானே சுவாமிகள் எதிரில் தோன்றி, திருமலைக்கேணியில் உள்ள கோயிலின் அடையாளங்களைச் சொல்லி, நீ அங்கே போய் உட்கார். உன்னால் அங்கே ஆகவேண்டிய பணிகள் உள்ளது என்று சொல்லி மறைந்தார். முருகப் பெருமானின் உத்தரவுகிணங்க, நேராக திருமலைக்கேணி ஸ்ரீமுருகன் கோயிலுக்கு வந்தார். இவர் வந்த வேளையில் அந்த கோயில் கவனிப்பார் இல்லாமல் - முறையான வழிபாடுகள் இல்லாமல் பாழ்பட்டு இருந்தது. இதைக் கண்டு வருந்தினார். சுவாமிகள் முருகப் பெருமானை தியானித்து விட்டு, கோயில் வடபுறம் அமைந்துள்ள ஒரு சிறு கல்பாறையில் புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்து தியானத்தை மேற்கொண்டார். இந்தக் கல்பாறை இன்றும் பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.

இப்படி தியானம் மேற்கொண்டு வந்த காலத்தில் வள்ளி, தெய்வானை ஆகிய இருவரையும் இங்கு தரிசிக்கும் பேறு பெற்றார் சுவாமிகள். ஒரு நாள் வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய இருவரும் சாதாரண பெண்கள் வடிவில் சுவாமிகளுக்கு எதிரே தோன்றினர். இவருக்கு முன்பாக நின்று, சுவாமீ..... நாங்கள் தினைமாவு சாப்பிட்டு வந்தோம். இப்போது தாகம் நாக்கை வறட்டுகிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என்று ஒருமித்த குரலில் கேட்டனர். நிமிர்ந்து பார்த்த சுவாமிகள், அதோ, ஸ்ரீசுப்பிரமண்ய் கோயிலுக்குத் தென்புறம் தீர்த்தம் அமைந்துள்ளது. அங்கே போய் அருந்துங்கள் என்றார். அதற்கு அவர்கள், அங்கே தீர்த்தம் இருப்பது எங்களுக்கு தெரியும். தங்களது திருக்கரங்களால் தீர்த்தம் கொடுங்கள் என்று கெஞ்சலாகக் கேட்க... தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து, தனக்குப் பக்கத்தில் - தரையில் ஓரிடத்தில் கைகளால் பள்ளம் பறித்தார். என்னே ஆச்சிரியம்.... பீறிட்டு வந்தது பளிங்கு போன்ற நீர்! பிறகு, அந்த நீரை சுவாமிகள் இருவருக்கும் கொடுக்க, அதை அருந்தியவர்கள் அடுத்த கணமே அங்கிருந்து மாயமானார்கள். இந்தத் தீர்த்தத்தை இன்றும் நாம் தரிசிக்கலாம். பக்தர்களை இந்தத் திருமலைக்கேணி கோயிலுக்கு வரவழைக்க வேண்டும் என்பதற்காக 1914-ஆம் வருடம் தைப்பூச தினத்தில் திண்டுக்கல் குப்புசாமி ஐயங்கார் குடும்பத்தாரைக் கொண்டு திருமலைக்கேணி முருகப் பெருமான் கோயில் அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார் சுவாமிகள். இதன் பிறகு, இந்தக் கோயில் பற்றி வெளி உலகத்துக்கு மெள்ளத் தெரிய ஆரம்பித்தது. 

தன் கணவர் (ஸ்ரீகாமாட்சி மவுனகுரு சுவாமிகள்) வீட்டை விட்டு வெளியேறிப் பல காலம் ஆன பிறகு, அவர் திருமலைக்கேணி முருகப் பெருமான் கோயில் இருப்பதைக் கேள்விப்பட்ட செம்பாயி அம்மாள். அவரைச் சந்தித்துப் பேசி வீட்டுக்கு அழைத்து வந்துவிடலாம் என்று எண்ணி, தனக்கு வேண்டப்பட்ட நான்கு பெண்களுடன் ஒரு முறை திருமலைக்கேணி வந்தார். கோயில் வாசல் படிக்கட்டில் தன் கணவர் அமர்ந்திருப்பதைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கதறினார் செம்பாயி அம்மாள். எப்படியாவது வீட்டுக்கு வந்து விடுங்கள் என்று அவர் மனைவியும் உடன் வந்த பெண்களும் சுவாமிகளிடம் வேண்ட... அடுத்த கணம் சுவாமிகள் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு நல்ல பாம்பு படம் எடுத்து நின்றிருந்தது. சுவாமிகளை அங்கே காணவில்லை. அதன் பிறகுதான், தன் கணவரின் தவ வலிமையையும் அவரது நிலைப்பாட்டையும் உணர்ந்த செம்பாயி அம்மாள். நல்ல பாம்பை வணங்கிவிட்டு, முருகப் பெருமானையும் தரிசித்துவிட்ட, உடன் வந்த பெண்களுடன் அங்கிருந்து புறப்பட்டார். ஒரு முறை சுவாமிகளின் பக்தர்கள் சிலர் காசிக்குச் சென்று ஸ்ரீவிஸ்வநாதரைத் தரிசிக்க விருப்பம் கொண்டார்கள். தங்களது இந்த யாத்திரையில் சுவாமிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று அவரிடம் விண்ணப்பித்தார்கள். இருந்த இடத்தில் இருந்தபடியே காசியைக் காட்ட வல்லவர் இந்த சுவாமிகள் என்பதை அந்த பக்தர்கள் அறிந்திருக்கவில்லை. அடேய்... காசிக்குப் போய்த்தான் விஸ்வநாதரை தரிசிக்க வேண்டுமா?  மெனக்கெட வேண்டாம். வயல் வேலைகளை விட்டு விட்டு அங்கே ஏன் செல்கிறீர்கள்? காசி தரிசனத்தை உங்களுக்கு இங்கேயே காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டுத் தன் வலது உள்ளங்கையை அவர்களுக்கு முன் நீட்டினார். பிறகு, காசியை நன்றாக தரிசியுங்கள் என்று அவர்களிடம் சொன்னார்.

