கடவுள் யார்.... வாழ்க்கை என்றால் என்ன உலகில் ஏன் வறுமை உள்ளது என்ற கேள்விகளை தனக்குள் கேட்டு, அதற்கான பதிலை சமுதாயத்திற்குத் தந்தவர் தான் வேதாத்திரி மகரிஷி. 1911 - ஆகஸ்ட் 14ல் சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். பல ஆண்டுகளாக தொடர்ந்து அவர் மேற்கொண்ட தவம் மற்றும் ஆராய்ச்சியால் 35-வது வயதில் ஞானம் பெற்றார். தமிழகத்தில் வாழ்ந்த திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், வள்ளலார் போன்ற சித்தர்களின் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர். மக்கள் அனைவரும் இன்பமாக வாழவே விருப்பப்படுகின்றனர். இயற்கையில் எல்லாம் இன்பமயமாகவே உள்ளன. ஆனாலும் மனிதன் தொடர்ந்து துன்பங்களையே அனுபவித்து வருவதாக உணர்கிறான். இத்துன்பங்களை போக்க மன நிறைவு பெற 4 விதமான பயிற்சியை மகரிஷி உருவாக்கியுள்ளார். எளியமுறை உடற்பயிற்சி, தியானப்பயிற்சி காயகல்பப்பயிற்சி, அகத்தாய்வுப்பயிற்சிகள் இவைகளை கற்றுத்தர 1958ல் உலக சமுதாய சேவா சங்கத்தை உருவாக்கினார். தனிமனித அமைதி, ஆகிய நோக்கங்களை கொண்டது தான் இம்மையம். 6 வயது முதல் 60 வயதுவரையுள்ள ஆண், பெண் அனைவருக்கும் கற்றுத்தரும் எளிய பயிற்சிகள் இவை. மகிரிஷி சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆன்மிக, தத்துவப்பாடல்களை தமிழ், ஆங்கிலத்தில் இயற்றியுள்ளார். 1984-ல் பொள்ளாச்சி, அருகே ஆழியாற்றில், வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி அங்கு ஓம் என்ற வடிவில் அறிவுத்திருக்கோயில் நிறுவப்பட்டுள்ளது. அங்கிருந்து தற்போது தனது சேவையை செய்து வருகிறார் மகரிஷி. இச்சங்கத்தின் கிளைகள் உலகம் முழுவதும் 225 ஊர்களில் செயல்படுகிறது.
நமது புனித பாரதநாட்டில் உலவிய,உலவி வரும் சித்தர்கள் கோடானுகோடிஅதுவும் கடந்த 20 ஆண்டுகளுக்குள் நம்மிடையே நடமாடி சமாதி நிலை ஏற்ற சித்தர்கள் மிக பலர். இந்த சித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும்.இவர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டு,நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்தி, நம்புவர்களை உடன் இருந்து காத்து,வழி காட்டுபவர்கள்.அப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்பட்டதே இந்த இணையதளம்.அப்படிப்பட்ட சித்தர்களை , ஜீவசமாதிகளை பற்றி இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Thursday, 26 February 2015
வேதாத்திரி மகரிஷி
கடவுள் யார்.... வாழ்க்கை என்றால் என்ன உலகில் ஏன் வறுமை உள்ளது என்ற கேள்விகளை தனக்குள் கேட்டு, அதற்கான பதிலை சமுதாயத்திற்குத் தந்தவர் தான் வேதாத்திரி மகரிஷி. 1911 - ஆகஸ்ட் 14ல் சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். பல ஆண்டுகளாக தொடர்ந்து அவர் மேற்கொண்ட தவம் மற்றும் ஆராய்ச்சியால் 35-வது வயதில் ஞானம் பெற்றார். தமிழகத்தில் வாழ்ந்த திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், வள்ளலார் போன்ற சித்தர்களின் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர். மக்கள் அனைவரும் இன்பமாக வாழவே விருப்பப்படுகின்றனர். இயற்கையில் எல்லாம் இன்பமயமாகவே உள்ளன. ஆனாலும் மனிதன் தொடர்ந்து துன்பங்களையே அனுபவித்து வருவதாக உணர்கிறான். இத்துன்பங்களை போக்க மன நிறைவு பெற 4 விதமான பயிற்சியை மகரிஷி உருவாக்கியுள்ளார். எளியமுறை உடற்பயிற்சி, தியானப்பயிற்சி காயகல்பப்பயிற்சி, அகத்தாய்வுப்பயிற்சிகள் இவைகளை கற்றுத்தர 1958ல் உலக சமுதாய சேவா சங்கத்தை உருவாக்கினார். தனிமனித அமைதி, ஆகிய நோக்கங்களை கொண்டது தான் இம்மையம். 6 வயது முதல் 60 வயதுவரையுள்ள ஆண், பெண் அனைவருக்கும் கற்றுத்தரும் எளிய பயிற்சிகள் இவை. மகிரிஷி சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆன்மிக, தத்துவப்பாடல்களை தமிழ், ஆங்கிலத்தில் இயற்றியுள்ளார். 1984-ல் பொள்ளாச்சி, அருகே ஆழியாற்றில், வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி அங்கு ஓம் என்ற வடிவில் அறிவுத்திருக்கோயில் நிறுவப்பட்டுள்ளது. அங்கிருந்து தற்போது தனது சேவையை செய்து வருகிறார் மகரிஷி. இச்சங்கத்தின் கிளைகள் உலகம் முழுவதும் 225 ஊர்களில் செயல்படுகிறது.
காமாட்சி மவுனகுரு சுவாமிகள்

திண்டுக்கல்லுக்கு அருகே திருமலைக்கேணி என்கிற அழகான கிராமத்தில் காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. தான் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ அன்பர்களை நல்வழிப்படுத்தியும் அவர்களுக்கு ஆசிகளை வழங்கியும், பிறவிப் பிணிகளை நீக்கியும் வாழ்ந்த ஒப்பற்ற மகான்-காமாட்சி மவுனகுரு சுவாமிகள். முருகப் பெருமானின் தனிப்பட்ட தரிசனத்தை ஒரு முறையும், ஸ்ரீவள்ளி-ஸ்ரீதெய்வானையின் இணைந்த தரிசனத்தை ஒரு முறையும் பெற்றவர் இவர் இன்றைக்கும் தன் சன்னிதி தேடி வரும் எந்த ஒரு பக்தரின் பிரார்த்தனையையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறார் இந்த சித்த புருஷர்.
காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் சிஷ்யரான குழந்தைசாமியின் சமாதியும் குழந்தைசாமியின் சிஷ்யரான சச்சிதானந்த சுவாமிகளின் சமாதியும் காமாட்சி மவுனகுரு சுவாமிகள் ஜீவ சமாதியை ஒட்டியே அமைந்துள்ளன. காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் குருபூஜை ஆடி பூராடத்தன்றும், குழந்தைசாமியின் குருபூஜை ஆவணி பூசத்தன்றும். சச்சிதானந்த சுவாமிகளின் குருபூஜை புரட்டாசி அசுவினி அன்றும் பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த தினங்களில் விசேஷ அபிஷேகங்களும் அலங்காரங்களும் அன்னதானமும் நடைபெறும். திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றி உள்ள பல பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கூடி குருமார்களின் அருள் பெறுவது வழக்கம்.
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருமலைக்கேணி, நத்தத்தில் இருந்து மணக்காட்டூர் வழியாக திருமலைக்கேணி வந்தால் 24 கி.மீ.! திண்டுக்கல்லில் இருந்து செங்குறிச்சி செல்லும் நகரப் பேருந்துகளும் செந்துறைக்குச் செல்லும் புறநகர் பேருந்துகளும் திருமலைக்கேணி வழியாகச் செல்லும். காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் ஜீவ சமாதி அருகே சுவாமிகளுக்கு தரிசனம் தந்த-ஸ்ரீமுருகப் பெருமான் திருக்கோயில், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. முருகப் பெருமானே காமாட்சி மவுனகுரு சுவாமிகளைக் கூப்பிட்டு வந்து, இங்கே உட்கார் என்று இந்தச் சிறு மலையை அடையாளம் காட்டியதாக அவரது பக்தர்கள் சொல்கின்றனர். சுவாமிகளுக்கு முருகப் பெருமான் காட்சி கொடுத்த இடமும் ஸ்ரீவள்ளி மற்றும் ஸ்ரீ தெய்வானையின் தரிசனம் பெற்ற வள்ளி சுனையும் அருகிலேயே உள்ளன.
இனி, காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் சரிதத்தைப் பார்ப்போம்? திண்டுக்கல் மாவட்டத்தில் செங்குறிச்சி கிராமத்துக்கு அருகே உள்ளது வல்லம்பட்டி என்கிற குக்கிராமம். விவசாயத்தையே பிரதானமாகக்கொண்டு வல்லம்பட்டியில் வாழ்ந்து வந்தவர்கள் குப்புசாமி- குப்பாயி அம்மாள் தம்பதியர். இறை அருளாலும். மகான்கள் ஆசியாலும் இந்த தம்பதிக்கு கி.பி. 1875-ஆம் ஆண்டு முதல் குழந்தையாக நம் சுவாமிகள் அவதரித்தார். பெற்றோரின் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஆட்பட்டு, சுவாமிகள் வளர்ந்து வந்தார். தந்தையின் விவசாயப் பணிகளுக்கும் தாயின் விட்டு வேலைகளுக்கும் உதவியாக இருந்து வந்தார் சுவாமிகள். அந்தக் கால வழக்கப்படி இளம் பிராயத்திலேயே சுவாமிகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். செம்பாயி அம்மாள் என்பவரைக் கரம் பிடித்தார் சுவாமிகள். ஒரு சில வருடங்கள் கழிந்த பின்னர் செம்பாயி அம்மாளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. தாத்தாவின் பெயரை நினைவுபடுத்தும் விதமாக குப்புசாமி என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்தனர்.
இளம் வயதில் இருந்தே முருக பக்தியில் திளைத்திருப்பது காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் வழக்கம். எத்தனை காலத்துக்குத்தான் தன் பக்தனைத் தள்ளி வைத்துக்கொண்டே பார்ப்பார் முருகப் பெருமான்? சுவாமிகளைத் தன் பக்கம் இழுக்கவேண்டிய வேளை வந்ததும். சுவாமிகளின் மனதில் புகுந்தார் முருகப் பெருமான் பிறகென்ன... உணவு சுவைக்கவில்லை; ஆடை பாரமானது இல்லறம் இனிமை இழந்தது. மனைவியையும் மகனையும் மனம் மறந்தது; தான் தேடவேண்டிய சுகம் இல்லறம் அல்ல என்பதை சுவாமிகள் உணர்ந்துகொண்டார். 1905-ஆம் வருடம் (தமிழ் வருடம்; விசுவாச) கார்த்திகை மாதம் 12-ஆம் தேதி சுவாமிகள் துறவு பூண்டார் என்று அவரது சரிதம் சொல்கிறது. அதன் பிறகு அவரது வாழ்க்கை முறையே மாறியது. சித்து விளையாடல்களும் அருளாடல்களும் நிகழ்த்தி பக்தர்களுக்கு ஆன்மிக போதனைகளை வழங்கினார். மலைப் பகுதிகளில் ஆங்காங்கே நேரம் போவது தெரியாமல் அமர்ந்து கடும் தியானம் மேற்கொண்டார். முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில்களில் முழு நேரத்தைச் செலவழித்தார். எங்கெங்கோ சுற்றித் திரிந்த சுவாமிகளை-அவரது முப்பது வயதில்- என் கோயிலுக்கு வா என்று முருகப் பெருமான் அழைத்தார். அந்த கோயில்தான்-சுவாமிகளின் சமாதி அருகே இருக்கும் ஸ்ரீமுருகப் பெருமான் திருக்கோயில். அழகான கோயில்.
காமாட்சி மவுனகுரு சுவாமிகளிடம் வருவோம்... சுவாமிகளின் சித்து விளையாட்டுகள் வெளியே தெரிய வேண்டிய வேளை வந்தது. வல்லம்பட்டிக்குத் தென்கிழக்கே கரந்தமலை என்னும் இடத்தில் ஐயனார் கோயில் ஒன்று இருந்தது. சுமார் ஆறு மாதங்கள் அங்கேயே தங்கி யோகப் பயிற்சிகளை மேற்கொண்டார். அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு. செங்குறிச்சியின் சேரிப் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றார். எவரது அனுமதியையும் எதிர்பார்க்காமல் ஒரு குடிசை வீட்டுக்குள் நுழைந்தார் சுவாமிகள். குடிசை வீட்டுக்குள் இருந்தவர்கள் அதிர்ந்தனர். காரணம் - சுவாமிகளையும் அவரது குடும்பத்தினரையும் நன்றாக அறிந்தவர்கள் அவர்கள். சோழிய செட்டியார் இனத்தைச் சேர்ந்த தாங்கள் எங்கள் வீடுகளுக்கு வரக் கூடாது என்று அன்புடன் சொன்னார்கள். இல்லறச் சட்டையையே துறந்தவருக்கு சாதியச் சட்டையா சங்கடம் ஏற்படுத்தும்? சிரித்தார். பிறகு, அந்த வீட்டிலேயே அமர்ந்தார். குடும்பத்தினர் நெளிந்தார்கள். தவத்திலும் யோகத்திலும் திளைக்கும் சுவாமிகள் ஒருவர் தங்கள் வீட்டுக்கு வந்திருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும். உள்ளூர பயந்தார்கள். அப்போது, எனக்குப் பசிக்கிறது. சாப்பாடு கொடுங்கள் என்றார் சுவாமிகள்.
