Saturday, 25 April 2015

சாந்தானந்தா சுவாமிகள்



                                                       
மதுரை அருகே உள்ள அழகாபுரி எனும் சிற்றூரில் ஒரு அந்தணக் குடும்பத்தில் 1921 ஆம் ஆண்டு பிறந்தார் சாந்தானந்தா சுவாமிகள் . இவரது பெற்றோர்கள் இவர்க்கு இட்ட பெயர் சுப்பிரமணியம் என்பதாகும்.
>> பள்ளி பாடத்தில் விருப்பம் கொள்ளாததால் , மதுரை மீனாட்சியம்மன் கோவிலே சுப்பிரமணியத்தின் இருப்பிடம் ஆயிற்று .. அதன்பின் வேத பாட சாலையில் சேர்ந்து வேதம் பயின்றார். இந்திய விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றும் இருக்கிறார் ..
>> மதுரை திருபரங்குன்றத்தில் சமாதி கொண்ட சூட்டுகோல் மாயாண்டி சித்தரிடம் புவனேஸ்வரி மந்திர தீட்சை பெற்றார். பல ஸ்தலங்களுக்கு சென்று தவ ஆற்றலை பெற்றார் ..வடக்கே ரிசிகேசத்தில் சுவாமி சிவானந்த மகராஜ் ஆசிரமத்தில் சில காலம் தங்கினார் ..
>> ஒருமுறை குஜராத்திலுள்ள அவதூதர்களின் முதலானவரான ஸ்ரீ தத்தாத்திரேயர் ஆலயம் சென்றவர்க்கு ஒரு மகாயோகியின் அனுகிரகம் கிடைத்தது ." உனக்காக உனது குரு சேலம் சேந்தமங்கலத்தில் காத்திருக்கிறார் " என உத்தரவு பிறக்க சேலம் விரைந்து வருகிறார் ..
>> சேலம் அருகே சேந்தமங்கலத்தில் சன்யாசிக்காடு என்ற குன்றில் ஜட்ஜ் சுவாமிகளின் சீடரான ஸ்ரீமத் சுயம்பிரகாச ப்ரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள் தத்த ஆலயம் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்திருந்த அவரைத் தேடி வந்த சுப்ரமண்யம் அவரே தனக்கான குரு என உணர்ந்து சரணாகதி அடைந்தார் ... தத்த சம்பிரதாயப்படி குருவால் உபதேசம் பெற்று, சாந்தானந்தா என்ற நாமம் பெற்றார்.
>> தனது குருவின் கட்டளை "ஒரு வருடம் " புதுக்கோட்டை சென்று அதிஷ்டானப் பொறுப்பு ஏற்றுக் கொள்" என்று உத்தரவிட குருவின் சொற்படி புதுக்கோட்டை அதிஷ்டானத்தில் தங்கினார் . ஜட்ஸ் சுவாமிகள் அவர்களின் ஆஸ்ரமமாக இருந்த இடத்தை சாந்தானந்தா சுவாமிகள் மேற்கொண்டு அதிஷ்டானமாக்கி இருக்கிறார்.
>> புவனேஸ்வரி கோவிலுக்கு அதிஷ்டானம் என்று பெயர். 1936ஆம் ஆண்டு முதல் இந்தக்கோவில் இருக்கிறது.அதிஷ்டானத்திற்கு வரும் அன்பர்கள் சாந்தானந்தரின் தேஜஸ் கண்டு வியந்து அனுகிரகம் பெற்றனர் . அதிஷ்டானம் அன்பர்கள் ஆதரவில் புதுப்பொலிவு பெற்றது.
>> அதிஷ்டானப் பொறுப்பை சீடரிடம் ஒப்படைத்த சுயம்பிரகாசர் 1948 டிசம்பர் 29ல் மகாசமாதி அடைந்தார். சாந்தானந்தர் தன் குரு அமர்ந்திருந்த குகையை செப்பனிட்டு, மகத்தான ஸ்ரீசக்ர பீடம் நிறுவினார். புதுக்கோட்டை அதிஷ்டானம் விரிவுபடுத்தப்பட்டு, 1956ல் மகா கும்பாபிஷேகம் நடை பெறச் செய்தார் ..
ஸ்ரீ கந்தாஸ்ரமம் தோற்றம் :
1965 ல் இந்த ஆஸ்ரமத்தை நிறுவிய ஸ்ரீ மத் ஸத்குரு சாந்தானந்த சுவாமிகளின் கனவில் வந்த முருகப்பெருமான் தன்னை குறிப்பிட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யும்படி அருளினார். கனவில் வந்த முருகப்பெருமான் சொன்ன இடத்தை தேடியலைந்த இவர் கடைசியாக இப்போது கந்தாஸ்ரமம் இருக்கும் இடத்தை அடைந்தவுடன் தான் கனவில் கண்ட இடம் இதுதான் என்று கூறி இங்கு முருகனை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார்.
>> சாமிகளால் ஆசிரமத்தார் தங்குவதற்கு கூடங்கள் எல்லாம் கட்டப்பட்டு 1971ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்கந்தனின் 'ஸ்கந்த குரு கவசம்' சாந்தானந்த சுவாமிகள் அருளியதே ஆகும். சென்னை கிழக்கு தாம்பரத்தில் ஒரு ஸ்கந்தாஸ்ரமம் நிறுவி இறை உணர்வைப் பெருகச் செய்தார் சுவாமிகள். தம் வாழ் நாள் முழுவதையும் குரு சேவை, இறை சேவை, மக்கள் சேவை என்றே அர்ப்பணித்த ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் 27-05 -2002 ம் நாள் முத்தி அடைந்தார். அவரது விருபப்படி அவரது அதிஷ்டானம் ஸ்ரீஸ்காந்தாஸ்ரமத்தில் உள்ளது.

No comments:

Post a Comment