சுவாமிகளின் வலது உள்ளங்கையப் பார்த்த அந்த பக்தர்கள் பிரமித்துப் போனார்கள். வீடியோ காட்சி மாதிரி சுவாமிகள் உள்ளங்கையில் பொங்கிப் பிரவாகம் எடுக்கும் கங்கையும் ஏராளமான பக்தர்கள் அங்கே புனித நீராடுவதையும் ஸ்ரீகாசி விஸ்வநாதருக்கு ஆரத்தி நடப்பதையும் ஸ்ரீவிசாலாட்சி அன்னைக்கு தீபாராதனை காண்பிக்கும் காட்சியையும், ஜொலிக்கும் அன்னபூரணி கோயில் மாறி மாறி தரிசித்து நெக்குருகிப் போனார்கள் அந்த பக்தர்கள். சாமீ.... உங்களோட தவ வலிமை தெரியாமல். எங்களில் நீங்களும் ஒருத்தரா நினைச்சு காசிக்குக் கூப்பிட்டுவிட்டோம். எங்களை மன்னிச்சிடுங்க சாமீ என்று அவரது கால்களில் விழுந்தனர். அனைவரையும் ஆசிர்வதித்துப் பிரசாதம் கொடுத்து அனுப்பினார் சுவாமிகள்.

ஒவ்வொரு வருடமும் திருமலைக்கேணியில் தைப்பூச விழா நடக்கும் முன்னதாக சுவாமிகளே அக்கம்பக்கத்து ஊர்களுக்குச் சென்று பலரையும் கோயிலுக்கு வருமாறு அழைப்பது வழக்கம். அப்படி ஒரு  தைப்பூச விழா பற்றித் தன் பக்தர்களுக்குத் தகவல் சொல்வதற்காகத் திண்டுக்கல் சென்றிருந்தார். சுவாமிகள் அப்போது சுவாமிகளைச் சந்தித்த இரண்டு பக்தர்கள். அன்றைய மதிய உணவுக்குத் தங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். சுவாமிகள் குழம்பினார். யாராவது ஒருவர் வீட்டில்தானே உண்ண முடியும்? அதுவும் மதிய வேளை உணவுக்கு இப்படி இரண்டு பேரும் கூப்பிடுகிறீர்களே.... இருவரில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுங்களேன் என்று அவர்களிடமே கேட்டார். ஆனால், அந்த இருவருமே விட்டுக் கொடுப்பதாக இல்லை. தங்கள் விட்டு மதிய உணவுக்கு சுவாமிகள் அவசியம் வர வேண்டும் என்று அன்புத் தொல்லை கொடுத்தனர். சரி.... ரெண்டு பேர் வீட்டிலும் உணவு தயார் செய்யுங்கள். பார்க்கலாம் யார் வீட்டுக்கு வர முடிகிறதோ. வருகிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். என் வீட்டில் சுவாமிகளுக்குப் பிரதமாதமான விருந்து வைத்து அசந்துப் போகிறேன். பார் என்று ஒருவர் மற்றவரிடம் சொல்லி விட்டு, இரண்டு அனபர்களுமே விருந்து தயார் செய்யப் புறப்பட்டனர். சுவாமிகள் எப்படியும் நம் வீட்டுக்குத்தான் வருவார். அவன் வீட்டுக்குப் போக மாட்டார் என்று இருவருமே எண்ணினார்கள். ஆனால் சுவாமிகளின் சித்து வேலைகள் அவர்களுக்குத் தெரியுமா, என்ன?

மதிய வேளை, இருவரது வீட்டிலும் ஒரே நேரத்தில் நுழைந்தார் சுவாமிகள். யப்பா.... நல்லவேளை .... சுவாமிகள் நம் வீட்டுக்கு வந்துவிட்டார் என்று இருவரும் தனித் தனியே தங்கள் வீடுகளில் சந்தோஷப்பட்டனர். சுவாமிகளுக்குப் பாத பூஜை செய்து. ஆசனத்தில் அமர வைத்து. தலைவாழை இலை போட்டு விருந்து படைத்தனர். திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு. குடும்பத்தினரை ஆசிர்வதித்துவிட்டு, திருமலைக்கேணிக்குப் புறப்பட்டு போனார் சுவாமிகள். அன்று மாலை அந்த இரு நண்பர்களும் கடைத் தெருவில் சந்தித்தனர். என்னப்பா.... உன் வீட்டுக்கு சுவாமிகள் வராமல் ஏமாற்றி இருப்பாரே... என் வீட்டில் அவருக்கு இன்று தடபுடல் விருந்து வைத்து அமர்க்களப்படுத்திவிட்டேன் என்றார் முதல் அன்பர். இதைக் கேட்ட  இரண்டாவது அன்பர் கேலியாகச் சிரித்து. ஏம்ப்பா... என் வீட்டுக்குத்தாம்ப்பா வந்தார். பாத பூஜை செய்து, நானே என் கையால் அவருக்கு உணவு பரிமாறினேன் என்று சொல்ல.... ஒரு கட்டத்தில் இருவரும் குழம்பினர். பிறகுதான், அவர்களுக்கு சுவாமிகளின் சித்து விளையாடல் புரிந்தது. 1917-ஆம் ஆண்டு பிங்கள வருடம் ஆடி மாதம் 17-ஆம் தேதி செவ்வாய்கிழமை இரவு 11 மணி அளவில் தன்னுடைய தவ பலத்தால். ஜீவ சமாதி நிலையை அடைந்தார் ஸ்ரீகாமாட்சி மவுனகுரு சுவாமிகள். எனக்கு என்றும் இயல்பு இல்லை. என்றைக்கும் நான் இங்கேயே வீற்றிருந்து என்னைத் தேடி வரும் பக்தர்களைக் காத்து அருள் புரிவேன் என்று ஜீவ சமாதி ஆவதற்கு முன் சுவாமிகள் சொன்னதாக அவரது பக்தர்கள் தெரிவித்தார்கள். இதனால்தானோ என்னவோ... என் மனைவி, அவளுடைய ஆயுள் முழுதும் திருமாங்கல்யம் அணிந்திருக்க வேண்டும். என்று தான் சமாதி ஆகும்போது சொல்லி இருந்தார்.