ஐயா.... உங்களுக்கு நாங்கள் சாப்பாடு தரக் கூடாது. மாமிசத்தை உண்பவர்கள் நாங்கள் என்று நாசூக்காக மறுத்தனர். கேட்கும் சுபாவமா சுவாமிகளுக்கு? சாப்பாடு வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகே சென்றார். தரையை சுத்தும் செய்து ஒரு இலையை விரித்தார். பாத்திரத்தில் இருந்து சிறிது சாதத்தை இலையில் போட்டார். மாமிசத் துண்டுகள் கலந்த குழம்பை அதில் கலந்தார். நிம்மதியாக ரசித்துச் சாப்பிட்டார். குடும்பத்தினர் அனைவரும் விதிர்விதிர்த்து நின்றிருந்தபோது, என்ன, பாக்கிறீங்க... எப்படி நான் இதை எல்லாம் சாப்பிடறேன்னு கவலையா? நான் என்ன சாப்பிட்டேன்னு காட்டறேன். என் அருகே வாங்க என்று சொன்னதும். அந்தக் குடும்பத்தில் இருந்தவர்கள் சுவாமிகளின் அருகே பயப்பக்தியுடன் வந்து அமர்ந்தனர். அப்போது சுவாமிகள் தன் வாயைத் திறந்து காட்டவும். உள்ளே - உணவு அனைத்தும் மல்லிகை மலர்களாகக் காட்சி கொடுத்தன. பிரமித்துப் போன அந்தக் குடும்பத்தினர். சுவாமிகளின் கால்களில் விழ. அவர்களை ஆசிர்வதித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். சுவாமிகள். காடு மலை என்று சுற்றித் திரிந்தார். ஒரு நாள் முருகப்பெருமானே சுவாமிகள் எதிரில் தோன்றி, திருமலைக்கேணியில் உள்ள கோயிலின் அடையாளங்களைச் சொல்லி, நீ அங்கே போய் உட்கார். உன்னால் அங்கே ஆகவேண்டிய பணிகள் உள்ளது என்று சொல்லி மறைந்தார். முருகப் பெருமானின் உத்தரவுகிணங்க, நேராக திருமலைக்கேணி ஸ்ரீமுருகன் கோயிலுக்கு வந்தார். இவர் வந்த வேளையில் அந்த கோயில் கவனிப்பார் இல்லாமல் - முறையான வழிபாடுகள் இல்லாமல் பாழ்பட்டு இருந்தது. இதைக் கண்டு வருந்தினார். சுவாமிகள் முருகப் பெருமானை தியானித்து விட்டு, கோயில் வடபுறம் அமைந்துள்ள ஒரு சிறு கல்பாறையில் புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்து தியானத்தை மேற்கொண்டார். இந்தக் கல்பாறை இன்றும் பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.
இப்படி தியானம் மேற்கொண்டு வந்த காலத்தில் வள்ளி, தெய்வானை ஆகிய இருவரையும் இங்கு தரிசிக்கும் பேறு பெற்றார் சுவாமிகள். ஒரு நாள் வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய இருவரும் சாதாரண பெண்கள் வடிவில் சுவாமிகளுக்கு எதிரே தோன்றினர். இவருக்கு முன்பாக நின்று, சுவாமீ..... நாங்கள் தினைமாவு சாப்பிட்டு வந்தோம். இப்போது தாகம் நாக்கை வறட்டுகிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என்று ஒருமித்த குரலில் கேட்டனர். நிமிர்ந்து பார்த்த சுவாமிகள், அதோ, ஸ்ரீசுப்பிரமண்ய் கோயிலுக்குத் தென்புறம் தீர்த்தம் அமைந்துள்ளது. அங்கே போய் அருந்துங்கள் என்றார். அதற்கு அவர்கள், அங்கே தீர்த்தம் இருப்பது எங்களுக்கு தெரியும். தங்களது திருக்கரங்களால் தீர்த்தம் கொடுங்கள் என்று கெஞ்சலாகக் கேட்க... தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து, தனக்குப் பக்கத்தில் - தரையில் ஓரிடத்தில் கைகளால் பள்ளம் பறித்தார். என்னே ஆச்சிரியம்.... பீறிட்டு வந்தது பளிங்கு போன்ற நீர்! பிறகு, அந்த நீரை சுவாமிகள் இருவருக்கும் கொடுக்க, அதை அருந்தியவர்கள் அடுத்த கணமே அங்கிருந்து மாயமானார்கள். இந்தத் தீர்த்தத்தை இன்றும் நாம் தரிசிக்கலாம். பக்தர்களை இந்தத் திருமலைக்கேணி கோயிலுக்கு வரவழைக்க வேண்டும் என்பதற்காக 1914-ஆம் வருடம் தைப்பூச தினத்தில் திண்டுக்கல் குப்புசாமி ஐயங்கார் குடும்பத்தாரைக் கொண்டு திருமலைக்கேணி முருகப் பெருமான் கோயில் அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார் சுவாமிகள். இதன் பிறகு, இந்தக் கோயில் பற்றி வெளி உலகத்துக்கு மெள்ளத் தெரிய ஆரம்பித்தது.
தன் கணவர் (ஸ்ரீகாமாட்சி மவுனகுரு சுவாமிகள்) வீட்டை விட்டு வெளியேறிப் பல காலம் ஆன பிறகு, அவர் திருமலைக்கேணி முருகப் பெருமான் கோயில் இருப்பதைக் கேள்விப்பட்ட செம்பாயி அம்மாள். அவரைச் சந்தித்துப் பேசி வீட்டுக்கு அழைத்து வந்துவிடலாம் என்று எண்ணி, தனக்கு வேண்டப்பட்ட நான்கு பெண்களுடன் ஒரு முறை திருமலைக்கேணி வந்தார். கோயில் வாசல் படிக்கட்டில் தன் கணவர் அமர்ந்திருப்பதைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கதறினார் செம்பாயி அம்மாள். எப்படியாவது வீட்டுக்கு வந்து விடுங்கள் என்று அவர் மனைவியும் உடன் வந்த பெண்களும் சுவாமிகளிடம் வேண்ட... அடுத்த கணம் சுவாமிகள் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு நல்ல பாம்பு படம் எடுத்து நின்றிருந்தது. சுவாமிகளை அங்கே காணவில்லை. அதன் பிறகுதான், தன் கணவரின் தவ வலிமையையும் அவரது நிலைப்பாட்டையும் உணர்ந்த செம்பாயி அம்மாள். நல்ல பாம்பை வணங்கிவிட்டு, முருகப் பெருமானையும் தரிசித்துவிட்ட, உடன் வந்த பெண்களுடன் அங்கிருந்து புறப்பட்டார். ஒரு முறை சுவாமிகளின் பக்தர்கள் சிலர் காசிக்குச் சென்று ஸ்ரீவிஸ்வநாதரைத் தரிசிக்க விருப்பம் கொண்டார்கள். தங்களது இந்த யாத்திரையில் சுவாமிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று அவரிடம் விண்ணப்பித்தார்கள். இருந்த இடத்தில் இருந்தபடியே காசியைக் காட்ட வல்லவர் இந்த சுவாமிகள் என்பதை அந்த பக்தர்கள் அறிந்திருக்கவில்லை. அடேய்... காசிக்குப் போய்த்தான் விஸ்வநாதரை தரிசிக்க வேண்டுமா? மெனக்கெட வேண்டாம். வயல் வேலைகளை விட்டு விட்டு அங்கே ஏன் செல்கிறீர்கள்? காசி தரிசனத்தை உங்களுக்கு இங்கேயே காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டுத் தன் வலது உள்ளங்கையை அவர்களுக்கு முன் நீட்டினார். பிறகு, காசியை நன்றாக தரிசியுங்கள் என்று அவர்களிடம் சொன்னார்.
சுவாமிகளின் வலது உள்ளங்கையப் பார்த்த அந்த பக்தர்கள் பிரமித்துப் போனார்கள். வீடியோ காட்சி மாதிரி சுவாமிகள் உள்ளங்கையில் பொங்கிப் பிரவாகம் எடுக்கும் கங்கையும் ஏராளமான பக்தர்கள் அங்கே புனித நீராடுவதையும் ஸ்ரீகாசி விஸ்வநாதருக்கு ஆரத்தி நடப்பதையும் ஸ்ரீவிசாலாட்சி அன்னைக்கு தீபாராதனை காண்பிக்கும் காட்சியையும், ஜொலிக்கும் அன்னபூரணி கோயில் மாறி மாறி தரிசித்து நெக்குருகிப் போனார்கள் அந்த பக்தர்கள். சாமீ.... உங்களோட தவ வலிமை தெரியாமல். எங்களில் நீங்களும் ஒருத்தரா நினைச்சு காசிக்குக் கூப்பிட்டுவிட்டோம். எங்களை மன்னிச்சிடுங்க சாமீ என்று அவரது கால்களில் விழுந்தனர். அனைவரையும் ஆசிர்வதித்துப் பிரசாதம் கொடுத்து அனுப்பினார் சுவாமிகள்.
ஒவ்வொரு வருடமும் திருமலைக்கேணியில் தைப்பூச விழா நடக்கும் முன்னதாக சுவாமிகளே அக்கம்பக்கத்து ஊர்களுக்குச் சென்று பலரையும் கோயிலுக்கு வருமாறு அழைப்பது வழக்கம். அப்படி ஒரு தைப்பூச விழா பற்றித் தன் பக்தர்களுக்குத் தகவல் சொல்வதற்காகத் திண்டுக்கல் சென்றிருந்தார். சுவாமிகள் அப்போது சுவாமிகளைச் சந்தித்த இரண்டு பக்தர்கள். அன்றைய மதிய உணவுக்குத் தங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். சுவாமிகள் குழம்பினார். யாராவது ஒருவர் வீட்டில்தானே உண்ண முடியும்? அதுவும் மதிய வேளை உணவுக்கு இப்படி இரண்டு பேரும் கூப்பிடுகிறீர்களே.... இருவரில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுங்களேன் என்று அவர்களிடமே கேட்டார். ஆனால், அந்த இருவருமே விட்டுக் கொடுப்பதாக இல்லை. தங்கள் விட்டு மதிய உணவுக்கு சுவாமிகள் அவசியம் வர வேண்டும் என்று அன்புத் தொல்லை கொடுத்தனர். சரி.... ரெண்டு பேர் வீட்டிலும் உணவு தயார் செய்யுங்கள். பார்க்கலாம் யார் வீட்டுக்கு வர முடிகிறதோ. வருகிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். என் வீட்டில் சுவாமிகளுக்குப் பிரதமாதமான விருந்து வைத்து அசந்துப் போகிறேன். பார் என்று ஒருவர் மற்றவரிடம் சொல்லி விட்டு, இரண்டு அனபர்களுமே விருந்து தயார் செய்யப் புறப்பட்டனர். சுவாமிகள் எப்படியும் நம் வீட்டுக்குத்தான் வருவார். அவன் வீட்டுக்குப் போக மாட்டார் என்று இருவருமே எண்ணினார்கள். ஆனால் சுவாமிகளின் சித்து வேலைகள் அவர்களுக்குத் தெரியுமா, என்ன?
மதிய வேளை, இருவரது வீட்டிலும் ஒரே நேரத்தில் நுழைந்தார் சுவாமிகள். யப்பா.... நல்லவேளை .... சுவாமிகள் நம் வீட்டுக்கு வந்துவிட்டார் என்று இருவரும் தனித் தனியே தங்கள் வீடுகளில் சந்தோஷப்பட்டனர். சுவாமிகளுக்குப் பாத பூஜை செய்து. ஆசனத்தில் அமர வைத்து. தலைவாழை இலை போட்டு விருந்து படைத்தனர். திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு. குடும்பத்தினரை ஆசிர்வதித்துவிட்டு, திருமலைக்கேணிக்குப் புறப்பட்டு போனார் சுவாமிகள். அன்று மாலை அந்த இரு நண்பர்களும் கடைத் தெருவில் சந்தித்தனர். என்னப்பா.... உன் வீட்டுக்கு சுவாமிகள் வராமல் ஏமாற்றி இருப்பாரே... என் வீட்டில் அவருக்கு இன்று தடபுடல் விருந்து வைத்து அமர்க்களப்படுத்திவிட்டேன் என்றார் முதல் அன்பர். இதைக் கேட்ட இரண்டாவது அன்பர் கேலியாகச் சிரித்து. ஏம்ப்பா... என் வீட்டுக்குத்தாம்ப்பா வந்தார். பாத பூஜை செய்து, நானே என் கையால் அவருக்கு உணவு பரிமாறினேன் என்று சொல்ல.... ஒரு கட்டத்தில் இருவரும் குழம்பினர். பிறகுதான், அவர்களுக்கு சுவாமிகளின் சித்து விளையாடல் புரிந்தது. 1917-ஆம் ஆண்டு பிங்கள வருடம் ஆடி மாதம் 17-ஆம் தேதி செவ்வாய்கிழமை இரவு 11 மணி அளவில் தன்னுடைய தவ பலத்தால். ஜீவ சமாதி நிலையை அடைந்தார் ஸ்ரீகாமாட்சி மவுனகுரு சுவாமிகள். எனக்கு என்றும் இயல்பு இல்லை. என்றைக்கும் நான் இங்கேயே வீற்றிருந்து என்னைத் தேடி வரும் பக்தர்களைக் காத்து அருள் புரிவேன் என்று ஜீவ சமாதி ஆவதற்கு முன் சுவாமிகள் சொன்னதாக அவரது பக்தர்கள் தெரிவித்தார்கள். இதனால்தானோ என்னவோ... என் மனைவி, அவளுடைய ஆயுள் முழுதும் திருமாங்கல்யம் அணிந்திருக்க வேண்டும். என்று தான் சமாதி ஆகும்போது சொல்லி இருந்தார்.