எனவே சுவாமிகள் இன்றைக்கும் சூட்சும உருவில் இங்கு இருந்து வருவதாக அவரது பக்தர்கள் திடமான நம்பிக்கையில் வந்து தரிசிக்கிறார்கள். சுவாமிகள் பயன்படுத்திய தண்டம், திருவடி, உபயோகப்படுத்திய ஓலைப் பெட்டிகள் போன்றவற்றை இங்கே தரிசிக்கலாம். நவக்கிரகம் விநாயகர் சன்னிதிகளும் உண்டு. திருமலைக்கேணி திருப்பணிகளுக்கு வாரியார் சுவாமிகள் ஒரு முறை விஜயம் செய்திருக்கிறார். தற்போது இந்த திருமலைக்கேணி மடத்தை நிர்வகித்து வருபவர் சச்சிதானந்த சுவாமிகளின் சிஷ்யரான முத்துகோபாலகிருஷ்ண சுவாமிகள் என்பவர். என்றாலும், மடத்தின் பெரும்பாலான பொறுப்புகளை அங்கேயே இருந்து கவனித்து வருபவர்-கா.கு. பிச்சை என்கிற முருகேசன் என்பவர். இவர் காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் பேரன். காமாட்சிமவுனகுரு சுவாமிகளின் மகனான குப்புசாமியின் மகன்தான் முருகேசன். குருபூஜை தினங்கள் தவிர, ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி தினத்தன்றும் அன்னதானத்துடன் அபிஷேக-அலங்காரங்கள் நடைபெறுகின்றன. முருகனருள் பெற்ற காமாட்சி மவுனகுரு சுவாமிகளை திருமலைக்கேணியில் தரிசித்து குருவருள் பெறுவோம்!

 திண்டுக்கல்லில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருமலைக்கேணி. நத்தத்தில் இருந்து மணக்காட்டூர் வழியாக திருமலைக்கேணி வந்தால் 24 கி.மீ. 1 திண்டுக்கல்லில் இருந்து செந்துறைக்குச்  செல்லும் புறநகர் பேருந்துகள் திருமலைக்கேணி வழியாகச் செல்லும்.

செந்துறையில் இருந்து திருமலைக்கேணி வழியாகப் பழநி செல்லும் தடமும் உண்டு. செந்துறையில் இருந்து திருமலைக்கேணிக்கு சுமார் 15 கி.மீ. தொலைவு. செங்குறிச்சியில் இருந்து திருமலைக்கேணிக்கு 2 கி.மீ. தொலைவு.

 திண்டுக்கல்லில் இருந்து செங்குறிச்சி செல்லும் நகரப் பேருந்து தடம் எண்: 2ஏ, 2பி ஆகியவை திருமலைக்கேணி வழியாகச் செல்லும். செந்துறையில் இருந்து திருமலைக்கேணிக்கு பேருந்து வசதி உண்டு. திண்டுக்கல்லில் இருந்து திருமலைக்கேணி வழியாக துவரங்குறிச்சி செல்லும் பேருந்துகளும் உண்டு.

தொடர்புக்கு: 
திருமலைக்கேணி ஜீவசமாதி மடம்,
செங்குறிச்சி அஞ்சல், சிலுவத்தூர் வழி,
திண்டுக்கல் மாவட்டம் - 624 306.

ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர்



                                             Temple images


திண்டுக்கல்-பழநி மெயின் ரோட்டில் வரும் நட்ட நடுவில் வரும் ஊர் ஒட்டன்சத்திரம்.  அதாவது திண்டுக்கலில் இருந்தும் பழநியில் இருந்தும்  ஒட்டன்சத்திரம் 30 கி.மீ. தொலைவில் மையமாக இருக்கிறது.  தமிழ்நாட்டில் பல ஊர்களுக்குக் காய்கறிகளை சப்ளை செய்து கொண்டிருக்கும் ஊர்  இது. வர்த்தகர்கள் அதிகம். எல்லாம் இருந்தும் ஒரே ஒரு குறை..... ஒட்டன்சத்திரத்தில் உள்ள ராமசாமி சித்தரின் சமாதி, கவனிப்பார் இல்லாமல் -  முறையான வழிபாடு இல்லாமல் காணப்படுவது பல பக்தர்களின் மனதைப் பிசைகிறது.  இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்தர்கள் எப்போதாவது  இங்கே வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.  மற்றபடி இங்கே எந்த நடமாட்டமும் இருக்காது.  எண்ணற்ற அற்புதங்களையும் ஸித்து விளைய õட்டுகளையும் நிகழ்த்திய ஒரு மகான் ஒட்டன்சத்திரத்தில் குடி கொண்டிருக்கிறார் என்பது உள்ளூர்க்காரர்கள் பலருக்குக்கூடத் தெரியவில்லை. 