எனவே சுவாமிகள் இன்றைக்கும் சூட்சும உருவில் இங்கு இருந்து வருவதாக அவரது பக்தர்கள் திடமான நம்பிக்கையில் வந்து தரிசிக்கிறார்கள். சுவாமிகள் பயன்படுத்திய தண்டம், திருவடி, உபயோகப்படுத்திய ஓலைப் பெட்டிகள் போன்றவற்றை இங்கே தரிசிக்கலாம். நவக்கிரகம் விநாயகர் சன்னிதிகளும் உண்டு. திருமலைக்கேணி திருப்பணிகளுக்கு வாரியார் சுவாமிகள் ஒரு முறை விஜயம் செய்திருக்கிறார். தற்போது இந்த திருமலைக்கேணி மடத்தை நிர்வகித்து வருபவர் சச்சிதானந்த சுவாமிகளின் சிஷ்யரான முத்துகோபாலகிருஷ்ண சுவாமிகள் என்பவர். என்றாலும், மடத்தின் பெரும்பாலான பொறுப்புகளை அங்கேயே இருந்து கவனித்து வருபவர்-கா.கு. பிச்சை என்கிற முருகேசன் என்பவர். இவர் காமாட்சி மவுனகுரு சுவாமிகளின் பேரன். காமாட்சிமவுனகுரு சுவாமிகளின் மகனான குப்புசாமியின் மகன்தான் முருகேசன். குருபூஜை தினங்கள் தவிர, ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி தினத்தன்றும் அன்னதானத்துடன் அபிஷேக-அலங்காரங்கள் நடைபெறுகின்றன. முருகனருள் பெற்ற காமாட்சி மவுனகுரு சுவாமிகளை திருமலைக்கேணியில் தரிசித்து குருவருள் பெறுவோம்!
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருமலைக்கேணி. நத்தத்தில் இருந்து மணக்காட்டூர் வழியாக திருமலைக்கேணி வந்தால் 24 கி.மீ. 1 திண்டுக்கல்லில் இருந்து செந்துறைக்குச் செல்லும் புறநகர் பேருந்துகள் திருமலைக்கேணி வழியாகச் செல்லும்.
செந்துறையில் இருந்து திருமலைக்கேணி வழியாகப் பழநி செல்லும் தடமும் உண்டு. செந்துறையில் இருந்து திருமலைக்கேணிக்கு சுமார் 15 கி.மீ. தொலைவு. செங்குறிச்சியில் இருந்து திருமலைக்கேணிக்கு 2 கி.மீ. தொலைவு.
திண்டுக்கல்லில் இருந்து செங்குறிச்சி செல்லும் நகரப் பேருந்து தடம் எண்: 2ஏ, 2பி ஆகியவை திருமலைக்கேணி வழியாகச் செல்லும். செந்துறையில் இருந்து திருமலைக்கேணிக்கு பேருந்து வசதி உண்டு. திண்டுக்கல்லில் இருந்து திருமலைக்கேணி வழியாக துவரங்குறிச்சி செல்லும் பேருந்துகளும் உண்டு.
தொடர்புக்கு:
திருமலைக்கேணி ஜீவசமாதி மடம்,
செங்குறிச்சி அஞ்சல், சிலுவத்தூர் வழி,
திண்டுக்கல் மாவட்டம் - 624 306.
ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர்

திண்டுக்கல்-பழநி மெயின் ரோட்டில் வரும் நட்ட நடுவில் வரும் ஊர் ஒட்டன்சத்திரம். அதாவது திண்டுக்கலில் இருந்தும் பழநியில் இருந்தும் ஒட்டன்சத்திரம் 30 கி.மீ. தொலைவில் மையமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பல ஊர்களுக்குக் காய்கறிகளை சப்ளை செய்து கொண்டிருக்கும் ஊர் இது. வர்த்தகர்கள் அதிகம். எல்லாம் இருந்தும் ஒரே ஒரு குறை..... ஒட்டன்சத்திரத்தில் உள்ள ராமசாமி சித்தரின் சமாதி, கவனிப்பார் இல்லாமல் - முறையான வழிபாடு இல்லாமல் காணப்படுவது பல பக்தர்களின் மனதைப் பிசைகிறது. இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்தர்கள் எப்போதாவது இங்கே வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். மற்றபடி இங்கே எந்த நடமாட்டமும் இருக்காது. எண்ணற்ற அற்புதங்களையும் ஸித்து விளைய õட்டுகளையும் நிகழ்த்திய ஒரு மகான் ஒட்டன்சத்திரத்தில் குடி கொண்டிருக்கிறார் என்பது உள்ளூர்க்காரர்கள் பலருக்குக்கூடத் தெரியவில்லை.
ராமசாமி சித்தர் எங்கே பிறந்தார், பெற்றோர் யார். எப்படி ஒட்டன்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே குடி கொண்டார் என்பது போன்ற தகவல்கள் தெரியவில்லை. தான் ஒட்டன்சத்திரத்தில் வாழ்ந்த காலத்தில் மெயின் ரோட்டில் உள்ள சகுந்தலா பாத்திரக் கடை வாசலில் வசித்து வந்திருக்கிறார். இதற்கு அருகில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் இருந்து அவ்வப்போது டீயும், பிரியாணி பொட்டலமும் வந்துவிடும். சித்தர்கள் பிரியாணி சா ப்பிடுவாரா என்று தோன்றலாம் அவர்கள் அசைவம் சாப்பிடுவது என்பது அதை ரசித்து உண்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. தன்னை நாடி வரும் பக்தர்களின் பிணியைத் தீர்ப்பதற்கு. வருபவர்களிடமே பிரியாணி பொட்டலம் வாங்கி வா என்று அனுப்பி, அதை சாப்பிடுவது போல் செய்து பிணியை அறுத்திருக்கிறார்கள். அசைவம் சாப்படுவது என்பது ஒரு பாவனைதான் பசி அல்ல.
ஒரு முறை கோழி பிரியாணியை சாப்பிட்டு முடித்த பின், எந்தக் கோழி வயிற்றுக்குள் சென்றதோ, அதே கோழியை உயிருடன் தட்டில் வரவழைத்துத் துரத்தி அனுப்பினார் ராமசாமி சித்தர். ஆக, ராமசாமி சித்தர் பிரியாணி சாப்பிட்டார் என்று சொல்ல முடியுமா? இனி, ராமசாமி சித்திரைப் பற்றி பார் ப்போம். இவரது பெயர் ராமசாமி என்பது. ஒரு முறை ரிஷிகேஷத்தில் இருந்து அறியப்பட்டது. அதுவரை உள்ளூர்க்காரர்களால் பெரியவர். சாமீ, சித்தர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்தார். ராமசாமி என்று இவர் அழைக்கக் காரணமான அந்த நிகழ்வைப் பார்ப்போம். ஒட்டன்சத்திரத்தில் வசித்து வரும் சுமார் அறுபது பேர் வட இந்தியயாத்திரை புறப்பட்டார்கள். உள்ளூர் வர்த்தக பிரமுகரான சோமசுந்தரம் பிள்ளை என்பவர் தலைமையில் இந்தக் குழு புறப்பட்டது. காசி, ரிஷிகேஷ், ஹரித்வார், பத்ரிநாத் என்று அவர்களது பயணப் பட்டியல் இருந்தது. விடிகாலை மூன்று மணிக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரு தனியார் பேருந்தில் பயணத்தைத் துவக்கினர். புறப்படும்போது வழியில் இருந்த ராமசாமி சித்திரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. போங்கடா... போயிட்டு என்கிட்டதானே எல்லாரும் வருவீஙக.... என்று தனக்குள் சொல்லி மானசீகமாக வாழ்த்தி அனுப்பினார்.
ரிஷிகேஷை அடைந்த ஒட்டன்சத்திரத்து பிரமுகர்கள், சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென வந்த ஒரு குரல் இவர்கள் அனைவரையும் ஈர்த்தது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து வந்தவன்லாம் இங்க வாங்கடா என்று அதிகாராமாகக் கூப்பிட்டது அந்தக் குரல். ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் திடுக்கிட்டார்கள். பாஷையே புரியாத இந்த ஊரில் யார் நம்மை அதிகாரமாகக் கூப்பிடுவது என்று அவர்கள் திரும்பிப் பார்த்தால் - ஒற்றைக் காலில் நின்றபடி தவக் கோலத்தில் சாது ஒருவர் இருந்தார். வாங்கடா ஒட்டன்சத்திரத்து ஆளுங்களா..... உங்களை எல்லாம் நான்தான் கூப்பிட்டேன்.... ராமசாமி சித்தர் எப்படி இருக்கான் ஊர்ல? என்றார் (அதுவரை சித்தர், பெரியவர் என்றே அழைக்கப்பட்ட வந்த ராமசாமி சித்தரின் பெயர் அதன் பி றகுதான் பலருக்கும் தெரிய வந்ததாம்). யார் சாமீ.... நீங்க சொல்ற பேர்ல யாரும் எங்க ஊர்ல இல்லியே? என்றனர் ஊர்க்காரர்கள். அடேய்.... பாத்திரக் கடை வாசல்ல எந்நேரமும் உக்காந்திருப்பானே... அவன்தான் ராமசாமி சித்தர். அவனுக்கு வயசு என்ன தெரியுமா? ஐந்நூத்தி ஐம்பது. சரி, ஊருக்குப் போனதும். அவன்கிட்ட போய், ரிஷிகேஷ்ல நடராஜ சாமீ ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க என்றார். தொடர்ந்து தவத்தில் இறங்கி விட்டார்.
ராமசாமி சித்தரின் வயதைக் கேட்டு ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் ஆடிப் போனார்கள். தென்னிந்தியாவில் இருந்து வடக்கே வந்த நம்மை அடைய õளம் கண்டுகொண்டு. நம்மூர் சித்திரை இவர் விசாரிக்கிறாரே என்று வியந்து பேசிக் கொண்டார்கள். அங்கிருந்து அகன்றார்கள். ஒரு வழியாக ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு இருபது நாட்களுக்குப் பிறகு ஊர் திரும்பினார்கள். தாங்கள் புறப்பட்ட இடத்தில் யாத்திரையை முடித்தவர்கள். மெள்ளக் கலையை முற்படும்போது ரிஷிகேஷ் போனவன்லாம் இங்க வாங்கடா என்று பாத்திரக்கடை வாசலில் இருந்த ராமசாமி சித்தார் ஓங்கிக் குரல் கொடுத்தார். அப்போதுதான் சோமசுந்தரம் பிள்ளைக்கு நினைவு வந்தது - ரிஷிகேஷில் நடராஜ சாமீ சொன்ன விஷயம். அனைவரும் சித்தருக்கு முன்னால் பவ்யமாக நின்றனர். ஒட்டன்சத்திரத்தில் சாதாரணமாக அதுவரை அவர்களுக்குத் தெரிந்த ராமசாமி சித்தரின் மகிமை இப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது.
ஏண்டா.... அங்கே ஒத்தக்கால்ல தவம் செய்யுற நடராஜ சாமீ என்னை விசாரிச்சான்ல..... ஏண்டா, என்கிட்ட சொல்லாம போறீங்க? என்று ராமசாமி சித்தர் கோபமாகக் கேட்கவும், சற்று முன்னால் வந்தார் சோமசுந்தரம் பிள்ளை. சாமி எங்களை எல்லாம் மன்னிக்கணும். அவசரத்தல மறந்துட்டோம் என்று சொல்ல.... சிரித்தார் சித்தர். போங்கடா. எல்லாரும் நல்லா இருப்பீங்க என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.
பழநியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் சங்கரன். மிகவும் ஆசாரமான அந்தணர் குடும்பம். பூஜை, புனஸ்கரம் என்று எந்நேரமும் இறைவழிபாட்டிலும். மகான்கள் தரிசனத்திலும் திளைப்பவர். மகான்களின் அதிஷ்டானங்களைத் தேடித் தேடித் தரிசிப்பார். பழநியைச் சுற்றி உள்ள பகுதிகளில் எங்காவது மகான்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிந்தால், அடுத்த கணமே அங்கு பயணப்பட்டு விடுவார். இப்படித்தான் ஒரு முறை ஒட்டன்சத்திரம் ராமசாமி சி த்தர் பற்றிக் கேள்விப்பட்டார்.