ராமசாமி சித்தர் எங்கே பிறந்தார், பெற்றோர் யார்.  எப்படி ஒட்டன்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே குடி கொண்டார் என்பது போன்ற தகவல்கள்  தெரியவில்லை.  தான் ஒட்டன்சத்திரத்தில் வாழ்ந்த காலத்தில் மெயின் ரோட்டில் உள்ள சகுந்தலா பாத்திரக் கடை வாசலில் வசித்து வந்திருக்கிறார்.   இதற்கு அருகில் உள்ள  ஒரு அசைவ உணவகத்தில் இருந்து அவ்வப்போது டீயும், பிரியாணி பொட்டலமும் வந்துவிடும்.  சித்தர்கள் பிரியாணி சா ப்பிடுவாரா என்று தோன்றலாம் அவர்கள் அசைவம் சாப்பிடுவது என்பது அதை ரசித்து உண்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.  தன்னை  நாடி வரும் பக்தர்களின் பிணியைத் தீர்ப்பதற்கு. வருபவர்களிடமே பிரியாணி பொட்டலம் வாங்கி வா என்று அனுப்பி, அதை சாப்பிடுவது போல்  செய்து பிணியை அறுத்திருக்கிறார்கள்.  அசைவம் சாப்படுவது என்பது ஒரு பாவனைதான் பசி அல்ல.

ஒரு முறை கோழி பிரியாணியை சாப்பிட்டு முடித்த பின், எந்தக் கோழி வயிற்றுக்குள் சென்றதோ, அதே கோழியை உயிருடன் தட்டில் வரவழைத்துத்  துரத்தி அனுப்பினார் ராமசாமி சித்தர். ஆக, ராமசாமி சித்தர் பிரியாணி சாப்பிட்டார் என்று சொல்ல முடியுமா? இனி, ராமசாமி சித்திரைப் பற்றி பார் ப்போம்.  இவரது பெயர் ராமசாமி என்பது.  ஒரு முறை ரிஷிகேஷத்தில் இருந்து அறியப்பட்டது.  அதுவரை உள்ளூர்க்காரர்களால் பெரியவர்.  சாமீ,  சித்தர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்தார். ராமசாமி என்று இவர் அழைக்கக் காரணமான அந்த நிகழ்வைப் பார்ப்போம். ஒட்டன்சத்திரத்தில்  வசித்து வரும் சுமார் அறுபது பேர் வட இந்தியயாத்திரை புறப்பட்டார்கள்.  உள்ளூர் வர்த்தக பிரமுகரான சோமசுந்தரம் பிள்ளை என்பவர்  தலைமையில் இந்தக் குழு புறப்பட்டது.  காசி, ரிஷிகேஷ், ஹரித்வார், பத்ரிநாத் என்று அவர்களது பயணப் பட்டியல் இருந்தது. விடிகாலை மூன்று  மணிக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரு தனியார் பேருந்தில் பயணத்தைத் துவக்கினர்.  புறப்படும்போது வழியில் இருந்த ராமசாமி சித்திரை  அவர்கள் கண்டுகொள்ளவில்லை. போங்கடா... போயிட்டு என்கிட்டதானே எல்லாரும் வருவீஙக.... என்று தனக்குள் சொல்லி மானசீகமாக வாழ்த்தி  அனுப்பினார்.

ரிஷிகேஷை அடைந்த ஒட்டன்சத்திரத்து பிரமுகர்கள், சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென வந்த ஒரு குரல் இவர்கள் அனைவரையும்  ஈர்த்தது.  ஒட்டன்சத்திரத்தில் இருந்து வந்தவன்லாம் இங்க வாங்கடா என்று அதிகாராமாகக் கூப்பிட்டது அந்தக் குரல். ஒட்டன்சத்திரத்துக்காரர்கள்  திடுக்கிட்டார்கள். பாஷையே புரியாத இந்த ஊரில் யார் நம்மை அதிகாரமாகக் கூப்பிடுவது என்று அவர்கள் திரும்பிப் பார்த்தால் - ஒற்றைக் காலில்  நின்றபடி தவக் கோலத்தில் சாது ஒருவர் இருந்தார்.  வாங்கடா ஒட்டன்சத்திரத்து ஆளுங்களா..... உங்களை எல்லாம் நான்தான் கூப்பிட்டேன்....  ராமசாமி சித்தர் எப்படி இருக்கான் ஊர்ல? என்றார் (அதுவரை சித்தர், பெரியவர் என்றே அழைக்கப்பட்ட வந்த ராமசாமி சித்தரின் பெயர் அதன் பி றகுதான் பலருக்கும் தெரிய வந்ததாம்). யார் சாமீ.... நீங்க சொல்ற பேர்ல யாரும் எங்க ஊர்ல இல்லியே? என்றனர் ஊர்க்காரர்கள். அடேய்....  பாத்திரக் கடை வாசல்ல எந்நேரமும் உக்காந்திருப்பானே... அவன்தான் ராமசாமி சித்தர்.  அவனுக்கு வயசு என்ன தெரியுமா?  ஐந்நூத்தி ஐம்பது.  சரி,  ஊருக்குப் போனதும்.  அவன்கிட்ட போய், ரிஷிகேஷ்ல நடராஜ சாமீ ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க என்றார்.  தொடர்ந்து தவத்தில் இறங்கி  விட்டார்.