பழநியில் இருந்து புறப்பட்டு, சித்தர் எப்போதும் காணப்படும் பாத்திரக் கடைக்கு வந்தார். அங்கே படிக்கட்டில் சித்தர் அமர்ந்திருந்தார். ராஜம்மாள் அங்கு வந்ததுமே, வாம்மா..... உன்னைத்தான் தேடுகிறேன், வா என்றார் சித்தர். மனம் நெகிழ்ந்தபடியே அவரைப் பணிந்து வணங்கினார் ராஜம்மாள். பிறகு, பக்கத்துல ஒட்டல் இருக்கு. அங்கே போய் ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு வா என்றார். அந்தணர் வீட்டுப் பெண்மணி திகைத்தார். பிரியாணி என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே அவருக்கு வாந்தி வரும் போல் இருந்தது. தயங்கியவாறே நின்றிருந்தார். என்னம்மா... பிரியாணி வாங்கிட்டு வானு சொன்னேன்.... அப்படியே நிக்கறே..... பொறப்படு என்றார் சித்தர். பிறகு, நான் வேணா காசு தர்றேன், யாரையாவது அனுச்சு வாங்கிட்டு வரச் சொல்லலாமா? என்று குரல் கம்மக் கேட்டார் ராஜம்மாள். அதெல்லாம் வேலைக்கு ஆகாதும்மா. நீயே கடைக்குப் போய் வாங்கிட்டு வா. சீக்கிரம் என்று அவசரப்படுத்தினார் சித்தர். ஒட்டல் வாசலில் தயக்கத்துடன் நின்றார் ராஜம்மாள். இவரைப் பார்த்தவுடனேயே புரிந்து கொண்ட ஒட்டல் உரிமையாளர். என்னமா...ராமசாமி சித்தர் பிரியாணிப் பொட்டலம் வாங்கிட்டு வரச் சொன்னாரா? ÷ யாகக்காரப் பொம்பளைம்மா நீ.... உனக்கு இன்னிக்கு என்னென்ன அதிசயங்கள் காத்திருக்கோ என்று சொல்லி உள்ளே பிரியாணி பொட்டலத்தை பார்சல் செய்யச் சொன்னார். காசைக் கொடுத்து விட்டு அந்தப் பொட்டலத்தை வாங்கிய ராஜம்மாள்,ரொம்பவும் கூசிப் போனார். ஐயா வீட்டுப் பெண்மணியை அசைவப் பொட்டலத்தை சுமக்க வைத்து விட்டாரே என்று சித்திரைப் பற்றி சிந்தித்துக் கொண்டே அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தார். பொட்டலத்தை அவர் அருகே வைத்து விட்டு, அதன் நெடி உடலுக்கு ஒவ்வாததால் சற்றே நகர்ந்து நின்றார்.
பொட்டலத்தை இப்படி வெச்சிட்டா எப்படி? நீயே பிரி என்று சித்தர் சொன்னதும், அடுத்த இடி இறங்கியது ஐயர் வீட்டு அம்மணிக்கு. சித்தரின் குணத்தைப் பற்றி அறிந்தால். இவரால் மறுக்கவும் முடியவில்லை. அழுகை உள்ளுக்குள் பொங்க...கண்களை மூடியபடி, பழநி ஆண்டவரை மனதுக்குள் பிரார்த்தித்தபடி. பொட்டலம் சுற்றப்பட்டிருந்த நூலை மெள்ளப் பிரித்தார். பிரியாணியின் சுவாசம் உள்ளுக்குள் போய் குமைச்சல் ஏற்படும் என்பதால். அந்த வேளையில் சுவாசிக்கவும் மறந்தார். பொட்டலம் முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டு விட்டது. இந்தாங்க சாமீ.... என்று கண்களை மூடிய நிலையிலேயே குத்துமதிப்பாக சித்தர் இருக்கும் திசை நோக்கிப் பொட்டலத்தை நீட்டினார். நீயே கண்ணைத் திறந்து பாரம்மா - உன் கையில் இருக்கிற பொட்டலம் எந்த அளவுக்கு மணம் வீசுகிறதுன்னு. அதன் பிறகு என்னிடம் கொடு என்றார் சித்தர். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு கண்களைத் திறந்து தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பார்த்த ராஜம்மாளுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சிரியம். காரணம்-பொட்டலத்தில் இப்போது இருப்பது பிரியாணி அல்ல.... நெய் வடியும் சர்க்கரைப் பொங்கல். சித்தரின் அருள் திறனை எண்ணி விம்மினார் ராஜம்மாள். முந்திரியும் திராட்சைகளும் ஏலமும் கலந்து சர்க்கரைப் பொங்கலின் மணம், ராஜம்மாளின் மூக்கைத் துளைத்தது. தன் கையில் இருந்த சர்க்கரைப் பொங்கலை - கோயில் பிரசாதம் போல் மணக்கும் பொங்கலை-நம்பவே முடியாமல் மீண்டும் மீண்டும் பார்த்தார் ராஜம்மாள். சாப்பிடும்மா.... எடுத்துச் சாப்பிடு. ஐயர் வீட்டுப் பொம்பளைக்கு அசைவம் தருவேனாம்மா என்ற சித்தர், தானும் ராஜம்மாளின் கையால் ஒரு கவளம் வாங்கிச் சாப்பிட்டார்.
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சிக்கு அந்த லாரி ஒட்டன்சத்திரம் வழியாகப் போய்க் கொண்டிருந்தது. அந்த லாரி முழுக்கக் கருவாடு லோடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ராமசாமி சித்தர், பாத்திரைக் கடை வாசலில் படிக்கட்டில் அமர்ந்திருந்தார். இவரது இடத்தைக் கடக்கும்போது அந்த லாரியில் இருந்து ஒரிரண்டு துண்டு கருவாடு சாலையில் விழுந்தது. ஜீவகாருண்யத்தை (அசைவம் சாப்பிடாதவர்கள்) எப்போதும் கடைபி டித்து வரும் உள்ளூர் அன்பர் ஒருவர் யதேச்சையாக அந்தப் பகுதியைக் கடந்தார். சாலையில் சிதறிக் கிடக்கும் ஓரிரு கருவாட்டுத் தூண்டுகளைப் பார்த்து முகம் சுளித்தார். ஓரமாக நடந்தார். படிக்கட்டில் அமர்ந்திருந்த ராமசாமி சித்தர் இதைப் பார்த்தார். டேய் இங்கே வாடா என்று அவரை அழைத்தார். யாரோ ஒரு சாது போலும் என்கிற நினைப்பில் சித்திரை நெருங்கிய அன்பர், என்ன சாமீ? என்று கேட்டார். கிழே விழுந்து கிடக்கிற க ருவாட்டுத் துண்டை எடுத்துச் சாப்பிடுடா என்று அதிகாரமாகச் சொன்னார் அவ்வளவுதான்! முகம் கொதித்துப் போனார் அன்பர். இத்தனை ஆண்டுகளாக ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடித்து என்னைப் பார்த்தா, கருவாடு சாப்பிட்டுச் சொல்கிறீர்? நான் செத்தாலும் சாவேனே தவிர, கருவாடு சாப்பிடவே மாட்டேன் என்று சொல்லிப் போயே விட்டார்.
சித்தர் மெதுவாகச் சொன்னார்: ஆமாடா....இன்னிக்கு சாயங்காலம் நீ சாகத்தான் போறே.... உன்னைக் காப்பாத்தலாம்னு நினைச்சேன்..... விதிதான்டா இன்னிக்கு ஜெயிச்சிருக்கு போடா.... போய்ச் சேரு. ஆம்! அன்று மாலை சுமார் நாலேமுக்கால் மணிக்கு அந்த அன்பருக்குத் திடீர் மாரடைப்பு வந்து இறந்து போனார். ஒருவேளை, சித்தர் சொல்லி இருந்தபடி கருவாட்டுத் துண்டுகளை அவர் எடுத்துச் சாப்பிட்டிருந்தால், பிரிய õணியை சர்க்கரைப் பொங்கலாக மாற்றியது மாதிரி, இதையும் ஒரு சைவ பொருளாக சித்தர் மாற்றி இருக்கக் கூடும். இதை உண்ட பலனால், அவரது ஆயுள் பலம் கூடி இருக்கலாம். விதி ஜெயித்து விட்டது போலும்! பழநி கல்லுரியில் பேராசிரியராகப் பணி புரிந்த கண்ணன் என்பவர், சித்தர்கள் தரிசனத்தில் நெகிழ்பவர் பழநியில் இருந்து பல ஸித்துக்களைப் புரிந்த தங்கவேல் சுவாமிகளை அடிக்கடி சந்தித்து, ஆன்ம ஞானம் பெற்றவர். ராமசாமி சித்தர் சமாதி ஆனபோது, அப்போது அவருடன் இருந்தவர் இவர்.
இனி, கண்ணன் சொல்லும் அனுபவத்தைப் பார்ப்போம்.
ராமசாமி சித்தர் மாபெரும் மகான் என்பதை ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் பல காலம் வரை உணரவில்லை. அவ்வப் போது செட்டிநாட்டில் இருந்து ப்ளைமவுத் காரில் இவருக்கு சாப்பாடு கொண்டுவருவார்கள் சிலர். யார் என்பது தெரியாது. பக்தர்கள் சிலர் கொடுக்கும் உணவுப் பொருட்களை விரும்பி ஏற்றுக் கொள்வார் சித்தர். வேண்டாம் என்றால் தட்டி விட்டு விடுவார். சில சமயங்களில் சிலரை கல் வீசி எறிந்து துரத்துவார். 1977-ஆம் வருடம் என்று நினைக்கிறேன். நான், என் மனைவி, இரு குழந்தைகள் ஆகியோர் முதல் முறையாக சித்தரைப் பார்க்கப் பழநியில் இருந்து ஒட்டன்சத்திரம் சென்றோம். சித்தர் எங்கள் குடும்பத்தை ஊடுருவிப் பார்த்தார். பிறகு, நாலு டீ வாங்கி வருமாறு எனக்கு உத்தரவிட்டார். உடனே பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு ஓடிச் சென்று வாங்கி வந்து சித்தரிடம் கொடுத்தேன். எங்கள் நான்கு பேரையும் குடிக்கச் சொன்னார். பிறகு, ஒரு பீடிக் கட்டு, மூன்று சிகரெட், ஒரு தீப்பெட்டி இவற்றைக் கொடுத்து, பத்திரமா உன் வீட்டுல வெச்சுக்கோனு சொன்னார். ரொம்ப காலம் பாதுகாத்து வந்÷ தன். ஒரு முறை வீடு மாறும்போது அது எங்கோ தவறுதலாக மிஸ் ஆகி விட்டது என்று வருத்தத்துடன் சொன்ன கண்ணன், சித்தரின் சமாதி பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
அது ஒரு சனிக்கிழமை....சித்தரை தரிசிப்பதற்காகப் போனேன். சோமசுந்தரம் பிள்ளை வீட்டில் இருந்து ரசம் வாங்கி வரச் சொன்னார். வாங்கி வந்து கொடுத்தேன். குடித்தார். பிறகு, அவரைத் தரிசித்துக் கொண்டிருக்கும்போது. பாதையை மறைக்காதடா.... குழிக்குள் இறங்குடா என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். இதன் காரணம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் இதைச் சொன்னேன். வேறொன்னுமில்லை. அவர் கூடிய சீக்கிரமே சமாதி ஆகப் போகிறார். அதைத்தான் இப்படிக் குறிப்பால் சொல்லி இருக்கிறார் என்றார் அவர். அதன்படி அடுத்த சனிக்கிழமையே ராமசாமி சித்தர் சமாதி ஆகி விட்டார். தகவல் கேள்விப்பட்டதும். சித்தரின் பக்தர்கள் ஒட்டன்சத்திரத்தில் குவிந்தனர். சிங்கம்புணரி புலவர் பாண்டியன் என்கிற அன்பர் மலர் அலங்காரத்துடன் கூடிய பெரிய தேர் ஒன்றைத் தயாரித்தார். சித்தர் அடக்கம் ஆவதற்கு காங்கிரஸ் பிரமுகரான பழநியப்பா, நாகனம்பட்டி ரோட்டில் இடம் தந்தார் (இங்குதான் ராமசாமி சித்தரின் ஜீவ சமாதி இ ருக்கிறது) பெரிய குழி வெட்டி, அதற்குள் நான் இறங்கினேன். அப்போதுதான் குழிக்குள் இறங்குடா என்று சித்தர் போன சனிக்கிழமைஅன்று சொன்னதன் பொருள் எனக்குப் புரிந்தது. விபூதி, உப்பு, வில்வம், புஷ்பங்கள் போன்றவற்றை நிரப்பி, சித்திரை அடக்கம் செய்தோம். நான் கொண்டு சென்ற ஒரு சிவப்புத் துண்டை அவரது மேலுடம்பில் போர்த்தினேன். மாபெரும் சித்த புருஷரை அடக்கம் செய்த பேறு எனக்கு அன்று கிடைத்தது அவரது அருள்தான்.
எல்லா காரியங்களும் முடிந்து இரவு சுமார் 11 மணி வாக்கில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநிக்குப் பேருந்தில் புறப்பட்டேன்.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் விருபாட்சிமேடு என்கிற ஓர் இடம் வரும். அந்த இடம் சற்று கரடுமுரடாக இருப்பதால், அதன் வழியாகப் பயணிக்கும் எந்த ஒரு பேருந்தும் நின்று நிதானித்துதான் செல்லும். அதுபோல் நான் சென்ற பேருந்தும் விருபாட்சிமேட்டைக் கடக்கும்போது நிதானமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது யதேச்சையாக சாலையின் இடப் பக்கம் கவனித்த நான் துணுக்குற்றுப் போனேன். அங்கே-ராமசாமி சித்தர் நடந்து போய்க் கொண்டிருந்தார். அவரது மேலுடம்பில் நான் எப்படிப் போர்த்தினேனோ அதே நிலையில் அந்த சிவப்புத் துண்டு இருந்தது. சாமீ....சாமீ என்று குரல் எடுத்துக் கதறினேன். பேருந்தில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். இதற்குள் ÷ பருந்தும் வேகம் எடுத்து விட்டது. மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். சற்று முன் குழிக்குள் அடக்கமான சித்தர். எப்படி விருபாட்சிமேடு அரு கே நடந்து போனார் என்கிற கேள்வி என் மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது, எனவே, பழநி பேருந்து நிலையத்தில் இறங்கிய கையோடு முதல் காரியமாக நள்ளிரவு வேளையில் தங்கவேல் சுவாமிகளின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினேன். சுவாமிகளே வந்து கதவைத் திறந்து என்னப்பா... இந்த வேளைல? என்றார். எல்லா விஷயத்தையும் அவரிடம் சொன்னேன். நாளைக்கு விடிகாலைல அவரை அடக்கம் பண்ண இடத்தைப் பார்த்துட்டு வந்து என்னிடம் சொல் அப்படின்னு படுக்கப் போய்விட்டார்.
இரவு முழுக்கத் தூக்கமே வரவில்லை. விடிந்தும் விடியாத பொழுதில் வீட்டை விட்டுக் கிளம்பினேன். தங்கவேல் சுவாமிகள் சொன்னபடி அந்த சமாதியை நோட்டமிட்டேன். அவரது சமாதியில் - தலைப் பகுதிக்கு நேராக தலையில் அரை அடி நீளத்துக்கு ஒரு வெடிப்பு காணப்பட்டது. உடனே பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் சொன்னேன். ராமசாமி சித்தர் தன்னோட அருள் ஆற்றலை மட்டும் அங்கே வைத்து விட்டு, சரீரத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாரப்பா. அவர் இப்போது வேறு பிரதேசத்தில் உலவிக் கொண்டிருப்பார். அவர் போன ஊர் புண்ணியம் பெறும் என்றார். அதாவது, சித்தர்களுக்கு சமாதி என்பது ஒரு ஒரு சம்பிரதாயத்துக்குத் தான். அவர்கள் என்றென்றும் நம்முடனே இருந்து ஆசி ர்வதித்துக் கொண்டிருப்பார்கள். ராமசாமி சித்தரும் அப்படித்தான். சுமார் இரண்டு மாதங்கள் கழித்து. கேரளாவில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் ராமசாமி சித்தரைப் பார்த்ததாக ஒரு நண்பர் சொன்னார் என்று முடித்தார். கண்ணன். ராமசாமி சித்தர் பெரும்பாலும் ஒரு குல்லா அணிந்திருப்பார். முஸ்லிம் பக்தர் ஒருவர். ஆசையுடன் கொடுத்ததாம் இது. சித்தரை சமாதி வைத்த இடத்தின் அருகே பிரமாண்டமான ஆலமரம் இருக்கிறது. இதன் அருகே ஒரு லிங்கம். சமாதி ஆன இடத்தில் சில செங்கற்களின் மேலே வேங்கடாசலபதி, ஸ்ரீசரஸ்வதிதேவி, முருகப் பெருமான் ஆகியோரது திரு வுருவப் படங்கள் இருக்கின்றன. உள்ளே ஒரு நந்தி விக்கிரமும் உண்டு. மற்றபடி சமாதி ஆன இடத்தில் சிறப்பாக எதுவும் இல்லை. பள்ளிக்குச் செல்லும் சில மாணவர்கள் அவ்வப்போது இங்கே வந்து வணங்கிச் செல்கிறார்கள்.
மானூர் சுவாமிகள்

பழநியம்பதியில் படாடோபம் இல்லாமல் வாழ்ந்த மகான்களுள் ஒருவர் மானூர் சுவாமிகள். இவர் யார்? எங்கு பிறந்தார்? இவருடைய பெற்றோர் யார்? என்பது போன்ற கேள்விகளுக்கு காலம் இன்னும் விடை சொல்லவில்லை. சாந்நித்யம் கொண்ட மகான்களின் சரித்திரம். சம காலத்தவர்களாலேயே சரிவர புரிந்து கொள்ள முடிவதில்லை. இதைத்தான் நதிமூலம் ரிஷிமூலம் பற்றி ஆராயக் கூடாது என்பார்களோ? இருப்பினும் பழநிக்கு வட திசையில் உள்ள மானூர் எனும் கிராமத்தில் சில காலம் தங்கி இருந்ததால் இவருக்கு மானூர் சுவாமிகள் என்ற பெயரே நிலைத்துப் போனது. இவர் மகா சமாதி ஆன தினம் மட்டும் பலராலும் இன்றைக்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. குரு பூஜைகள் நடந்து வருகின்றன. இவருடைய பக்தர்கள் திரளாக வந்து பூஜையில் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தி ஆராதித்து வருகின்றனர்.
மானூர் சுவாமிகள் மகா சமாதி ஆனது 1945 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (பார்திப வருடம் ஐப்பசி 19ஆம் தேதி. அமாவாசை சித்திரை) பழநி அருகில் உள்ள கோதைமங்கலத்தில் மெயின் ரோட்டின் ஓரமாகவே அமைந்துள்ளது இவரது திருக்கோயில், உள்ளே நுழைந்ததும் சுவாமிகளின் வட்டவடிவ மகா சமாதி. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தரிசனம். வலம் வருவதற்கு பிராகாரம் உண்டு. இருப்பினும் மானூர் சுவாமிகளின் அபிமானத்தைப் பெற்று இன்றைக்கும் அவரை வணங்கி வருபவரில் ஒருவர் சுவாமிகள் ஆயிரத்தொட்டு இடங்களில் சமாதி ஆகி இருக்கிறார். கோதைமங்கலம் தவிர கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நிலத்த நல்லூர். கேரளாவில் இரண்டு இடங்கள், திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை அருகில் என்று இவர் எற்கனவே சமாதி ஆன இடங்களை பட்டியலிடுகின்றனர் அன்பர்கள் பலர். ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் தரிசனம் தந்திருக்கிறார் சுவாமிகள் அவ்வளவு ஏன். கோதைமங்கலத்தில் 1945 ஆண்டு சமாதியானார். ஆனால் இதற்குப் பின்னர் பல ஊர்களில் பக்தர்கள் பலருக்கும் காட்சி தந்து அவர்களுடன் உரையாடி அவர்களுக்கு ஆசியும் தந்திருக்கிறார். தன்னை நம்பியவர்களுக்கு இன்றைக்கும் காட்சி தந்து அருள் வழங்கி வருகிறார் மானூர் சுவாமிகள் என்கிறார் சிலிர்ப்புடன்.
மானூர் சுவாமிகள் எப்படி இருப்பார்? எளிமையான தோற்றம். கெச்சலான தேகம். வேட்டி சட்டை துண்டு என எந்த ஆடையையும் இவர் அணியமாட்டார். திகம்பரர் (நிர்வாண சாது). சட்டென்று பார்ப்பவர்களுக்கு இவர் நிர்வாண சாது என்பது தெரியாது. ஒரு போர்வையை உடல் மேல் சுற்றி கழுத்து வரை போர்த்தி இருப்பார். அதிகம் பேச மாட்டார். பழநி மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் இவர் எங்கு சென்றாலும் இவரைப் பின்தொடர்ந்து பக்தர்களும் உடன் செல்வர். மானூரில் அவ்வப்போது தங்கி வந்தாலும் நரிக்கல்பட்டி, அக்கரைப்பட்டி, பழநி, கோதைமங்கலம் என்று பல இடங்களுக்கும் பயணித்தபடியே இருப்பார் சுவாமிகள். சில தருணங்களில் தன்னை பலரும் பின்தொடர்வது பிடிக்காமல் போனால் அனைவரையும் விரட்டி விடும் மானூர் சுவாமிகள் மகா கோபக்காரர். எவரையும் ஏ கழுதை என்றுதான் அழைப்பார்.
மானூர் சுவாமிகளின் கோபத்துக்கு உதாரணமாக இவரது சீடரான தங்கவேல் சுவாமிகள் சிறுவனாக இருந்தபோது நிகழ்ந்த சம்பவத்தைச் சொல்லலாம். மானூர் சுவாமிகள் அருளாள் பிறந்தவர் பழநி தங்கவேல் சுவாமிகள் , தங்கவேலுவுக்கு ஏழு வயது இருக்கும்போது ஒருநாள் வீட்டுக்கு அருகில் உள்ள சண்முக நதியில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டில் இவனுடைய தந்தையார் பெருமாள் சாமியுடன் மானூர் சுவாமிகள் பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் போதே இட்லியையும் தோசையையும் சுவாமிகளுக்கு தன் கையால் ஊட்டி விட்டபடி இருந்தார் பெருமாள்சாமி. அப்போது தங்கவேல் வீட்டின் அருகே வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் என் மகன் வருகிறான் என்றார் மானூர் சுவாமிகள். உடனே பெருமாள்சாமி. ஆமா சாமீ. அவன்தான் என்னோட அஞ்சாவது பையன். கடைசி மகன் என்றார் இயல்பாக.
அவ்வளவுதான். மானூர் சுவாமிகளுக்கு வந்ததே கோபம். பெருமாள் சாமியின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு, அவனை என் மகன்னு சொல்றேன். நீ உன் மகன்னு சொல்றியே ஓடுடா கழுதே இங்கிருந்து என்று அடித்து விரட்டினார். பிறகு தனியாக இருந்த சிறுவன் தங்கவேலை அருகே அழைத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டார். தங்கவேலின் முதுகுத் தண்டு வடத்துக்குக் கீழே மூலாதாரத்துக்கு அருகில் தன் விரலால் சுண்டினார் மானூர் சுவாமிகள். அவ்வளவுதான் மறு நொடியே சிறுவனின் உடல் மரத்துப் போனது. மயங்கிப் போனான் தங்கவேல் (இதுகுறித்து பின்னர் விவரிக்கும்போது என்னுடைய மூலாதாரத்தில் இருந்து ஒரு விசை அப்படியே மேலே எழும்பியது. தலையில் அது பட்டதும் மயங்கி சுவாமிகளின் மேல் சாய்ந்துவிட்டேன். என் உள்நாவில் அமிர்தம் விழுந்து இறங்கியது போல் உணர்ந்தேன். இதன்பின் சுவாமிகள் என்னை தன் தோளில் போட்டுக்கொண்டு முதுகை மெள்ள வருடிக் கொடுத்தார் என்று கூறியுள்ளார் தங்கவேல் சுவாமிகள்)
கணவரையும் விரட்டி விட்டார். குழந்தை வேறு பேச்சு மூச்சற்று மயங்கிக் கிடக்கிறது. இந்த சாமியார் ஏதோ மந்திரம் செய்துவிட்டார் போலிருக்கிறது என்று பதைபதைத்த தங்கவேலின் தாயார் கருப்பம்மை, மானூர் சுவாமிகளைப் பார்த்து சபிக்கும் பாவனையில் சத்தம் போடவும் உடனே கல்லை எடுத்து வீசி அவரையும் அங்கிருந்து விரட்டினார் மானூர் சுவாமிகள் சற்றுத் தள்ளாடி நின்றபடி தங்கவேலின் தாயார் அழுது கொண்டிருந்தார். அரை மணி கழித்து தங்கவேல் சுவாமிகள் கண் விழித்த பிறகுதான் அங்கிருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.