ராமசாமி சித்தரின் வயதைக் கேட்டு ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் ஆடிப் போனார்கள்.  தென்னிந்தியாவில் இருந்து வடக்கே வந்த நம்மை அடைய õளம் கண்டுகொண்டு.  நம்மூர் சித்திரை இவர் விசாரிக்கிறாரே என்று வியந்து பேசிக் கொண்டார்கள்.  அங்கிருந்து அகன்றார்கள். ஒரு வழியாக  ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு இருபது நாட்களுக்குப் பிறகு ஊர் திரும்பினார்கள்.  தாங்கள் புறப்பட்ட   இடத்தில் யாத்திரையை முடித்தவர்கள்.  மெள்ளக் கலையை முற்படும்போது ரிஷிகேஷ் போனவன்லாம் இங்க வாங்கடா என்று பாத்திரக்கடை  வாசலில் இருந்த ராமசாமி சித்தார் ஓங்கிக் குரல் கொடுத்தார்.  அப்போதுதான் சோமசுந்தரம் பிள்ளைக்கு நினைவு வந்தது - ரிஷிகேஷில் நடராஜ சாமீ  சொன்ன விஷயம்.  அனைவரும் சித்தருக்கு முன்னால் பவ்யமாக நின்றனர்.  ஒட்டன்சத்திரத்தில் சாதாரணமாக அதுவரை அவர்களுக்குத் தெரிந்த  ராமசாமி சித்தரின் மகிமை இப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது.

ஏண்டா.... அங்கே ஒத்தக்கால்ல தவம் செய்யுற நடராஜ சாமீ என்னை விசாரிச்சான்ல..... ஏண்டா, என்கிட்ட சொல்லாம போறீங்க? என்று ராமசாமி  சித்தர் கோபமாகக் கேட்கவும், சற்று முன்னால் வந்தார் சோமசுந்தரம் பிள்ளை.  சாமி எங்களை எல்லாம் மன்னிக்கணும்.  அவசரத்தல மறந்துட்டோம்  என்று சொல்ல.... சிரித்தார் சித்தர். போங்கடா.  எல்லாரும் நல்லா இருப்பீங்க என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். 

பழநியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் சங்கரன்.  மிகவும் ஆசாரமான அந்தணர் குடும்பம். பூஜை, புனஸ்கரம் என்று எந்நேரமும் இறைவழிபாட்டிலும்.  மகான்கள் தரிசனத்திலும் திளைப்பவர்.  மகான்களின் அதிஷ்டானங்களைத் தேடித் தேடித் தரிசிப்பார். பழநியைச் சுற்றி உள்ள பகுதிகளில் எங்காவது  மகான்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிந்தால், அடுத்த கணமே அங்கு பயணப்பட்டு விடுவார்.  இப்படித்தான் ஒரு முறை ஒட்டன்சத்திரம் ராமசாமி சி த்தர் பற்றிக் கேள்விப்பட்டார்.

பழநியில் இருந்து புறப்பட்டு, சித்தர் எப்போதும் காணப்படும் பாத்திரக் கடைக்கு வந்தார்.  அங்கே படிக்கட்டில் சித்தர் அமர்ந்திருந்தார். ராஜம்மாள்  அங்கு வந்ததுமே, வாம்மா..... உன்னைத்தான் தேடுகிறேன், வா என்றார் சித்தர்.  மனம் நெகிழ்ந்தபடியே அவரைப் பணிந்து வணங்கினார்  ராஜம்மாள்.  பிறகு, பக்கத்துல ஒட்டல் இருக்கு.  அங்கே போய் ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு வா என்றார். அந்தணர் வீட்டுப் பெண்மணி  திகைத்தார்.  பிரியாணி என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே அவருக்கு வாந்தி வரும் போல் இருந்தது.  தயங்கியவாறே நின்றிருந்தார்.   என்னம்மா... பிரியாணி வாங்கிட்டு வானு சொன்னேன்.... அப்படியே நிக்கறே..... பொறப்படு என்றார் சித்தர்.  பிறகு, நான் வேணா காசு தர்றேன்,  யாரையாவது அனுச்சு வாங்கிட்டு வரச் சொல்லலாமா? என்று குரல் கம்மக் கேட்டார் ராஜம்மாள்.  அதெல்லாம் வேலைக்கு ஆகாதும்மா.  நீயே  கடைக்குப் போய் வாங்கிட்டு வா.  சீக்கிரம் என்று அவசரப்படுத்தினார் சித்தர். ஒட்டல் வாசலில் தயக்கத்துடன் நின்றார் ராஜம்மாள்.  இவரைப்  பார்த்தவுடனேயே புரிந்து கொண்ட ஒட்டல் உரிமையாளர்.  என்னமா...ராமசாமி சித்தர் பிரியாணிப் பொட்டலம் வாங்கிட்டு வரச் சொன்னாரா? ÷ யாகக்காரப் பொம்பளைம்மா நீ.... உனக்கு இன்னிக்கு என்னென்ன அதிசயங்கள் காத்திருக்கோ என்று சொல்லி உள்ளே பிரியாணி பொட்டலத்தை  பார்சல் செய்யச் சொன்னார். காசைக் கொடுத்து விட்டு அந்தப் பொட்டலத்தை வாங்கிய ராஜம்மாள்,ரொம்பவும் கூசிப் போனார்.  ஐயா வீட்டுப்  பெண்மணியை அசைவப் பொட்டலத்தை சுமக்க வைத்து விட்டாரே என்று சித்திரைப் பற்றி சிந்தித்துக் கொண்டே அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு  வந்தார். பொட்டலத்தை அவர் அருகே வைத்து விட்டு, அதன் நெடி உடலுக்கு ஒவ்வாததால் சற்றே நகர்ந்து நின்றார்.