மானூர் சுவாமிகள் மெதுவாகச் சிரித்தார். தங்கவேலிடம், எப்படியடா இருந்தது? இன்பத்தை அனுபவித்தாயா? என்று கேட்டார். அதற்கு மயக்க நிலையில் ஏதோ ஓர் இனம் புரியாத இன்பத்தை அடைந்தேன் சாமி என்றான் தங்கவேல். அதுதான்டா அமிர்தம் உள்ளே போய்ச் செய்யும் வேலை. அதை உண்ணும் வாய்ப்புக் கிடைத்தவன் மட்டும்தான் ஒரு ஞானியாக இருக்க முடியும். உனக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது. நான் சொல்லப் போகும் இந்தக் கலையைப் பின்பற்றி நட, நரை, திரை, மூப்பு சாக்காடு (கடும் நோயால் படுத்தவர்) என்ற நோய்கள் உன்னை நெருங்காது. இன்னும் பலவிஷயங்களை அனுபவத்தின் மூலம் நீயே புரிந்து கொள்வாய் என்றார். எவரும் தன்னை அண்டி இருக்க அனுமதித்துள்ளார் மானூர் சுவாமிகள். எவரையேனும் சுவாமிகளுக்கு மிகவும் பிடித்துவிட்டால் அவரை அருகே அழைத்து தனக்குப் பிடித்ததை அருகில் உள்ள கடையில் இருந்து வாங்கி வரச் சொல்லுவார். கடவுளே நேரில் வந்து தனக்கு இட்ட கட்டளை என்பதுபோல் சுவாமிகள் சொன்ன அந்த நிமிடமே சம்பந்தப்பட்டவர் கடைக்கு ஓடுவார். சுவாமிகள் தன் கைப்பட சாப்பிட்டு எவரும் பார்த்தது இல்லை. எவரேனும் ஊட்டிவிட்டால் ஓரிரு கவளங்கள் சாப்பிடுவார். இந்த பாக்கியத்தை சுவாமிகளுக்கு மிகவும் பிரியமான பக்தர்கள் பெற்றிருந்தனர்.
பழநி கடைத்தெருவில் குட்டியம்மா மடம் என்று உள்ளது. பல தருணங்களில் சுவாமிகள் இங்குதான் இருப்பார். தவிர பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள மங்கள கவுண்டர் வீட்டு மாட்டு வண்டியில் சில வேளைகளில் அமர்ந்திருப்பார் சுவாமிகள். அடிக்கடி அமரும் வண்டி என்பதால் மங்கள கவுண்டர் குடும்பத்தார் இந்த மாட்டுவண்டியை பயன்படுத்தவதே இல்லை. சுவாமிகளின் நினைவாக மாட்டுவாண்டியை இன்னமும் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர். மாட்டுவண்டியில் அமர்ந்திருக்கும்போது மங்கள கவுண்டர் குடும்பத்தாரை அழைத்து சாப்பிடுவதற்கு ஏதேனும் கொண்டுவரச் சொல்லுவார் சுவாமிகள். சைவம் அசைவம் என்று பேதம் பார்க்கமாட்டார் சுவாமிகள். மங்கள கவுண்டர் வீட்டில் இருந்து அசைவ உணவையும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார்மானூர் சுவாமிகள். பொதுவாகவே பசியைப் போக்குவதற்காக உணவு உண்பதில்லை மகான்கள். உடன் இருக்கின்ற பக்தர்களின் மனம் திருப்தி அடைய என்பதற்காகவே சாப்பிடுகின்றனர். ஒருநாள் மாட்டு வண்டியில் அமர்ந்திருந்த சுவாமிகள், மங்கள கவுண்டர் வீட்டு அன்பர் ஒருவரை அழைத்து, சாப்பிடுறதுக்கு நாலு முட்டை எடுத்திட்டு வா என்றார் அதன்படி உள்ளே சென்று கைகளில் நான்கு முட்டைகளுடன் திரும்பினார். இதை வாங்குவதற்கு முன்னரே ஏ கழுதை, இதுல ரெண்டு அழுகிப் போயிடுச்சே. நீ கவனிக்கலியா? என்று முட்டையின் நிலையை சொன்னார் சுவாமிகள்.
இதேபோல் தன்னைச் சந்திக்க வருபவர்களுக்குள் இருப்பது நல்லெண்ணமா கெட்ட எண்ணமா என்பதையும் பளிச்சென சொல்லி விடுவார் சுவாமிகள். பழநியில் இருந்து பொள்ளாச்சி செல்லும் ரயில் பாதையில் பழநியை அடுத்து புஷ்பத்தூர் எனும் ரயில்வே ஸ்டேஷன் உண்டு. ஒரு முறை பொள்ளாச்சி மார்க்கமாகப் பயணிக்கும் நோக்கத்தில் இந்த ஸ்டஷேனில் காத்திருந்தார் மானூர் சுவாமிகள். ரயிலும் வந்தது. ஏறி அமர்ந்து கொண்டார் சுவாமிகள். சுவாமிகள் வண்டி புறப்படவில்லை. அப்போது சுவாமிகளின் வித்தியாசமான தோற்றத்தக் கண்டு முகம் சுளித்த டிக்கெட் பரிசோதகர் சுவாமிகளை நெருங்கி உன் டிக்கெட்டைக் கொடு என்று அலட்சியமாகக் கேட்டார். அப்போது சுவாமிகள் தியான நிலையில் இருந்தார். டிக்கெட் எடுக்காததால் தன்னை ஏமாற்றுவதற்கே கண் மூடி நடிக்கிறார் என்று நினைத்த பரிசோதகர் கோபத்துடன் சுவாமிகளது பிடரியில் கைவைத்து அவரை ரயிலில் இருந்து இழுத்து கீழே தள்ளினார். பிளாட்பாரத்தில் வந்து விழுந்த சுவாமிகள் டிக்கெட் பரிசோதகரைப் பார்த்து புன்னகைத்தபடி போடா, போ, உன் ட்ரெயினுக்கு பிரேக் போட்டுட்டேன். இனிமேல் பொள்ளாச்சி போய்ச் சேர்ந்த மாதிரிதான் என்று சத்தமாகச் சொல்லிவிட்டு ஓர் ஓரமாக அமைதியாக தியானத்தைத் தொடர்ந்தார்.
மானூர் சுவாமிகளை அலட்சியமாகப் பார்த்துவிட்டு எதையோ சாதித்த திருப்தியுடன் ரயிலில் ஏறிக் கொண்டார் பரிசோதகர். ரயில் கிளம்புவதற்கு கொடி அசைக்கப்பட்டது. விசிலும் ஊதப்பட்டது. ரயிலை இயக்குபவர் ஹார்ன் ஒலி எழுப்பினார். ஆனால் இம்மியும் நகராமல் அப்படியே நின்றது ரயில். என்னென்னவோ செய்து பார்த்தார். ம்ஹும். பலன் இல்லை. பயணிகள் உட்பட பலருக்கும் குறிப்பாக புஷ்பத்தூர் ரயில் நிலைய அதிகாரிகள் பலர் ரயில் நகராமல் இருக்க என்ன காரணம்? என்று குழும்பித் தவித்தனர். அப்போதுதான் டிக்கெட் பரிசோதகருக்கு மெள்ள புரிந்து கொண்டார். அவரை (சுவாமிகளை) கீழே தள்ளிவிட்ட போது கோபத்துடன் அவர் சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பார்த்தார். ரயில் இப்போது இப்படி இருப்பதற்கு ஒருவேளை இவர்தான் காரணமோ? இவரது வாக்கு பலித்து விட்டதோ! என்று சந்தேகித்தனர். சற்று முன் நடந்த சம்பவத்தை ரயில் நிலைய அதிகாரியிடம் விரிவாகச் சொன்னார். நீங்கள் சொல்கிற ஆசாமி மானூர் சுவாமிகளாக இருந்தால் அவர் சொன்னதுபடியே நடந்த காரணம். எனக்கும் இதுபோன்ற அனுபவங்கள் நடந்தது உண்டு. வேறு எவராது என்றால் என்ன செய்வது என்று தெரியவில்லை. சரி வாருங்கள். அவரைக் காட்டுங்கள் என்று டிக்கெட் பரிசோதகரின் பின்னே மிகவேகமாக நடந்தார் நிலைய அதிகாரி. அதற்குள் ரயிலை இயக்கும் டிரைவரும் வந்துவிட்டார். மூவரும் நடந்தனர். டிக்கெட் பரிசோதகரும் சுவாமிகளை அடையாளம் காட்டினார்.
சுவாமிகளைப் பார்த்ததும் அவரது திருப்பாதங்களில் தடாலென விழுந்தார் நிலைய அதிகாரி. அடுத்ததாக சம்பவத்தின் விபரீதத்தை உணர்ந்த இருவரும் நமஸ்கரித்தனர். நிலைய அதிகாரி. மன்னிக்க வேண்டும் சுவாமிகளே. தங்களை அறியாததால் தவறாக நடந்து கொண்டுவிட்டார் பரிசோதகர். இவரை மன்னித்து அருளுவதுடன் ரயிலைப் புறப்படச் செய்யுங்கள் என்றார். போடா போ நான் போட்ட பிரேக்கை எடுத்துட்டேன். இனி வண்டி ஓடும். போங்கடா என்றார் மானூர் சுவாமிகள். இதையடுத்து இன்ஜினை இயக்கினார் டிரைவர். எந்த சிக்கலும் இன்றி இயல்பாக கிளம்பியது ரயில். அனைவரின் முகத்திலும் சந்தோஷம். இஸ்லாமிய அன்பர் ஒருவர் சுவாமிகளின் தீவிர பக்தர். இவர் புனிதத் தலமான மெக்காவுக்கு ஒரு முறை சென்றிருந்தார். அங்கே தன்னுடைய நண்பர் ஒருவரிடம் மானூர் சுவாமிகளது மகிமையை உணர்ச்சிப் பெருக்குடன் விவரித்தார். அந்த நண்பரும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது இவர்கள் பேசிக்கொண்டிருந்த மெக்கா சமாதியின் வழியே நடந்து சென்றார் சுவாமிகள். அதைக் கண்டு அதிர்ச்சியுற்ற இஸ்லாமிய அன்பர் உடனே தன் நண்பரிடம், அதோ அதோ பார் அவர்தான் மானூர் சுவாமிகள். இப்போதுதான் இவரைப் பற்றி உன்னிடம் சொல்லி வந்தேன். சுவாமிகள் குறித்து உணர்வுபூர்வமாக யார் பேசினாலும் அங்கே அப்போதே வந்து தரிசனம் தருவார் சுவாமிகள் என்று ஆச்சரியம் பொங்க கூறினார். மறு விநாடி அங்கே சுவாமிகளைக் காணோம்.
இதேபோல் சென்னை, பழநி முதலான பல இடங்களிலும் தான் சமாதியாகிவிட்ட பிறகும் பலருக்கும் தரிசனம் தந்திருக்கிறார் மானூர் சுவாமிகள். மானூர் சுவாமிகள் ஒருமுறை கோவைக்குச் சென்றிருந்தார். சுவாமிகளது வளர்ச்சியையும் புகழையும் பிடிக்காத கோவையைச் சேர்ந்த ஒருவர் அப்போது அவரைத் தீர்த்துக் கட்ட திட்டமிட்டார். கோவையில் உள்ள தெரு ஒன்றில் நடந்து வந்து கொண்டிருந்தார் சுவாமிகள். அங்கே தெருமுனையில் ஒரு டிரான்ஸ்பார்மர் இருந்தது. கூலியாட்கள் சிலரை அழைத்து அவர்களுக்கு கை நிறைய பணம் கொடுத்த சதிகாரர்கள் சுவாமிகளை அடையாளம் காட்டி அந்த ஆளை அலேக்கா தூக்கி டிரான்ஸ்பார்மரில் போடுங்க. மத்ததை நாங்க பார்த்துக்கறோம் என்றனர். இவர் எவ்வளவு பெரிய மகான் என்பதை அறியாததாலும் சதிகாரர்கள் கொடுத்த பணம் கண்ணை மறைத்தாலும் இந்த கொடூரச் செயலை அரங்கேற்றுவதற்காக கூலியாட்கள் காத்திருந்தனர். இதையெல்லாம் அறியாதவரா சுவாமிகள்.
தெருவில் நடந்து வந்துகொண்டிருந்த சுவாமிகளை நெருங்கியவர்கள் சட்டென்று பாய்ந்து அவரை அப்படியே அலேக்காகத் தூக்கி டிரான்ஸ்பார்மர் மேல் வீசினர். அவ்வளவுதான். சுவாமிகளது உடல் டிரான்ஸ்பார்மர் மேல் பட்டதும் அது சுக்குநூறாக வெடித்துச் சிதறியது. மறு விநாடியேஅங்கே பெரும் புகை சூழ்ந்தது. ஆனால் சுவாமிகளுக்கு சின்ன காயம் கூட ஏற்படவில்லை. கீழே ஓரிடத்தில் பொத்தென விழுந்த சுவாமிகள் தன் மேல் ஒட்டிய தூசியை தட்டி விட்டபடியே மடப்பசங்க. அந்த கரண்ட்டுக்கும் இந்த கரண்ட்டுக்கும் எப்பவுமே ஒத்துக்காதுடா, அதான் இது (தன் உடல்) பட்டதும் வெடிச்சு நொறுங்கிடுச்சு என்று கூலியாட்களைப் பார்த்து சுவாமிகள் சொல்ல திகைத்துப் போனவர்கள் இவரை வணங்கிவிட்டு தலை தெறிக்க ஓடினார்கள். சுவாமிகளை அழிக்க நினைத்தவர்களும் நிர்கதி ஆனார்கள். பிறகு டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்பட்டது. கோவையில் உள்ள திருச்சி சாலையில் அகில இந்திய வானொலி நிலையத்துக்கு அருகே இந்த டிரான்ஸ்பார்மர் இன்றும் உள்ளது. வயது முதிர்ந்த பலரும் இதனை சாமியார் டிரான்ஸ்பார்மர் என்றே இப்போதும் அழைக்கின்றனர்.
மானூர் சுவாமிகள் கோதைமங்கலத்தில் மகா சமாதி அடைந்த பின் அவரது பக்தர்கள் இங்கு வந்து அவ்வப்போது வணங்கிச் சென்றனர். இதேபோல் பழநி கல்லூரியில் அப்போது பணிபுரிந்த பேராசிரியர்கள் கண்ணன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரும் சுவாமிகளது சமாதியை வணங்கிச் செல்வர். சுமார் 18 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. பவுர்ணமி தினம். நள்ளிரவு வேளையில் மானூர் சுவாமிகளது சமாதிக்குச் சென்று தரிசித்து வர கண்ணன் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் முடிவெடுத்தனர். அன்று இரவு சுமார் 11.30 மணிக்கு பழநியில் இருந்து கோதைமங்கலத்துக்கு சைக்களில் சென்றனர். 25 நிமிடங்களில் கோதைமங்கலம் சமாதியை அடைந்தபோது சமாதி பூட்டப்பட்டிருந்தது. அது பவுர்ணமி பூஜை பிரபலமான காலம். எனவே இரண்டு பேரையும் தவிர சமாதி வளாகத்துக்குள் வேறு யாரும் இல்லை. சரி, வெளியே இருந்து சாமிகளை வணங்கிச் செல்வோம் என்று கிரில் கம்பிகளுக்கு இடையில் பார்வையை செலுத்தினர். சுவாமிகளது சமாதியில் சுடர் விட்டுப் பிரகாச விளக்கு. இதையடுத்து அவர்கள் கண்ட காட்சி இரண்டு பேரையும் வியக்கச் செய்தது. உள்ளே நவகண்ட யோகம் என்னும் முறைப்படி ஒன்பது துண்டுகளாகக் கிடந்தார் மானூர் சுவாமிகள். தலை, கைகள், கால்கள், தொடை, மார்பு, வயிறு, என்று ஒன்பது துண்டங்களாக கிடந்தார் மானூர் சுவாமிகள்.
இதுவொன்றும் சுவாமிகளுக்கு புதிதல்ல. சமாதி ஆவதற்கு முன் இப்படி பலமுறை இருந்துவந்தார் ஸ்வாமிகள். தனியே ஓய்வு எடுத்துக் கொள்ளும் வேளையில் மெள்ள நடந்து எட்டிப் பார்த்தார். இந்த நவகண்டயோகக் காட்சியைக் காணவரும் எவரேனும் புதிய நபர்கள் இந்தக் காட்சியை கண்டால் அவ்வளவுதான். கூச்சலிட்டு ஊரை கூட்டி விடுவார்கள். அப்படி எவரேனும் கூச்சலிடும்போது கண்ணிமைக்கும் நேரத்தில் சட்சட்டென்று அனைத்து உறுப்புகளும் ஒன்றாக இணைந்துவிடும். எதுவுமே அறியாதவர் போல் இருக்கும் சுவாமிகள் இந்தப் பயலுகளை எல்லாம் கண்டமேனிக்கு உதைக்கணும் . எங்கே போனாலும் தொந்தரவு செய்யறதுக்குன்னே வந்துடறாங்க என்று சொல்லுவார். மானூர் சுவாமிகளது சமாதியில் அந்த நள்ளிரவு வேளையில் தனித்தனியே கிடக்கும் உடல் உறுப்புகளைக் கண்டதும் கண்ணனுக்கும் ராமச்சந்திரனுக்கும் உடல் நடுங்கின. மளமளவென வியர்த்துக் கொட்டியது. இரண்டு பேரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். குருநாதா. உங்களைத் தொந்தரவு பண்ணிட்டோம். எங்களை மன்னிச்சிடுங்க என்று சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தனர்.
பழநியில் குதிரை வண்டிகள் நிற்கும் ரவுண்டானா அருகே ஒருநாள் அமைதியாக அமர்ந்திருந்தார் சுவாமிகள். அப்போது திடீரென அடிப்பட்டுப் போச்சு. பஸ்ஸு அடிபட்டுப் போச்சு. ஆட்களுக்கு கொஞ்சம் சேதம் என்று சுவாமிகள் சொன்னார். அங்கே இருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தனர். அலங்கியத்துக்கு அருகே பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி அதில் பதிக்கப்பட்டவர்கள் பழநி மருத்தவமனைக்கு வந்து கொண்டிருக்கும் விவரம் சுமார் ஒரு மணி நேரம் கழித்துதான் தெரிந்தது. தன்னுடைய குருநாதரான மானூர் சுவாமிகளுக்கு கொடைக்கானலில் பிரம்ம வித்யா பீடம் எனும் ஆசிரமத்தை நிறுவினார் பழநி தங்கவேல் சுவாமிகள். அவர்கள் வழிபடுவதற்காக இங்கு சுவாமிகளது வெண்கலச் சிலை ஒன்று உள்ளது. தீபாவளி நாளுக்கு முதல் நாள் தங்கவேல் சுவாமிகள் சமாதி ஆனார். தீபாவளி தினத்துக்க அடுத்த நாள் மானூர் சுவாமிகள் சமாதி ஆனார். நிமிடங்கள்தான் வேறு வேறு. மானூர் சுவாமிகளின் குருபூஜை கோதை மங்கலத்தில் உள்ள அவரது சமாதியில் மக்கள் கவுண்டர் மற்றும் பல கவுண்டர் குடும்பங்களால் சிறப்பாக நடைபெறுகிறது. அதேநாள் கொடைக்கானலில் உள்ள ஆசிரமத்தில் சுவாமிகளது குருபூஜையை தங்கவேல் சுவாமிகளது குடும்பத்தார் நடத்துகின்றனர். இதேபோல் பல இடங்களிலும் சுவாமிகளது குருபூஜை நடைபெறுவதாகச் சொல்வர்.
சமாதி ஆவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தான் சமாதியாகும் நாளை நட்சத்திரம் தேதி. நேரம் முதலான விவரங்களுடன் துல்லியமாகச் சொல்லி இருந்தார். மானூர் சுவாமிகள். அதன்படியே சமாதி ஆனார். சுவாமிகளது உத்தரவுபடி மூன்று நாட்கள் வரை அவரது உடலை அப்படியே வைத்திருந்தனர். அப்போது நாற்காலியில் உட்கார வைத்தால் உயிருடன் இருப்பவர் போலவே அமர்ந்திருப்பார். சுவாமிகளை நிற்க வைத்தால் எவரது தயவுமின்றி நின்றதது. உடலை பத்மாசனமாக அமர வைத்தால் அப்படியே இருந்தார் சுவாமிகள். மகா சமாதி ஆவதற்குச் சில நாட்களுக்கு முன் தன்னை வணங்கி வந்த அன்பர்களிடம் சுவாமிகள் சொன்னது இதுதான். எனது மறைவை எண்ணி எவரும் அழக்கூடாது. இந்த உலகுக்கு. எப்போது வேண்டுமானாலும் வருவேன். போவேன். என்னை உண்மையாக நினைத்திருங்கள் உங்களுக்கு காட்சி தருவேன். இந்த திருவாக்கினை மெய்ப்பிக்கும் வகையில் நடைபெற்ற சம்பங்கள் பல உண்டு. இதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ளும் சுவாமிகளது பக்தர்களே இதற்குச் சாட்சி.
பழநியில் இருந்து பழைய தாராபுரம் சாலையில் சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது. கோதைமங்கலம். இங்கு பிரதான சாலையில் அமைந்துள்ளது மானூர் சுவாமிகள் சமாதி.
எப்படிப் போவது?: தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் பழநியை அடைவது எளிது. பழநி பேருந்து நிலையத்திலிருந்து 3,38,23,26 உள்ளிட்ட பல நகரப் பேருந்துகள் கோதைமங்கலம் வழியாகச் செல்லும். சாமியார் மடம் என்று கேட்டு இறங்கவும். அருகிலேயே மானூர் சுவாமிகளின் சமாதி. பழநியில் இருந்து ஆட்டோ மூலம் இந்த இடத்தை அடையலாம்.
Tuesday, 10 February 2015
ஸ்ரீ மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்திருக்கும் கிராமம் பாம்புக்கோவில் சந்தை ஆகும்.இந்த கிராமம் சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர் இந்த மூன்று ஊர்களுக்கும் நடுவே அமைந்திருக்கிறது இந்த பாம்புக்கோவில் மதுரை டூ செங்கோட்டை ரயில் பாதையில் அமைந்திருக்கிறது தினமும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, காலை 11 மணி, மாலை 5 மணிக்கு பயணிகள் ரயில் புறப்படுகிறது. சுமார் 2.45 மணி நேரத்துக்குள் அது பாம்புக்கோயில்சந்தையை வந்தடைகிறது. மதுரையிலிருந்து புறப்படும் அந்த பயணிகள் ரயில் திருமங்கலம்,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்,சங்கரன்கோவில், பாம்புக்கோவில்சந்தை என்று பயணிக்கிறது.
பாம்புக்கோவில்சந்தை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் ஜீவசமாதிகளில் அளவற்ற சக்திவாய்ந்த ஜீவசமாதி இந்த மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும். இந்த ஜீவசமாதியோடு மாதவானந்த சுவாமிகளின் ஆசிரமும் அமைந்திருக்கிறது பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் தண்டவாளத்தின் வழியாக (செங்கோட்டை பாதையில்) சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு பயணிக்க வேண்டும்.பயணித்ததும், ஒரு சிறிய சாலை குறுக்கே செல்லும்.அந்த சாலையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு ஆலமரமும்,அதன் எதிரே ஒரு குளமும் தென்படும். அதுதான் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும்.
இந்த ஆசிரமத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே தங்கும் இடங்களும், அன்னதான வசதியும் இருக்கின்றன. யார் ஒவ்வொரு அமாவாசை அல்லது பவுர்ணமியன்றும் இங்கு இரவில் தங்கி இவரை தியானிக்கிறார்களோ, அவர்களுக்கு மாதவானந்த சுவாமிகளின் ஆசி கண்டிப்பாக கிடைக்கும்.
Wednesday, 4 February 2015
Mahayogi Lakshmamma Avva Samadhi

Mahayogi Lakshmamma Avva - The first time I heard this name was during one of my initial visits to Mantralayam way back in 2008. A poster with details in Telugu and a picture of a frail woman in an unusual posture looking down attracted my attention. My friends travelling with me,told me that she was a Siddhar/Avadhootha, and once someone in jealousy had chopped off her limbs while she was sleeping and found them intact the next morning as she resumed her chores. This really amazed me and the Samadhi went into my "Must Visit" list. However it was only about ten visits to Mantralayam later, that I was able to go to Adoni and visit the samadhi of Avva (grandmother) as she is affectionately known. From then on, I have gone whenever possible.
The life of Mahayogi Lakshmamma is extremely interesting and awe-inspiring. Born to Bandeppa and Mangamma, in a poverty stricken Dalit Family at Moosanapalli, a small village 7 km from Adoni, Lakshmamma roamed about the streets of the village as a young girl., stark naked, mumbling nonsensical words. People thought she was mad and advised her parents to get her married to cure her of her insanity. The parents chose a groom for her, a young lad called Mareppa and got her married. Being an Avadhootha, Lakshmamma demonstrated her spiritual status to her husband and returned to her parents house the same night. People who did not realise her spiritual powers, pelted stones at her, thinking she was mad. Those who inflicted injuries on her, found misfortune in their lives for their deeds.
Lakshmamma joined a group of people coming to the village shandy at Adoni. She settled herself beside a garbage dump in the silver market and never went back. She ate whatever was offered to her. She continued to roam around the streets, mumbling nonsensical words. People called her Thotti (Garbage Dump) Lakshmamma or Thikka (Mad) Lakshmamma.
In Adoni, Lakshmamma's grace flowed to all those who sought her sincerely. Several people gave her food and fruits knowing her spiritual state. She cured people of ailments and disease.
THANK YOU WRITE UP CAFE FOR AWARDING "THE LINK OF THE WEEK" TO THIS POST - 12/12/2011
Mahayogi Lakshmamma Avva - The first time I heard this name was during one of my initial visits to Mantralayam way back in 2008. A poster with details in Telugu and a picture of a frail woman in an unusual posture looking down attracted my attention. My friends travelling with me,told me that she was a Siddhar/Avadhootha, and once someone in jealousy had chopped off her limbs while she was sleeping and found them intact the next morning as she resumed her chores. This really amazed me and the Samadhi went into my "Must Visit" list. However it was only about ten visits to Mantralayam later, that I was able to go to Adoni and visit the samadhi of Avva (grandmother) as she is affectionately known. From then on, I have gone whenever possible.