பொட்டலத்தை இப்படி வெச்சிட்டா எப்படி? நீயே பிரி என்று சித்தர் சொன்னதும், அடுத்த இடி இறங்கியது ஐயர் வீட்டு அம்மணிக்கு.  சித்தரின்  குணத்தைப் பற்றி அறிந்தால்.  இவரால் மறுக்கவும் முடியவில்லை. அழுகை உள்ளுக்குள் பொங்க...கண்களை மூடியபடி, பழநி ஆண்டவரை  மனதுக்குள் பிரார்த்தித்தபடி.  பொட்டலம் சுற்றப்பட்டிருந்த நூலை மெள்ளப் பிரித்தார்.  பிரியாணியின் சுவாசம் உள்ளுக்குள் போய் குமைச்சல்  ஏற்படும் என்பதால்.  அந்த வேளையில் சுவாசிக்கவும் மறந்தார்.  பொட்டலம் முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டு விட்டது. இந்தாங்க சாமீ.... என்று  கண்களை மூடிய நிலையிலேயே குத்துமதிப்பாக சித்தர் இருக்கும் திசை நோக்கிப் பொட்டலத்தை நீட்டினார். நீயே கண்ணைத் திறந்து பாரம்மா - உன்  கையில் இருக்கிற பொட்டலம் எந்த அளவுக்கு மணம் வீசுகிறதுன்னு.  அதன் பிறகு என்னிடம் கொடு என்றார் சித்தர். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு  கண்களைத் திறந்து தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பார்த்த ராஜம்மாளுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சிரியம்.  காரணம்-பொட்டலத்தில் இப்போது  இருப்பது பிரியாணி அல்ல.... நெய் வடியும் சர்க்கரைப் பொங்கல்.  சித்தரின் அருள் திறனை எண்ணி விம்மினார் ராஜம்மாள்.  முந்திரியும்  திராட்சைகளும் ஏலமும் கலந்து சர்க்கரைப் பொங்கலின் மணம், ராஜம்மாளின் மூக்கைத் துளைத்தது.  தன் கையில் இருந்த சர்க்கரைப் பொங்கலை -  கோயில் பிரசாதம் போல் மணக்கும் பொங்கலை-நம்பவே முடியாமல் மீண்டும் மீண்டும் பார்த்தார் ராஜம்மாள்.  சாப்பிடும்மா.... எடுத்துச் சாப்பிடு.   ஐயர் வீட்டுப் பொம்பளைக்கு அசைவம் தருவேனாம்மா என்ற சித்தர், தானும் ராஜம்மாளின் கையால் ஒரு கவளம் வாங்கிச் சாப்பிட்டார்.

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சிக்கு அந்த லாரி ஒட்டன்சத்திரம் வழியாகப் போய்க் கொண்டிருந்தது.  அந்த லாரி முழுக்கக் கருவாடு லோடு  செய்யப்பட்டிருந்தது.  அப்போது ராமசாமி சித்தர், பாத்திரைக் கடை வாசலில் படிக்கட்டில் அமர்ந்திருந்தார்.  இவரது இடத்தைக் கடக்கும்போது  அந்த லாரியில் இருந்து ஒரிரண்டு துண்டு கருவாடு சாலையில் விழுந்தது.  ஜீவகாருண்யத்தை (அசைவம் சாப்பிடாதவர்கள்) எப்போதும் கடைபி டித்து வரும் உள்ளூர் அன்பர் ஒருவர் யதேச்சையாக அந்தப் பகுதியைக் கடந்தார்.  சாலையில் சிதறிக் கிடக்கும் ஓரிரு கருவாட்டுத் தூண்டுகளைப்  பார்த்து முகம் சுளித்தார். ஓரமாக நடந்தார். படிக்கட்டில் அமர்ந்திருந்த ராமசாமி சித்தர் இதைப் பார்த்தார். டேய் இங்கே வாடா என்று அவரை  அழைத்தார்.  யாரோ ஒரு சாது போலும் என்கிற நினைப்பில் சித்திரை நெருங்கிய அன்பர், என்ன சாமீ?  என்று கேட்டார். கிழே விழுந்து கிடக்கிற க ருவாட்டுத் துண்டை எடுத்துச் சாப்பிடுடா என்று அதிகாரமாகச் சொன்னார் அவ்வளவுதான்!  முகம் கொதித்துப் போனார் அன்பர்.  இத்தனை  ஆண்டுகளாக ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடித்து என்னைப் பார்த்தா, கருவாடு சாப்பிட்டுச் சொல்கிறீர்? நான் செத்தாலும் சாவேனே தவிர, கருவாடு  சாப்பிடவே மாட்டேன் என்று சொல்லிப் போயே விட்டார்.