The life of Mahayogi Lakshmamma is extremely interesting and awe-inspiring. Born to Bandeppa and Mangamma, in a poverty stricken Dalit Family at Moosanapalli, a small village 7 km from Adoni, Lakshmamma roamed about the streets of the village as a young girl., stark naked, mumbling nonsensical words. People thought she was mad and advised her parents to get her married to cure her of her insanity. The parents chose a groom for her, a young lad called Mareppa and got her married. Being an Avadhootha, Lakshmamma demonstrated her spiritual status to her husband and returned to her parents house the same night. People who did not realise her spiritual powers, pelted stones at her, thinking she was mad. Those who inflicted injuries on her, found misfortune in their lives for their deeds.
Lakshmamma joined a group of people coming to the village shandy at Adoni. She settled herself beside a garbage dump in the silver market and never went back. She ate whatever was offered to her. She continued to roam around the streets, mumbling nonsensical words. People called her Thotti (Garbage Dump) Lakshmamma or Thikka (Mad) Lakshmamma.
In Adoni, Lakshmamma's grace flowed to all those who sought her sincerely. Several people gave her food and fruits knowing her spiritual state. She cured people of ailments and disease.
- A lady called Gowramma came to her seeking cure for her husband suffering from cancer. Lakshmamma looked at her with compassion and muttered a few words. In due course, Gowramma's husband was cured. As a token of gratitude, Gowramma gave her an anna. Very soon, Gowramma became the owner of sixty acres of land. A small token given in sincere prayer yielded rich rewards for her.
- Avva gave fruits bitten by her to women longing for childbirth and they would have their prayers answered.
- Once there was a huge downpour and all the roads and drains in Adoni were flooded. People were worried about Avva as she stayed and slept in the open air next to the garbage dump, but could not venture out fearing their own safety. Once the rain subsided, they found her coming out safely from an overflowing drain, totally unaffected.
- Once as mentioned earlier in this article, Avva was once found with her limbs mutilated. But the next morning she appeared normal.
- The merchants in the silver market felt that if Lakshmamma came to their shop and asked for food, then their business will do well for that day. One day, a Jeweller in the bazaar had lost a small pouch containing exquisite and valuable diamonds. He searched his shop high and low, but could not find the bag. He was terribly upset as he had paid a handsome price to acquire the diamonds and hoped to make a good profit by selling them. Avva walked into the shop and dumped some garbage right in the middle and walked out. The jeweller was perplexed. He knew she did nothing without reason. Triggered by her action, he asked his attendants to search the garbage dump, and found the bag of diamonds intact.
- People who recognised Lakshmamma Avva's divine powers were adequately blessed. One of her ardent devotees, Late Sri Raichooti Ramaiah performed a cart festival for her even when she was alive.
- Lakshmamma Avva attained samadhi in the year 1933. Her samadhi was built at the same spot where she spent her life.
The Samadhi is built in an underground chamber and a gold idol of Lakshmamma Avva is placed over it in the Sanctum Sanctorum. The beautifully decorated and bejewelled idol is a delight to watch. What was most endearing is that the idol was decorated with a saree made from pomegranate seeds. During her life, Lakshmamma Avva had considered even clothes as a burden. It was ironical to see her gold idol with so much finery. However, the devotees were showing their deep love, gratitude and devotion to Avva by decorating her to their pleasure.
The Poojari offered harathi with devotion and gave us flowers as prasad. Unlike other temples in Andhra and Karnataka, this temple thankfully has a large board describing the life and miracles of Avva in English for the benefit of all visitors.
A beautiful Silver Utsava Moorthy is placed in a seperate shrine as we circumambulate the sanctum sanctorum. This silver moorthy of Avva is taken out in procession in a silver cart every year, a ritual that had begun while she was alive.
Even today, several hundreds of devotees throng her samadhi every day, seeking blessings and offering gratitude for prayers answered. The environment in the temple is calm and soothing amidst the glaring marble tiles. Some people also go into the underground samadhi and meditate in peace in front of Avva.
How to reach here:
Adoni is located at 15.63 N 77.28 E. It is a commercial town in Kurnool District of Andhra Pradesh. It is about 300 kms from Hyderabad and 494 kms from Chennai. From Chennai, one can reach Adoni easily by trains that ply towards Mumbai. There are also daily trains from Hyderabad, Bengaluru, Kanyakumari, Mumbai, Gulburga, Ahmedabad and Tirupathi. State Transport Buses connect Adoni from Hyderabad, Bengaluru, Kurnool, Anantapur, Vijayawada, Bellary, Tirupathi and Mysore.
Nearest Airport is Hyderabad and nearest domestic airport is Bellary at 68 km.
Adoni is an hour's drive from Mantralayam. So if you are on a pilgrimage to Mantralayam, it would be easy to visit here. There are a number of buses available from Mantralayam to Adoni. Private jeeps charge approximately Rs.1300 for a two way trip.
சுப்பையா சுவாமிகள்
திருநெல்வேலி அருகில் உள்ள கடையனோடை என்னும் கிராமத்தில்வில்லிமுத்துக் கோனார்-நாராயணவடிவு தம்பதியருக்கு 23.11.1908 ஆம் ஆண்டுபிறந்தவர் மகான் சுப்பையா சுவாமிகள். ஒரே ஆண் வாரிசான இவர், படிப்பில்அதிக ஆர்வம் கொண்டவராகவும், அதே நேரத்தில் ஆன்மீக நாட்டமுடையவராகவும் இருந்தார். அப்போது இருந்தே நண்பர்களுடன் சேர்ந்து பல கோயில்கள், சமாதிகளை சுற்றி வருவார்.
ஐந்தாம் வகுப்பு வரை கடையனோடையில் படித்த இவர், இப்படி கோயில், சமாதி என்று சுற்றி திரிந்ததால் அவரது பெற்றோர், மூத்த மகள் இருக்கும் குலசேகரபட்டினத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள பெரிய பள்ளியில் சேர்ந்தார்.
ஆனால் அங்கு சுப்பையா சுவாமிக்கு நண்பர்கள் யாரும் கிடைக்கவில்லை. வார விடுமுறை நாட்களில் அருகில் உள்ள திருச்செந்தூர் சென்று அங்குள்ள வள்ளிக்குகை, மூவர் சமாதி போன்ற இடங்களில் தனிமையில் அமர்ந்து கொள்வார். அப்போது அங்கு வரும் சாதுக்களுடன் சித்த வைத்தியம், யோகம் போன்றவற்றை கற்றுக் கொண்டார். பின்னர் மூலிகை மருந்துகள் தயாரித்து பலருக்கு சிகிச்சை செய்தார். 7ஆம் வகுப்பு வரை குலசேகரபட்டினத்தில் படித்த அவர், மீண்டும்கடையனோடைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றனர். பின்னர் ஆழ்வார்திருநகரிலுள்ள இந்து நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பும், திருவைகுண்டம் காரனேஷன் உயர் நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பும், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். இதையடுத்து மதுரைக்கு சென்று பி.ஏ(hons) படித்து முடித்தார்.
ஆனால் அங்கு சுப்பையா சுவாமிக்கு நண்பர்கள் யாரும் கிடைக்கவில்லை. வார விடுமுறை நாட்களில் அருகில் உள்ள திருச்செந்தூர் சென்று அங்குள்ள வள்ளிக்குகை, மூவர் சமாதி போன்ற இடங்களில் தனிமையில் அமர்ந்து கொள்வார். அப்போது அங்கு வரும் சாதுக்களுடன் சித்த வைத்தியம், யோகம் போன்றவற்றை கற்றுக் கொண்டார். பின்னர் மூலிகை மருந்துகள் தயாரித்து பலருக்கு சிகிச்சை செய்தார். 7ஆம் வகுப்பு வரை குலசேகரபட்டினத்தில் படித்த அவர், மீண்டும்கடையனோடைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றனர். பின்னர் ஆழ்வார்திருநகரிலுள்ள இந்து நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பும், திருவைகுண்டம் காரனேஷன் உயர் நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பும், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். இதையடுத்து மதுரைக்கு சென்று பி.ஏ(hons) படித்து முடித்தார்.
கல்லூரி பேராசிரியராக இருந்த கல்யாணம் ராமசாமி என்பவருடன் தங்கி சித்துகளிலும், மருத்துவத்திலும், ஆராய்ச்சியிலும் பயிற்சி பெற்றார். மேலும் மூலிகை, வைத்தியம், உடற்கூறு, சித்துகள், உறங்காமை, உண்ணாமை போன்ற பயிற்சி பெற்றார். ஆனால் அதில் நாட்டமில்லை.
தன் நிலங்களை விற்று ஏழை அன்னதானம் வழங்கினார். பின்னர் கணபதிமூலமந்திரம், ஸ்ரீராம ஜெயம் போன்ற மந்திரங்களை பலருக்கு உபதேசித்தார்.
மீண்டும் குற்றாலம், வள்ளிக் குகை, திருச்செந்தூர் சென்றார். அதுவும் சரிப்படவில்லை. பின்னர் திருப்பதி சென்றார். பிறகு விருத்தாசலம் சென்றார். அங்கிருந்து வடலூரை அடைந்தார். அங்கு சில மாதங்கள் தங்கினார். பின்னர் அங்கிருந்து திருக்கழுக்குன்றம் வந்தடைந்தார். சுப்பையா சுவாமிகள் கடைசியாகப்பேசியது திருக்கழுக் குன்ற மலையிலமர்ந்த ஓராண்டு வரைதான் (1951)
1951ஆம் ஆண்டு அங்கு வந்த சுப்பையா சுவாமிகள், அங்குள்ள மலையின் மீது அமர்ந்து யோக பயிற்சி செய்வார். அப்போது அவருக்கு பால், பழம் கொடுத்து உபசரித்தனர். இரவில் விஷ ஜந்துக்கள், புலி, சிறுத்தை எல்லாம் நடமாடும் இடத்தில் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். சுவாமி புன்முறுவலுடன் இரண்டொரு வார்த்ததை கூறி அவர்களை அனுப்பி வைத்தார். பின்னர் மரணத்திற்கு மூலங்களை நசிக்கும் உபாயத்துடன் தவம் மேற்கொண்டதால் பேசுவதைநிறுத்திக் கொண்டார். தனக்கு முன்பாக திருவருட்பா என்ற நூலை மட்டும் எப்போதும் வைத்திருப்பார். பின்னர் அங்குள்ள மக்களால் கடையனோடை சுவாமி என்றும், பி.ஏ. சுவாமி என்றும், திருக்கழுக்குன்றம் சுவாமி என்றும் அழைக்கப்பட்டார்
சுப்பையா சுவாமிகள் கடையனோடையில் அவதாரம் செய்தது முதல் திருக்கழுக்குன்றத்தில் முக்தியடைந்தது வரை அவருக்கு இவ்வுலக உயிர்கள்,சடமாயிருந்த கோயில்கள், சமாதிகள் முதலியவற்றுடன் நிறையத் தொடர்புகள் உண்டு. எவ்வுயிருக்கும் தீங்கு நினைக்காதவனே வைஷ்ணவன் என்பர். அவ்வழி வந்தவர் எவ்வுயிருக்கும் எவராலும் தீங்கு வரக்கூடாது என எண்ணுபவன் சன்மார்க்கி என வைஷ்ணவத்தில் இருந்து சம்மார்க்கம் வரை அவர் வந்த பாதையை பார்க்கும் போது அவரின் உயிர் எத்தகைய உறவை ஒவ்வொன்றிலும் நிலை நாட்டியிருக்கிறது எனப் பார்த்தால் தெளிவு ஏற்படும்.
1961 ம் ஆண்டு அவர் தன்னுடன் தொடர்புடைய அன்பர்களிடம் தனது உடலில்
நாடி அடங்கும் நேரத்தை குறிப்பிட்டு இருந்தார்.அப்போது அவர் திருகழ்குகுன்ர மலை குகையில் இருந்தார். நாடி அடங்கியவுடன் அவரது உடல் கீழே கொண்டுவரப்பட்டது. அவர் விருப்பப்படி சமாதி கட்டப்பட்டு அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. மேலெ திறக்கும் வகையில் பலகைக் கல் வைத்து மூடப்பட்டது. 40 நாட்களுக்கு பூஜை செய்யப் பட்டது. பின்னர் அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் முன்னிலையில் சமாதியின் மூடி திறக்கப் பட்டது.
அவரது உடல் கெடாமல் அமர்ந்த நிலையில் அப்படியே இருக்கக் கண்டனர் மக்கள் அனைவருக்கும் ஆச்சரியம். THE BODY IS INTACT என்று அரசுக்கு அறிக்கை அனுப்பப் பட்டது.
சமாதியின் மேல் மூடி மூடப்பட்டது. மீண்டும் பத்து மாதங்களுக்கு பூசை செய்யப்பட்டது.அதன் பிறகு மீண்டும் சமாதியின் மூடி திறக்கப் பட்டது. உடல் கெடவில்லை. பின்னர் சமாதியின்மீது கட்டிடம் கட்டப் பட்டுள்ளது.
சமாதியில் தினசரி அன்னதானம் நடக்கிறது.தியான மண்டபம் கட்டப் பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டு மலர் வெளியிடப்பட்டுள்ளது.
thanks to:http://shivayamjeeva.blogspot.in
Subscribe to:
Posts (Atom)