சித்தர் மெதுவாகச் சொன்னார்: ஆமாடா....இன்னிக்கு சாயங்காலம் நீ சாகத்தான் போறே.... உன்னைக் காப்பாத்தலாம்னு நினைச்சேன்.....  விதிதான்டா இன்னிக்கு ஜெயிச்சிருக்கு போடா.... போய்ச் சேரு.  ஆம்! அன்று மாலை சுமார் நாலேமுக்கால் மணிக்கு அந்த அன்பருக்குத் திடீர்  மாரடைப்பு வந்து இறந்து போனார்.  ஒருவேளை, சித்தர் சொல்லி இருந்தபடி கருவாட்டுத் துண்டுகளை அவர் எடுத்துச் சாப்பிட்டிருந்தால், பிரிய õணியை சர்க்கரைப் பொங்கலாக மாற்றியது மாதிரி, இதையும் ஒரு சைவ பொருளாக சித்தர் மாற்றி இருக்கக் கூடும்.  இதை உண்ட பலனால், அவரது  ஆயுள் பலம் கூடி இருக்கலாம். விதி ஜெயித்து விட்டது போலும்! பழநி கல்லுரியில் பேராசிரியராகப் பணி புரிந்த கண்ணன் என்பவர், சித்தர்கள்  தரிசனத்தில் நெகிழ்பவர்  பழநியில் இருந்து பல ஸித்துக்களைப் புரிந்த தங்கவேல் சுவாமிகளை அடிக்கடி சந்தித்து, ஆன்ம ஞானம் பெற்றவர்.   ராமசாமி சித்தர் சமாதி ஆனபோது, அப்போது அவருடன் இருந்தவர் இவர்.

இனி, கண்ணன் சொல்லும் அனுபவத்தைப் பார்ப்போம்.

ராமசாமி சித்தர் மாபெரும் மகான் என்பதை ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் பல காலம் வரை உணரவில்லை.  அவ்வப் போது செட்டிநாட்டில் இருந்து  ப்ளைமவுத் காரில் இவருக்கு சாப்பாடு கொண்டுவருவார்கள் சிலர்.  யார் என்பது தெரியாது. பக்தர்கள் சிலர் கொடுக்கும் உணவுப் பொருட்களை  விரும்பி ஏற்றுக் கொள்வார் சித்தர். வேண்டாம் என்றால் தட்டி விட்டு விடுவார். சில சமயங்களில் சிலரை கல் வீசி எறிந்து துரத்துவார். 1977-ஆம்  வருடம் என்று நினைக்கிறேன்.  நான், என் மனைவி, இரு குழந்தைகள் ஆகியோர் முதல் முறையாக சித்தரைப் பார்க்கப் பழநியில் இருந்து  ஒட்டன்சத்திரம் சென்றோம்.  சித்தர் எங்கள் குடும்பத்தை ஊடுருவிப் பார்த்தார்.  பிறகு, நாலு டீ வாங்கி வருமாறு எனக்கு உத்தரவிட்டார்.  உடனே  பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு ஓடிச் சென்று வாங்கி வந்து சித்தரிடம் கொடுத்தேன்.  எங்கள் நான்கு பேரையும் குடிக்கச் சொன்னார்.  பிறகு, ஒரு பீடிக்  கட்டு, மூன்று சிகரெட், ஒரு தீப்பெட்டி இவற்றைக் கொடுத்து, பத்திரமா உன் வீட்டுல வெச்சுக்கோனு சொன்னார்.  ரொம்ப காலம் பாதுகாத்து வந்÷ தன்.  ஒரு முறை வீடு மாறும்போது அது எங்கோ தவறுதலாக மிஸ் ஆகி விட்டது என்று வருத்தத்துடன் சொன்ன கண்ணன், சித்தரின் சமாதி பற்றிச்  சொல்ல ஆரம்பித்தார்.

அது ஒரு சனிக்கிழமை....சித்தரை தரிசிப்பதற்காகப் போனேன்.  சோமசுந்தரம் பிள்ளை வீட்டில் இருந்து ரசம் வாங்கி வரச் சொன்னார்.  வாங்கி வந்து  கொடுத்தேன்.  குடித்தார்.  பிறகு, அவரைத் தரிசித்துக் கொண்டிருக்கும்போது.  பாதையை மறைக்காதடா.... குழிக்குள் இறங்குடா என்பதைத் திரும்பத்  திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.  இதன் காரணம் என்னவென்று எனக்குப் புரியவில்லை.  பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் இதைச்  சொன்னேன்.  வேறொன்னுமில்லை.  அவர் கூடிய சீக்கிரமே சமாதி ஆகப் போகிறார்.  அதைத்தான் இப்படிக் குறிப்பால் சொல்லி இருக்கிறார்  என்றார் அவர். அதன்படி அடுத்த சனிக்கிழமையே ராமசாமி சித்தர் சமாதி ஆகி விட்டார்.  தகவல் கேள்விப்பட்டதும்.  சித்தரின் பக்தர்கள்  ஒட்டன்சத்திரத்தில் குவிந்தனர்.  சிங்கம்புணரி புலவர் பாண்டியன் என்கிற அன்பர் மலர் அலங்காரத்துடன் கூடிய பெரிய தேர் ஒன்றைத் தயாரித்தார்.   சித்தர் அடக்கம் ஆவதற்கு காங்கிரஸ் பிரமுகரான பழநியப்பா, நாகனம்பட்டி ரோட்டில் இடம் தந்தார் (இங்குதான் ராமசாமி சித்தரின் ஜீவ சமாதி இ ருக்கிறது) பெரிய குழி வெட்டி, அதற்குள் நான் இறங்கினேன்.  அப்போதுதான் குழிக்குள் இறங்குடா என்று சித்தர் போன சனிக்கிழமைஅன்று  சொன்னதன் பொருள் எனக்குப் புரிந்தது.  விபூதி, உப்பு, வில்வம், புஷ்பங்கள் போன்றவற்றை நிரப்பி, சித்திரை அடக்கம் செய்தோம்.  நான்  கொண்டு சென்ற ஒரு சிவப்புத் துண்டை அவரது மேலுடம்பில் போர்த்தினேன். மாபெரும் சித்த புருஷரை அடக்கம் செய்த பேறு எனக்கு அன்று  கிடைத்தது அவரது அருள்தான்.

எல்லா காரியங்களும் முடிந்து இரவு சுமார் 11 மணி வாக்கில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநிக்குப் பேருந்தில் புறப்பட்டேன்.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் விருபாட்சிமேடு என்கிற ஓர் இடம் வரும்.  அந்த இடம் சற்று கரடுமுரடாக இருப்பதால்,  அதன் வழியாகப் பயணிக்கும் எந்த ஒரு பேருந்தும் நின்று நிதானித்துதான் செல்லும். அதுபோல் நான் சென்ற பேருந்தும் விருபாட்சிமேட்டைக்  கடக்கும்போது நிதானமாகச் சென்று கொண்டிருந்தது.  அப்போது யதேச்சையாக சாலையின் இடப் பக்கம் கவனித்த நான் துணுக்குற்றுப் போனேன்.   அங்கே-ராமசாமி சித்தர் நடந்து போய்க் கொண்டிருந்தார். அவரது மேலுடம்பில் நான் எப்படிப் போர்த்தினேனோ அதே நிலையில் அந்த சிவப்புத்  துண்டு இருந்தது.  சாமீ....சாமீ என்று குரல் எடுத்துக் கதறினேன்.  பேருந்தில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.  இதற்குள் ÷ பருந்தும் வேகம் எடுத்து விட்டது.  மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். சற்று முன் குழிக்குள் அடக்கமான சித்தர்.  எப்படி விருபாட்சிமேடு அரு கே நடந்து போனார் என்கிற கேள்வி என் மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது,  எனவே, பழநி பேருந்து நிலையத்தில் இறங்கிய கையோடு  முதல் காரியமாக நள்ளிரவு வேளையில் தங்கவேல் சுவாமிகளின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினேன்.  சுவாமிகளே வந்து கதவைத் திறந்து  என்னப்பா... இந்த வேளைல? என்றார்.  எல்லா விஷயத்தையும் அவரிடம் சொன்னேன்.  நாளைக்கு விடிகாலைல அவரை அடக்கம் பண்ண  இடத்தைப் பார்த்துட்டு வந்து என்னிடம் சொல் அப்படின்னு படுக்கப் போய்விட்டார்.

இரவு முழுக்கத் தூக்கமே வரவில்லை. விடிந்தும் விடியாத பொழுதில் வீட்டை விட்டுக் கிளம்பினேன்.  தங்கவேல் சுவாமிகள் சொன்னபடி அந்த  சமாதியை நோட்டமிட்டேன்.  அவரது சமாதியில் - தலைப் பகுதிக்கு நேராக தலையில் அரை அடி நீளத்துக்கு ஒரு வெடிப்பு காணப்பட்டது. உடனே  பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் சொன்னேன்.  ராமசாமி சித்தர் தன்னோட அருள் ஆற்றலை மட்டும் அங்கே வைத்து விட்டு, சரீரத்தை  எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாரப்பா.  அவர் இப்போது வேறு பிரதேசத்தில் உலவிக் கொண்டிருப்பார்.  அவர் போன ஊர்  புண்ணியம்  பெறும் என்றார். அதாவது, சித்தர்களுக்கு சமாதி என்பது ஒரு ஒரு சம்பிரதாயத்துக்குத் தான்.  அவர்கள் என்றென்றும் நம்முடனே இருந்து ஆசி ர்வதித்துக் கொண்டிருப்பார்கள். ராமசாமி சித்தரும் அப்படித்தான்.  சுமார் இரண்டு மாதங்கள் கழித்து.  கேரளாவில் ஏதோ ஒரு குக்கிராமத்தில்  ராமசாமி சித்தரைப் பார்த்ததாக ஒரு நண்பர் சொன்னார் என்று முடித்தார். கண்ணன். ராமசாமி சித்தர் பெரும்பாலும் ஒரு குல்லா அணிந்திருப்பார்.   முஸ்லிம் பக்தர் ஒருவர்.  ஆசையுடன் கொடுத்ததாம் இது.  சித்தரை சமாதி வைத்த இடத்தின் அருகே பிரமாண்டமான ஆலமரம் இருக்கிறது.  இதன்  அருகே ஒரு லிங்கம். சமாதி ஆன இடத்தில் சில செங்கற்களின் மேலே வேங்கடாசலபதி, ஸ்ரீசரஸ்வதிதேவி, முருகப் பெருமான் ஆகியோரது திரு வுருவப் படங்கள் இருக்கின்றன.  உள்ளே ஒரு நந்தி விக்கிரமும் உண்டு.  மற்றபடி சமாதி ஆன இடத்தில் சிறப்பாக எதுவும் இல்லை.  பள்ளிக்குச்  செல்லும் சில மாணவர்கள் அவ்வப்போது இங்கே வந்து வணங்கிச் செல்கிறார்கள்.